பெண்கள் வேலைக்கு செல்வது குறைந்து இருக்கிறதா?

ஒரு செய்தியும் இரு கோணங்களும்!

1980, தொண்ணூறுகளுடன் ஒப்பிடும்போது தற்சமயம் இந்தியாவில் பெண் கல்வி சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிலையங்களில் குறைவான பெண்களே பட்டப்படிப்பு வரை படிக்க முடிந்தது. அவர்களுள் கணிசமான சதவீதப் பெண்கள் ஏதேனுமொரு பணியில் சேர்ந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகும் பொருளாதார பாரத்தைச் சுமக்கத் தயாராக இருந்தார்கள். கீழ் மத்தியதர வாழ்வை மேம்படுத்திக்கொள்ளவும் ஆணுக்குப் பக்கபலமாகத் தோள் கொடுக்கவும் கூட்டு உழைப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இந்நிலை தற்போது இல்லை.

தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப் பெண்களின் மனநிலை மாறிவிட்டது. அவர்கள் கல்வி கற்க விரும்பும் அளவுக்கு வேலைக்குப் போவதற்குத் தயாராக இல்லை. 1990ல் முப்பது விழுக்காடாக இருந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2019ல் இருபது விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இருபது இலட்சம் பெண்கள் பணியை விட்டு விலகியிருக்கிறார்கள். இவர்கள் பணியை விட்டு நீக்கப்பட்டவர்கள் அல்ல.

தரவுகளை எடுத்துப் பார்க்கும்போது இவர்களுள் பெரும்பாலானவர்கள் 25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்பதை அறிய முடியும். நூறாண்டுகளுக்கு முன் பெண்கள் போராடியதே கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் வாக்குரிமைக்காகவும்தான். அந்த உரிமைகள் கிடைத்தபின் பெருவாரியான இந்தியப் பெண்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியது. ‘படிப்பேன், ஆனா வேலைக்குப் போகணும்னு கட்டாயப்படுத்தக் கூடாது’ என்றோ ‘கல்யாணத்துக்கு அப்புறம் வேலையை விட்ருவேன்’ என்றோ நிறைய பெண்கள் நிபந்தனை விதிப்பதை மறுக்க முடியுமா?

‘வேலைக்கு அனுப்பாம இருக்கறதே ஆண்கள்தான்’ என்று இதற்குக் காரணமாக வழக்கம்போல தந்தையையோ கணவனையோ குற்றவாளியாக்கித் தப்பித்துக்கொள்ள முயல வேண்டாம். அப்படிச் சொல்வீர்களேயானால் கல்வி வழங்கிய புத்தியும் சுதந்திரமும் கொண்டு நீங்கள் அறுத்தெறிந்த தளைகள் எத்தனை என்பதையே எதிர்க்கேள்வியாக முன்வைக்க முடியும்.

நவீன பெண்கள் பலரும் சொகுசாக வாழவே பிரியப்படுகிறார்கள். அதற்கேற்ற வசதியான சூழ்நிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எல்லாம் தங்கள் மடியில் வந்து விழ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஒத்துவராத விதிகளை ஏதேதோ சால்ஜாப்புகள், முறையிடல்கள், மன்றாடல்கள், தந்திரங்கள் வழியாக வளைத்துக்கொண்டு அடுத்தவர் முதுகில் சவாரி செய்கிறார்கள். சமையலறையை ஒழிப்போம் என்பதெல்லாம் இன்னும் கொஞ்சம் வளைத்துப் பார்த்தால் என்ன என்கிற பேராசையின் சப்புக்கொட்டல்தான்.

உழைப்புப் பிரிவினை ஒரு பக்கம். ஆனால், dataவில் வராத ஒரு விசயம், ஆண் குடும்பத் தலைவனாக கருதப் பட்டாலும், பெண்ணின் வருமானத்தை நம்பி இருக்கும் குடும்பங்கள் மிக மிக அதிகரித்திருக்கின்றன என்பது. கல்விக் கடன், அவசரக் கடன், திருமணக் கடன், மருத்துவக் கடன் எல்லாம் பெண்ணை நம்பித்தான். நீங்கள் ground levelல் என்ன நடக்கிறது எனத் தெரிந்த ஆளாக இருந்தால், கிராமம், நகரம் என அனைத்துப் பகுதிகளிலும் களப் பணி செய்கிறவராக இருந்தால் இதை விளக்கத் தேவை இல்லை.

20 முதல் 50 வரை உள்ள ஆண்கள் குடி நோயாளிகளாய் இருக்கிறார்கள். Their productivity is becoming low. இது  காலையிலிருந்து குடிப்பது. குடிக்கவில்லை எனில் கை ,கால் நடுங்கும். Alcohol dependence has pushed women to work more.நடுத்தர வர்க்கத்திலும் மண விலக்கு பெறும் என்ணிக்கை அதிகரித்து உள்ளது.

மிகப் பெரும்பாலும் குழந்தைகள் பெண்களின் பொறுப்பே. சம்பாதிப்பதும் அவள் பொறுப்பே.அப்புறம் படித்த பெண்களுக்கு வேலையில் நீடிக்க முடியாமல் குழந்தைப் பொறுப்பு வரும். வண்டி ஓட்டுவோம் என நினைக்கவே செய்யாத பெண்கள் ஒரு நாளுக்கு எத்தனை ட்ரிப் அடிக்கிறார்கள் எனப் பாருங்கள்.

படித்த பெண்கள் work forceல் நீடிக்க வேண்டுமெனில் எட்டு மணி நேர வேலை வேண்டும், குழந்தை பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டும். இரு பக்க உதவி இல்லாமல் இங்கே ஒரு பெரிய கூட்டமே உண்டு. அந்த படித்த பெண்கள் formal sector இ லிருந்து விலகி informal வேலைகளைச் செய்கிறார்கள். Data entry, Marketing, Translation, Accounting, Tuition, Online teaching, Part time journalist என.வீட்டு வேலை (reproductive labour, unpaid care work) பகிரப் பட வேண்டும்; மதிப்பிடப் பட வேண்டும்; சமூக பாதுகாப்பிற்குள் வர வேண்டும்.l

ஆம்... குறைந்திருக்கிறது

1980, தொண்ணூறுகளுடன் ஒப்பிடும்போது தற்சமயம் இந்தியாவில் பெண் கல்வி சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிலையங்களில் குறைவான பெண்களே பட்டப்படிப்பு வரை படிக்க முடிந்தது. அவர்களுள் கணிசமான சதவீதப் பெண்கள் ஏதேனுமொரு பணியில் சேர்ந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகும் பொருளாதார பாரத்தைச் சுமக்கத் தயாராக இருந்தார்கள். கீழ் மத்தியதர வாழ்வை மேம்படுத்திக்கொள்ளவும் ஆணுக்குப் பக்கபலமாகத் தோள் கொடுக்கவும் கூட்டு உழைப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இந்நிலை தற்போது இல்லை.

தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப் பெண்களின் மனநிலை மாறிவிட்டது. அவர்கள் கல்வி கற்க விரும்பும் அளவுக்கு வேலைக்குப் போவதற்குத் தயாராக இல்லை. 1990ல் முப்பது விழுக்காடாக இருந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2019ல் இருபது விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இருபது இலட்சம் பெண்கள் பணியை விட்டு விலகியிருக்கிறார்கள். இவர்கள் பணியை விட்டு நீக்கப்பட்டவர்கள் அல்ல.

தரவுகளை எடுத்துப் பார்க்கும்போது இவர்களுள் பெரும்பாலானவர்கள் 25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்பதை அறிய முடியும். நூறாண்டுகளுக்கு முன் பெண்கள் போராடியதே கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் வாக்குரிமைக்காகவும்தான். அந்த உரிமைகள் கிடைத்தபின் பெருவாரியான இந்தியப் பெண்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியது. ‘படிப்பேன், ஆனா வேலைக்குப் போகணும்னு கட்டாயப்படுத்தக் கூடாது’ என்றோ ‘கல்யாணத்துக்கு அப்புறம் வேலையை விட்ருவேன்’ என்றோ நிறைய பெண்கள் நிபந்தனை விதிப்பதை மறுக்க முடியுமா?

‘வேலைக்கு அனுப்பாம இருக்கறதே ஆண்கள்தான்’ என்று இதற்குக் காரணமாக வழக்கம்போல தந்தையையோ கணவனையோ குற்றவாளியாக்கித் தப்பித்துக்கொள்ள முயல வேண்டாம். அப்படிச் சொல்வீர்களேயானால் கல்வி வழங்கிய புத்தியும் சுதந்திரமும் கொண்டு நீங்கள் அறுத்தெறிந்த தளைகள் எத்தனை என்பதையே எதிர்க்கேள்வியாக முன்வைக்க முடியும்.நவீன பெண்கள் பலரும் சொகுசாக வாழவே பிரியப்படுகிறார்கள்.

அதற்கேற்ற வசதியான சூழ்நிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எல்லாம் தங்கள் மடியில் வந்து விழ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஒத்துவராத விதிகளை ஏதேதோ சால்ஜாப்புகள், முறையிடல்கள், மன்றாடல்கள், தந்திரங்கள் வழியாக வளைத்துக்கொண்டு அடுத்தவர் முதுகில் சவாரி செய்கிறார்கள். சமையலறையை ஒழிப்போம் என்பதெல்லாம் இன்னும் கொஞ்சம் வளைத்துப் பார்த்தால் என்ன என்கிற பேராசையின் சப்புக்கொட்டல்தான்.

கோகுல் பிரசாத்

இல்லை... அதிகரித்திருக்கிறது

உழைப்புப் பிரிவினை ஒரு பக்கம். ஆனால், dataவில் வராத ஒரு விசயம், ஆண் குடும்பத் தலைவனாக கருதப் பட்டாலும், பெண்ணின் வருமானத்தை நம்பி இருக்கும் குடும்பங்கள் மிக மிக அதிகரித்திருக்கின்றன என்பது. கல்விக் கடன், அவசரக் கடன், திருமணக் கடன், மருத்துவக் கடன் எல்லாம் பெண்ணை நம்பித்தான். நீங்கள் ground levelல் என்ன நடக்கிறது எனத் தெரிந்த ஆளாக இருந்தால், கிராமம், நகரம் என அனைத்துப் பகுதிகளிலும் களப் பணி செய்கிறவராக இருந்தால் இதை விளக்கத் தேவை இல்லை.

20 முதல் 50 வரை உள்ள ஆண்கள் குடி நோயாளிகளாய் இருக்கிறார்கள். Their productivity is becoming low. இது  காலையிலிருந்து குடிப்பது. குடிக்கவில்லை எனில் கை ,கால் நடுங்கும். Alcohol dependence has pushed women to work more.நடுத்தர வர்க்கத்திலும் மண விலக்கு பெறும் என்ணிக்கை அதிகரித்து உள்ளது.மிகப் பெரும்பாலும் குழந்தைகள் பெண்களின் பொறுப்பே. சம்பாதிப்பதும் அவள் பொறுப்பே.

அப்புறம் படித்த பெண்களுக்கு வேலையில் நீடிக்க முடியாமல் குழந்தைப் பொறுப்பு வரும். வண்டி ஓட்டுவோம் என நினைக்கவே செய்யாத பெண்கள் ஒரு நாளுக்கு எத்தனை ட்ரிப் அடிக்கிறார்கள் எனப் பாருங்கள். படித்த பெண்கள் work forceல் நீடிக்க வேண்டுமெனில் எட்டு மணி நேர வேலை வேண்டும், குழந்தை பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டும். இரு பக்க உதவி இல்லாமல் இங்கே ஒரு பெரிய கூட்டமே உண்டு. அந்த படித்த பெண்கள் formal sector இ லிருந்து விலகி informal வேலைகளைச் செய்கிறார்கள். Data entry, Marketing, Translation, Accounting, Tuition, Online teaching, Part time journalist என.வீட்டு வேலை (reproductive labour, unpaid care work) பகிரப் பட வேண்டும்; மதிப்பிடப் பட வேண்டும்; சமூக பாதுகாப்பிற்குள் வர வேண்டும்.l

கீதா நாராயணன்