ட்ரீட்!



‘வெறும் பொங்கல் அல்ல... மருத்துவப் பொங்கல்’ என்று ஆணியடித்தது போல பதிவு செய்த சுப்புலட்சுமியின் கட்டுரையும் மணியம் செல்வத்தின் ஓவியங்களும் அற்புதம்.
- மனோகர், மேட்டுப்பாளையம்; ரா.புனிதவதி, பொள்ளாச்சி; அ.முரளிதரன், மதுரை; மல்லிகா அன்பழகன், சென்னை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; ப.மூர்த்தி, பெங்களூரு; நரசிம்மராஜ், மதுரை; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

‘பேட்ட’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பேட்டி அமேஸிங்.
- மல்லிகா அன்பழகன், சென்னை; மீனாட்சி, திருமுல்லைவாயல்; ப.மூர்த்தி, பெங்களூரு; த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஜி.பிரேமா, சென்னை; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; மயிலை.கோபி, சென்னை; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; ஜி.பிரேமா, சென்னை; அ.முரளிதரன், மதுரை; கைவல்லியம், மானகிரி.

ஒளிப்பதிவாளர் திருவின் பேட்டி அடிக் கரும்பாகத் தித்தித்தது. ஸ்டில்ஸ் ஒவ்வொன்றும் ஃபெஸ்டிவல் ட்ரீட்.
- அ.முரளிதரன், மதுரை; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; மல்லிகா அன்பழகன், சென்னை; யாழினி பர்வதம், சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; ஜெயச்சந்திரபாபு, சென்னை; சிவக்குமார், சீர்காழி; மயிலை.கோபி, சென்னை; ஆர்.கே.லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.

‘கபடி வீரர்களை உருவாக்கும் கிராமம்’ - ஆச்சர்ய தகவல். இளைய தலைமுறையை பாரம்பரிய கபடிக்குத் திருப்பும் அளத்தங்கரை கிராமத்துக்கு ஒரு ராயல் சல்யூட்.
- பிரேமா குரு, சென்னை; மனோகர், மேட்டுப்பாளையம்; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; ஆ. சீனிவாசன், எஸ்.வி.நகரம்.இயக்குநர் ஹரியின் ‘லைஃப் டிராவல்’ அனுபவத்தின் உச்சம். அவரது படத்தைப் போலவே வேகம்.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; மல்லிகா அன்பழகன், சென்னை; நரசிம்மராஜ், மதுரை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஜி. பிரேமா, சென்னை.

அரை செஞ்சுரி வயதில் அர்னால்டு போல உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து ‘மிஸ்டர் வேர்ல்டு’ போட்டியில் ஜொலித்த பாடி பில்டர் அரசுக்குப் பாராட்டுகள்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; அ.யாழினி பர்வதம், சென்னை.

‘பிளாஸ்டிக் டைல்ஸ்’ பற்றிய விழிப்புணர்வு கட்டுரை படுஜோர்.
- மகேஸ்வரி, பொள்ளாச்சி; மல்லிகா அன்பழகன், சென்னை.

‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்பதற்கு நல்ல உதாரணம் சீர்காழி சிவசிதம்பரத்தின் பேட்டி.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; ப.மூர்த்தி, பெங்களூரு; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

ரீடர்ஸ் வாய்ஸ்