குண்டு பொஸுக்கு இப்ப ஒல்லிப்பிச்சு!



யெஸ். ‘குட்டி குஷ்பூ’ என செல்லமாக அழைக்கப்பட்ட ஹன்சிகா,இப்போது ‘குட்டி சிம்ரன்’ ஆக காட்சியளிக்கிறார். அந்தளவுக்கு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறார்.

டயட், ஒர்க் அவுட்... என இதன் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பொசு பொசு இடுப்பு கரைந்து ஒல்லி இடுப்பு அவருக்கு பூத்திருப்பது மட்டும் நிஜம்.

குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் கால் பதித்த ஹன்சிகா, வளர்ந்ததும் பெரிய திரைக்கு வந்தார். டாப் மோஸ்ட் இளம் நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்தார். 360 டிகிரியில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வலம் வந்தார். இளசுகளின் ட்ரீம் கேர்ள் ஆக டீன்ஸ்களின் கனவை ஆக்கிரமித்தார்.யார் கண் பட்டதோ... நடுவில் சில ஆண்டுகள் தகவல் இல்லாமல் தலைமறைவானார்.

இப்போது..? பேக் டூ ஃபார்ம் வர உற்சாகத்துடன் ஓட ஆரம்பித்திருக்கிறார். ஆம்... ஸ்லிம் ஆன கையோடு ‘மஹா’, ‘ரவுடி பேபி’, ‘பார்ட்னர்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும்; ‘மை நேம் இஸ் ஸ்ருதி’, ‘105 மினிட்ஸ்’ ஆகிய தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இதுபோக இயக்குநர்கள் விஜய் சந்தரும், ஆர்.கண்ணனும் டைரக்ட்  செய்யப்போகும் பெயரிடப்படாத படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.குண்டு பொஸுக்கு ஹன்சிகா, ஹார்ட்டின்ஸை அள்ளினார்... ஸ்லிம் ஹன்சிகா அதே சாதனையை நிகழ்த்துவாரா..?‘‘வெயிட் அண்ட் ஸீ...’’ என்கிறார் கண்ணடித்தபடி!

காம்ஸ் பாப்பா