உலகின் நீண்ட உலக டெலிவரி பயணம்!



இன்று ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது என்பது அன்றாட வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலும் அருகிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு டெலிவரி செய்யப்படும். டெலிவருக்கு என்று ஒரு குறிப்பிட்ட கட்டணம் உள்ளது. இந்நிலையில் 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உணவை டெலிவரி செய்திருக்கிறார் மானசா கோபால். உணவை டெலிவரி செய்வதற்காக ஒருவர் மேற்கொண்ட நீண்ட பயணம் இது.

சிங்கப்பூரில் உள்ள ஓர் உணவு டெலிவரி நிறுவனத்துடன் இணைந்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக இதைச் செய்திருக்கிறார் மானசா. முதலில் சிங்கப்பூரிலிருந்து ஜெர்மனியின் ஹம்பர்க் நகரத்துக்குச் சென்றார். பிறகு அங்கிருந்து வேறு விமானத்தில் அர்ஜெண்டினாவுக்குச் சென்றவர், இன்னொரு விமானத்தில் அண்டார்க்டிகாவுக்குச் சென்றார்.

நான்கு கண்டங்களைத் தாண்டி அண்டார்க்டிகாவில் உள்ள குறிப்பிட்ட ஓர் இடத்தில் இருந்தவர்களுக்கு காய்கறிகளான உணவுகள், தேநீர், பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் அத்தியாவசியமான உணவுகளை டெலிவரி செய்திருக்கிறார் மானசா. அவர் யாருக்கு உணவை டெலிவரி செய்தார் என்ற விவரங்கள் இல்லை. சென்னையில் வளர்ந்தவர் மானசா என்பது குறிப்பிடத்தக்கது.

த.சக்திவேல்