ஜேம்ஸ்



கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இறந்த பிறகு அவர் நடிப்பில் வெளியாகும் கன்னடப்படம், ‘ஜேம்ஸ்’. ‘சோனி லிவ்’வில் தமிழில் காணக்கிடைக்கிறது.அனாதைச் சிறுவன் சந்தோஷ் குமார் என்கிற ஜேம்ஸ். அவனைப் போலவே நான்கு அனாதைச் சிறுவர்களுடன் ஒரு ஆசிரமத்தில் வளர்கிறான். வளர்ந்த பிறகு இராணுவத்தில் மேஜராகிவிடுகிறான் சந்தோஷ். மற்ற நால்வரும் ஐஏஎஸ், காவல்துறை அதிகாரி, பத்திரிகையாளர் என சமூகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஈடுபடுகின்றனர்.

நண்பர்களில் ஒருவர் போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகளைக் கைது செய்கிறார். அதனால் கோபமடையும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் சந்தோஷின் கண் முன்பே நண்பர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் சுட்டுக் கொல்கின்றனர்.

வெகுண்டு எழும் சந்தோஷ், போதைக் கடத்தல் கும்பலை எப்படி கூண்டோடு அழிக்கிறார்... நண்பர்களின் மரணத்துக்குக் காரணமானவர்களை எப்படி பழி தீர்க்கிறார்... என்பதே ஆக்‌ஷன் திரைக்கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாமல் வேகமாக நகரும் திரைக்கதை படத்துக்கு பலம். ஆக்‌ஷனில் அதிரடி காட்டியிருக்கிறார் சந்தோஷாக நடித்த புனித் ராஜ்குமார். படத்தின் இயக்குநர் சேத்தன் குமார்.