கங்குபாய் காத்யவாடி
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிய இந்திப்படம் ‘கங்குபாய் காத்யவாடி’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்கலாம்.குஜராத்தில் உள்ள வசதியான குடும்பத்தில் பிறந்தவள் கங்குபாய் எனும் கங்கா.
 நடிகையாக வேண்டும் என்பது அவளது கனவு. அதனால் வீட்டைவிட்டு வெளியேறி தன் காதலனுடன் மும்பைக்கு வருகிறாள். ஆனால், அவள் காதலனோ காமாத்திபுரத்திலிருக்கும் சிகப்பு விளக்குப் பகுதியில் கங்காவை விற்றுவிடுகிறான். அப்போது கங்காவின் வயது 16. வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறாள் கங்கா. அங்கிருந்து அவளால் தப்பித்து எங்கும் செல்ல முடியாது. இப்படியான இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்ட கங்கா, எப்படி காமாத்திபுரத்துக்கே தலைவியாகவும், மாஃபியா ராணியாகவும் உருவெடுக்கிறாள் என்பதே திரைக்கதை. பாலியல் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்டு, பாலியல் தொழிலாளிகளின் உரிமைக்காகப் பாடுபட்ட கங்குபாயின் நிஜக்கதைதான் இந்தப் படம். கங்குபாயாக அலியா பட் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஹுசைன் சைதி எழுதிய ‘மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை’ எனும் புத்தகத்தில் உள்ள கங்குபாய் பற்றிய அத்தியாயங்களைப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.
|