நோ... இது சைல்ட் லேபர் அல்ல!



சுறுசுறுப்புக்கு பெயர் போனவர்கள் ஜப்பானியர்கள் என்பது செல்போனுக்கு தேவை சிம்கார்ட் என்பதைப் போன்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். தெரியாதது அங்குள்ள 4 வயதுக்கு உட்பட்ட சில குழந்தைகளும் வேலை பார்க்கிறார்கள் என்பது.குழந்தைகளால் என்ன வேலை செய்ய முடியும்?
இதற்கு விடையாகத்தான் அவர்களுக்கும் ஒரு வேலையைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது தெற்கு ஜப்பானில் உள்ள ஒரு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் செய்யவேண்டிய வேலை, வயது முதிர்ந்த நோயாளிகளை தங்கள் குறும்புத்தனத்தால் மகிழ்விப்பது; கூடவே தங்களை உறங்க வைக்க அந்த வயதான நோயாளிகளை அனுமதிப்பது.

குழந்தைகளின் குறும்புத்தனங்களை ரசிக்கும்போதும், அவர்களைத் தூங்க வைக்கும்போதும் வயதான நோயாளிகளின் மனம் ரிலாக்ஸாவதாக அந்த மருத்துவமனை கண்டறிந்துள்ளது. எனவே, தங்களிடம் உள்ள வயது முதிர்ந்த நோயாளிகளை உற்சாகப்படுத்த 30 குழந்தைகளை வேலைக்கு சேர்த்திருக்கிறார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான குழந்தைகள் போட்டி போட்டார்கள் என்பதும்... இன்டர்வியூ வைத்தே செலக்ட் செய்தார்கள் என்பதும் சுவாரஸ்யமான ஹைலைட்.இந்தக் குழந்தைகளுக்கு சம்பளம் என்ன தெரியுமா? பாலும், நாப்கினும்!
          
காம்ஸ் பாப்பா