வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான டிசைன் டிப்ஸ்



பதவி பாதி... உடைகளின் வண்ணங்கள் மீதி!

பெண்களுக்கான ரெடிமேட் உடைகளை விற்கும் கடைகளுக்குச் சென்ற அனைவரது பார்வையும் ஷோகேசில் இருக்கும் பொம்மைகள் மீது படியும்.
பொதுவாக பச்சை, சிவப்பு, பிங்க் நிற உடைகளையே அந்த பொம்மைகள் அணிந்திருக்கும்.இதுதான் இத்தனை நாட்களாக அரங்கேறி வந்த விஷயம்.இப்போது..? இவை குறைந்திருக்கிறது பாஸ்! யெஸ். ஊதா, மஞ்சள், வெள்ளை, கருப்பு நிற உடைகளையே அதிகமாக அந்த பொம்மைகள் அணிந்திருக்கின்றன!என்ன காரணம்?

சிம்பிள். தன் பர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் நிறங்களையே இன்று பெண்கள் தேர்வு செய்கிறார்கள்! அதாவது இத்தனை நாட்களாக ஆண்களுக்குப் பிடித்த, ஆண்களைக் கவருவதற்கான வண்ணங்களை செலக்ட் செய்தவர்கள் இப்போது அதே ஆண்களுக்கு நிகரான, அதேசமயம் தங்கள் இன்னர் பர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் கலர்ஸை தேர்வு செய்கிறார்கள்.

படிப்பு, வேலை... என சகலத்திலும் ஆண்களைச் சார்ந்து இன்று பெண்கள் இல்லை அல்லவா..? அதன் எக்ஸ்டென்ஷன்தான் இந்த கலர் சாய்ஸ்! இந்த உண்மையைத்தான் எடுத்ததுமே போட்டு உடைக்கிறார் டிசைனர் சரத் சுந்தர்.‘‘‘தி லைன்  தி இன்செப்ஷன்’ - இதுதான் என் கான்செப்ட். அதாவது பெண்கள் எப்பவும் பயன்படுத்தற மெட்டீரியல், டிசைன், கான்செப்ட்டை எல்லாம் கொஞ்சம் மேன்லி டோன்ல கொடுக்க நினைச்சேன்! அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு...’’ உற்சாகத்துடன் சொல்லும் சரத் சுந்தர், உளவியல் ரீதியாகவும் இதற்கான காரணங்களை அடுக்குகிறார்.

‘‘சில வேலைகள், பதவிகள்ல இருக்கிற பெண்களால பிங்க், கிளிப்பச்சை, கேண்டி கலர்ஸ் எல்லாம் பயன்படுத்தவே முடியாது. அது ஆக்வோர்ட் ஆகத் தெரியும். இன்றைக்கு பல பெண்கள் பல நிறுவனங்கள்ல உயர் பொறுப்புகள்ல இருக்காங்க. சக்சஸ்ஃபுல்லா சொந்த பிசினஸும் பண்றாங்க.இதுமாதிரியான பெண்களோட பாடி லேங்வேஜ் இயல்பாவே தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும். அதை இன்னும் கெத்தா உடைகள் வழியே வலிமையாக்குவதுதான் இந்த தி லைன் கான்செப்ட்.

உத்துப் பார்த்தீங்கனா என் கான்செப்ட் உடைகளோட முனைகள் ஷார்ப்பா இருக்கும். தேவையில்லாத வளைவுகள், நெளிவுகள் இல்லாம ஸ்டிரைட் முனைகள்!பெண்கள் எங்கயும் வளைந்து கொடுக்க மாட்டாங்க என்பதை இது சிம்பாலிக்கா உணர்த்துது! இது மாதிரியான ஷார்ப்னஸ் முனைகளை ஆண்களோட ஷர்ட்ஸ், ஜிப்பாக்கள்ல பார்க்கலாம். இந்த மேன்லி ஸ்டைலைத்தான் அப்படியே என் கான்செப்ட்டுல கொண்டு வந்தேன்...’’ என்று சொல்லும் சரத் சுந்தர், மேன்லி அல்லது ஆன்டிக் டோன் கொடுக்க சிறப்பான மெட்டீரியல் லினென்தான் என்கிறார்.

‘‘இன்றைக்கு பலருடைய சாய்ஸ் லினென், காட்டன் மாதிரியான ஆர்கானிக் துணிகள்தான். சூழலுக்கு ஏற்ப உடைகள் அணியணும் என்கிற எண்ணம் மக்கள்கிட்ட அதிகரிச்சிருக்கு. இதுக்கான நல்ல தொடக்கம் லினென். ஆனா, லினென் அணிஞ்ச ஒரு மணி நேரத்துல அங்கங்க சுருங்க ஆரம்பிச்சுடும். அதனாலேயே பலரும் இதை அணியத் தயங்கறாங்க.

உண்மைல சில துணிகள்ல ஏற்படும் சுருக்கங்கள் இயல்பான அழகைக் கொடுக்கும்! லினென் ராயல் சுருங்கினாலும் சிம்பிள் லுக் கொடுக்கும். இப்போதைக்கும் நம்ம ஃபேஷன் டிரெண்ட்ஸ்ல வெறுமனே சேலைகளா அல்லது துப்பட்டாக்களா அதிக பட்சம் சாதாரண குர்தாக்களா மட்டுமே வலம் வருகிற இந்த லினென் துணிகளுக்கு புது ஸ்டைல் புது உணர்வுகள் கொடுக்க நினைச்சேன்.

அப்படி உருவானதுதான் இந்த தி லைன் கான்செப்ட்! லினென் மெட்டீரியல்கள் கூட பட்டு, ஆர்கான்ஸா மாதிரியான மெட்டீரியல்களை இணைச்சு ஃபியூஷன் கான்செப்ட்டும் கொண்டு வந்திருக்கேன். கேஷுவல்வேர்களா இருக்கும் லினென் உடைகளை பார்ட்டிவேர் அல்லது மாலை நேர விருந்துக்கான உடைகளாவும் மாத்தியிருக்கோம்!

உடல் பாகங்களை அதிகமா காமிச்சு அதுல மாடர்ன் லுக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதீத கிளாமர் மாடர்ன் ஆகாது! நம்ம ஊர் பெண்களும் இதை விரும்பறதில்லை, பயன்படுத்துவதும் இல்லை. என் உடைகள்ல நீங்க ஸ்லீவ்லெஸ் கூட பார்ப்பது கஷ்டம்! இனி எதிர்கால ஃபேஷன் சிம்பிளான ராயல் தன்மையை நோக்கியே போகும். அதுக்கு என்னுடைய இந்த ‘தி இன்செப்ஷன்’ ஒரு ஆரம்பமா இருக்கும்னு நம்பறேன். ஆக்சஸரிஸ்களையும் சிம்பிளா தேர்வு செய்தா கண்டிப்பா கெத்து காட்டலாம்!’’ அடித்துச் சொல்கிறார் சரத் சுந்தர்!  

ஷாலினி நியூட்டன்