இந்தியாவின் Peace... பீஸ் பீஸா..?



இதென்ன ‘குங்குமம்’ வார இதழில் அடிக்கடி அமைதியான நாடு எது... பணக்கார நாடு எது... ஏழ்மையான நாடு எது... என்ற பட்டியல் இடம்பெறுகிறது என்று நீங்கள் கேட்கலாம்.
தினமும் காலையில் ஃபாஸ்ட்டை பிரேக் செய்கிறோம் அல்லவா..? இட்லி, தோசை அல்லது பழைய சோறு என மார்னிங் சாப்பிடுகிறோம் அல்லவா..? எதற்காக?
இரவு முழுக்க வயிறு காலியாக இருக்கிறது... காலையில் சாப்பிட்டால்தான் அன்றைய தினம் புத்துணர்ச்சியுடன் வேலை பார்க்க முடியும் என்றுதானே?
அப்படித்தான் இந்தப் பட்டியலும்.

நம் நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிந்தால்தான் மேற்கொண்டு என்ன செய்து முதன்மையான இடத்தைப் பிடிக்கலாம் என்பதற்காகத்தான்.ஏனெனில் இது நம் நாடு. நாம்தான் நாடு. நாம்தான் இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும்.

இந்த உண்மையின் அடிப்படையில்தான் இந்த வாரம் அமைதியான நாடுகளின் பட்டியல். சில மாதங்களுக்கு முன் ஒரு பட்டியல் வெளியானதே என்று கேட்கலாம். அது வேறு நிறுவனம் வெளியிட்ட பட்டியல்... இது வேறு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியல்.ரைட். விஷயத்துக்கு வரலாம்.

2025ம் ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம்போல டாப் இடங்களில் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஐஇபி எனப்படும் பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிடும். இந்தஆண்டிற்கான அமைதிப் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. 

உலக மக்கள் தொகையில் 99.7% உள்ளடக்கிய 163 நாடுகளை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மூன்று முக்கிய துறைகளில் 13 விஷயங்களை ஆய்வு செய்து இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரம், இராணுவமயமாக்கலின் அளவு ஆகியவற்றை வைத்து இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டும் இந்த லிஸ்ட்டில் வழக்கம்போல முன்பே சொன்னதுபோல் ஐரோப்பிய நாடுகளே முன்னிலையில் உள்ளன. டாப் 10ல் 8 நாடுகள் ஐரோப்பிய நாடுகளாகவே உள்ளன.
இதில் முதலிடத்தில் ஐஸ்லாந்து இருக்கிறது. ஐஸ்லாந்து தொடர்ந்து உலகின் மிகவும் அமைதியான நாடு என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஆம். 2008ம் ஆண்டு முதலே ஐஸ்லாந்துதான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறைந்த குற்றங்கள், வரவேற்கும் மக்கள் ஆகியவையே இதன் பிரதான காரணம். மேலும், இங்கு வன்முறை குற்றங்கள் ரொம்பவே அரிது என்கிறார்கள். இதனால் பெரும்பாலும் ஐஸ்லாந்து போலீசார் துப்பாக்கிகளை கையில் வைத்திருக்க மாட்டார்களாம்.

அயர்லாந்து இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில் நிலவும் அமைதி, நிலையான அரசியல் சூழல், அமைதியான சர்வதேச உறவுகள் மற்றும் குறைந்த குற்ற விகிதங்கள் ஆகியவை இதற்குக் காரணமாகும். பயங்கரவாதம் என்பது இங்கு எப்போதும் இருந்ததே இல்லை. உலகில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக அயர்லாந்து இருக்கிறது.

அடுத்து நியூசிலாந்து... மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் முதன்மையாக இருக்கும் நியூசிலாந்து, உலகின் மூன்றாவது அமைதியான நாடாகும். குற்ற விகிதங்கள், வன்முறைச் சம்பவங்கள் குறைவாக இருப்பது... வலுவான சமூகப் பாதுகாப்பு முறை இதற்குப் பிரதான காரணங்களாகும்.

இந்த லிஸ்ட்டில் ஆஸ்திரியா 4வது இடத்தில் இருக்கிறது. வலுவான பொருளாதாரம், விரிவான சமூக அமைப்புகள், உயர் கல்வி மற்றும் குறைந்த குற்ற விகிதங்கள் இதற்குப் பிரதான காரணங்கள். இவை அங்குபொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றன.

பல காலமாக நடுநிலை சூழலில் இருந்த சுவிட்சர்லாந்து, தொடர்ந்து உலகின் அமைதியான நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு நிலையான ஜனநாயகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு சிறந்து இருப்பதால்தான் சுவிட்சர்லாந்து தொடர்ந்து 5வது இடத்தில் இருக்கிறதாம்.

அடுத்த இடத்தில் சிங்கப்பூர் இருக்கிறது. டாப் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர்தான். கடுமையான சட்டங்கள், குறைந்த குற்றங்கள், திறமையான உள்கட்டமைப்பு ஆகியவை பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழலைத் தருகின்றன.

வீட்டுவசதி, வேலை - வாழ்க்கை சமநிலை, தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்மயமான நாடுகளின் சராசரியை விட உயர்ந்த இடத்தில் உள்ள போர்ச்சுகல், அதன் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தின் காரணமாக சிறந்த வெளிநாட்டினர் செல்லும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இன்னும் சிறப்பாக, போர்ச்சுகீசிய வாழ்க்கை முறையை அனுபவிக்க வங்கியை உடைக்க வேண்டிய அவசியமில்லை என்பது ஹைலைட். யெஸ். குடியரசுக் கண்டத்தில் மிகவும் மலிவு விலையில் பொருள்கள் கிடைக்கும் இடங்களில் ஒன்றாக போர்ச்சுகல் கருதப்படுகிறது.

தரவரிசையில் இதுபோன்ற சிறிய மாற்றங்கள், அந்த இராச்சியம் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை மட்டுமே நமக்குத் தெரிவிக்கின்றன. பயணம் செய்வதற்கும் வாழ்வதற்கும் பாதுகாப்பான நாடாக டென்மார்க், அதிக அளவு அரசியல் ஸ்திரத்தன்மை, பத்திரிகை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

இது உயர் மட்ட வருமான சமத்துவத்தையும் பெருமைப்படுத்துகிறது மற்றும் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக அடிக்கடி தரவரிசைப்படுத்தப்படுகிறது.
பிறகு ஸ்லோவேனியா, சிஇஇ பிராந்தியத்தில் மிகவும் அமைதியான நாடாக தனித்து நிற்கிறது. இருப்பினும், செக் குடியரசு மிகவும் பின்தங்கியிருக்கவில்லை. 11வது இடத்தில் உள்ளது. ஹங்கேரி மற்றும் குரோஷியாவும் முதல் 20 இடங்களுக்குள் வருகின்றன.

ஆச்சரியப்படத்தக்க வகையில், அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் தொடர்புடைய நாடு பின்லாந்து. உலகின் மிகவும் நல்லொழுக்கமுள்ள மற்றும் திருப்திகரமான நாடுகளில் ஒன்றாக அதன் நற்பெயரை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பின்லாந்து ஐக்கிய நாடுகளின் மகிழ்ச்சி அறிக்கையின் நிரந்தர சிறந்த செயல்திறன் கொண்ட நாடாகும்.

எல்லாம் சரி... இதில் இந்தியா எங்கே?

இதில் இந்தியா 115வது இடத்தில் இருக்கிறது. கடந்தாண்டும் 115வது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டும் அதே நிலையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது! இந்தியாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே மோசமான நிலையில் உள்ளது. பாகிஸ்தான் இந்த லிஸ்ட்டில் 144வது இடத்தில் இருக்கிறது.

மற்ற அண்டை நாடுகளில் அதிகபட்சமாக பூட்டான் 21வது இடத்தில் இருக்கிறது. அதேபோல நேபாளம் 76து இடத்தில் இருக்கும் நிலையில், சீனா 98வது இடத்திலும் இலங்கை 97வது இடத்திலும் இருக்கின்றன.புரிந்திருக்குமே... இந்த நாடுகளுக்குப் பின்னால்தான் இந்தியா 115வது இடத்தில் இருக்கிறது!

அமைதிக்கான முதன்மையான இடத்தில் இந்தியா அமர, இந்தியர்களான நாம் என்ன செய்யப்போகிறோம்?

ஜான்சி