ஸ்ரீதேவி மகள்



அதே... அதே... அதே! நம்ம ‘மயிலு’ ஸ்ரீதேவி - போனி கபூர் மகள் ஜான்விதான் இவர்!பார்ன் வித் சில்வர் ஸ்பூன் ஆக ஜனித்து தவழ்ந்து நடந்து வளர்ந்து இப்படி ஆளாகி நிற்கிறார்!உண்மையில் தன் மகளை நன்றாகப் படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்து செட்டிலாக்க வேண்டும் என்றுதான் ஸ்ரீதேவி விரும்பினார்.
குறிப்பாக ஜான்வியை நடிகையாக்க ஒருபோதும் அவர் விரும்பியதில்லை.என்ன செய்ய... சிம் கார்ட் ஒன்று போட்டால் சிக்னல் வேறொன்றா கிடைக்கும்?! நடிக்கும் ஆசை ஜான்விக்கு ஊற்றெடுத்தது. ஸ்ரீதேவி சொல்லிப் பார்த்தார். பிடிவாதமாக ஜான்வி நின்றார்.

‘ரைட்... புரொசீட்...’ என ஸ்ரீதேவி பச்சைக் கொடி காட்டிவிட்டார். முறைப்படி நடிப்புப் பயிற்சிப் பெற்று ‘தடாக்’ படத்தில் சென்ற ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார். மராத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘சய்ராட்’ படத்தின் அஃபிஷியல் ரீமேக்தான் ‘தடாக்’ இந்திப் படம்.
கிளாமரை விட நடிப்பில் ஜான்வி இதில் ஸ்கோர் செய்திருந்தார்.

பிறகென்ன... அழகும் திறமையும் இருக்கும் இடத்தில் சான்ஸ் குவிவது இயற்கைதானே..?ஜான்வியை தயாரிப்பாளர்கள் மொய்த்து வருகிறார்கள்.ஆனால், நிதானமாக படங்களை தேர்வு செய்கிறார் ஜான்வி.ஸ்ரீதேவியின் ஆன்மா நிச்சயம் மகிழ்ச்சியடையும்!     
     
காம்ஸ் பாப்பா