கவர்னர் உரை!



*தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மாநிலங்களின்  சட்டசபை கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் நிகழ்த்தப்படும் கவர்னர் உரையை கவனித்தபோது அறிந்தவை இவை:

*கர்நாடகா ஆளுநர் பிற மாநிலங்களில் உள்ளது போல் ஆங்கிலத்தில்  அல்லாது இந்தியில் உரையாற்றுகிறார். ‘ஜெய் ஹிந்த்’, ‘ஜெய் கர்நாடக்’ என்று
முடிக்கிறார்.

*கோவா ஆளுநர் மூன்று நிமிடம் பேசினார். உடம்பு சரியில்லை என்பதால் உரையை சமர்ப்பிக்கிறேன் என்று table செய்து விட்டார். ஆனால், 3 வரிக்கு ‘ஓம் சாந்தி’ ஸ்லோகம் சொல்லி ‘ஜெய் ஹிந்த்’ என்றுதான் முடித்தார்.

*ஆந்திர ஆளுநர் ‘ஜெய் ஹிந்த்’ என்று முடித்தார்.

*கேரளா ஆளுநர் ‘லோக சமஸ்த சுகினோ பவந்து’, ‘ஜெய் ஹிந்த்’ என்று முடித்தார்.

*தெலுங்கானா ஆளுநர் தமிழிசை திருக்குறள் ஒன்றை சொல்லி ‘ஜெய் ஹிந்த் ஜெய் தெலுங்கானா’ என்று முடித்தார்.

*தமிழக ஆளுநராக பன்வாரி லால் புரோஹித் 2017ம் ஆண்டு பதவியேற்றார்.
அவரது கடந்த நான்கு வருட உரையின் இறுதி வாசகங்கள்:
2018 - நன்றி, வணக்கம். ஜெய் ஹிந்த். அனைவர்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
2019 - நன்றி, வணக்கம். ஜெய் ஹிந்த், ஜெய் தமிழ்நாடு
2020 - நன்றி, வணக்கம். ஜெய் ஹிந்த்
2021 - நன்றி, வணக்கம்.                     

ஜான்சி