இடியாப்ப சிக்கலில் கீர்த்தி சுரேஷ்!



வேறெப்படி தலைப்பு வைக்க?!
தமிழில் ‘நடிகையர் திலகம்’ என டப் ஆன தெலுங்கு ‘மகாநடி’ ஆந்திராவில் ப்ளாக்பஸ்டர். தொண்டு கிழவர்களையும் திரையரங்குக்கு வரவைத்த பெருமை இப்படத்துக்கு உண்டு.நடிகை சாவித்ரியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சாவித்ரியாகவே வாழ்ந்திருந்தார். போதாதா? எட்டு திசையில் இருந்தும் பாராட்டு மழை.

ஆனால்... இந்த வெற்றியே கீர்த்தி சுரேஷுக்கு மைனஸ் ஆகிவிட்டது என்கிறார்கள்.யெஸ். டாப் மோஸ்ட் தெலுங்கு நடிகர்கள் யாருமே இப்போது கீர்த்தியை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்கிறார்களாம்! க்ளாமராக இனி அவர் நடிக்க மாட்டார் என நடிகர்கள் நினைப்பதுதான் காரணம்.ஒரு வெற்றியே மைனஸ் ஆகிவிட்டது. இதுதான் சினிமா!