Data corner



*உலகளவில் ஆண்டுக்கு 1 முதல் 5 டிரில்லியன் பிளாஸ்டிக் பைகள் நுகரப்படுகின்றன.

*ஐநா வெளியிட்டுள்ள சர்வதேச சைபர் பாதுகாப்பு அட்டவணையில் (குறியீடு) 47வது இடத்தில் இருந்து 10ம் இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இந்தப் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 33வது இடத்திலும் பாகிஸ்தான் 79வது இடத்திலும் உள்ளன.

*பிளாட்பார டிக்கெட் விற்பனையை நிறுத்தி, பயணிகளை அனுமதிக்க மறுத்ததால் அதன் மூலம் வரும் ரயில்வேயின் வருமானம் 2020 -21 நிதி ஆண்டில் 94% சரிந்துள்ளது.

*2019 - 2020ம் ஆண்டில் 18 - 23 வயது வரையிலான இளைய சமுதாயத்தின் மக்கள் தொகை தமிழ்நாட்டில் 68.5 லட்சம். இவர்களில் 35.2 லட்சம் பேர் உயர்கல்விக்கு சென்றுள்ளனர்.

*வாழைப்பழ விளைச்சலில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள இந்தியா, கடந்த நிதிஆண்டில் (2020 - 2021) ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாதங்களில் 1,91,000 டன் வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்துள்ளது. அதன் மதிப்பு ரூ.619 கோடி.

*கொரோனா வருகைக்கு முன் உலகின் தடுப்பூசி தேவைகளில் 60% மேல்  வழங்கியது இந்தியா. மொத்தம் 21 தடுப்பூசி நிறுவனங்கள் இங்கு உள்ளன. இவற்றின் மூலம் நம்மால் ஆண்டிற்கு 8 பில்லியன் (800 கோடி) டோஸ்கள் தயாரிக்க இயலும் என்று CDSCO சென்ட்ரல் டிரக்ஸ்,ஸ்டாண்டர்ட் கண்ட்ரோல் ஆர்கனைசேஷன் கூறுகிறது.

சுடர்க்கொடி