காதல், கல்யாணம் எல்லாம் வாழவா இல்ல Vlog செய்யவா..?
‘‘கப்புள் வீடியோக்கள் அல்லது ரீல்ஸ் செய்யறதுக்குதான் இன்னைக்கு காதலும் கல்யாணமும் செய்கிறார்களோன்னு தோணுது...’’ சமூகத்தின் மேலான அக்கறையுடன் பேசத் துவங்கினார் அறிமுக இயக்குநர் சிவராஜ்.‘டிரெண்டிங்’..?

இன்னைக்கு ட்ரெண்டிங் மோகத்தால இளைஞர்கள் ரியல் வாழ்க்கைக்கும் ரீல் வாழ்க்கைக்கும் வித்தியாசமே தெரியாத அளவுக்கு வாழ்ந்துகிட்டு இருக்காங்களோ அப்படின்னு தோணுது. எல்லாமே லைக்ஸ், அத்தனையும் சப்ஸ்கிரிப்ஷன், உயிரே போனாலும் அதிலும் கன்டென்ட்... இப்படி உலகம் மாறி இருக்கு.  குறிப்பா இந்திய இளைஞர்கள்கிட்ட இந்த ட்ரெண்டிங் மோகம் ரொம்ப அதிகமாவே மாறி இருக்கு. சமீப காலமா இந்த ஜோடியா அல்லது கணவன் மனைவியா வீடியோக்கள் எடுக்கிறோம் என்கிற பெயரில் எந்த எல்லையுமே இல்லாமல் போய்க்கிட்டு இருக்கு. அப்படி டிஜிட்டலில் ட்ரெண்டாக இருக்கும் ஒரு ஜோடியை ஒரு டிஜிட்டல் விளையாட்டு அழைக்கிறது. அதைத்தொடர்ந்து நடக்கற சம்பவம்தான் ‘டிரெண்டிங்’ படத்தினுடைய கதை. கலையரசன் - பிரியாலயா ஜோடி... இன்னும் யார் யாரெல்லாம் நடிச்சிருக்காங்க ?
பெரிய அடையாளம், அங்கீகாரம் கிடைக்க வேண்டிய நடிகர். ‘மெட்ராஸ்’ படத்தில் அன்பு கதாபாத்திரத்திற்கு பிறகு இந்த கேரக்டர் நிச்சயம் பேசப்படும். குறிப்பா இந்தப் படத்தில் ரொம்ப ஸ்டைலா, மாடர்ன் ட்ரெண்டிங்கில் கலையரசன் நடிச்சிருக்கார்.
ரொம்ப நல்ல நடிகர். பிரியாலயா இதுக்கு முன்னாடி சில சீரியல்கள், ‘குட்நைட்’ மற்றும் ‘இங்க நான்தான் கிங்’ படங்களில் நடிச்சிருக்காங்க. இந்தப் படம் அவங்களுக்கு ஒரு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும். ‘விக்ரம் வேதா’ படத்தில் நடிச்ச பிரேம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் பார்க்கிற ஆடியன்ஸுக்கும் ரியலில் நடக்குதா அல்லது ரீலில் நடக்குதா என்கிற குழப்பத்தை உருவாக்குகிற அளவுக்கு இருக்கணும். நிறைய காட்சிகள் மொபைல் ஸ்க்ரீன் அல்லது வீடியோ ஸ்க்ரீன் கான்செப்ட்டிலேயே போகும். அதற்கு பிரவீன்குமார் சினிமாட்டோகிராபி அருமையா செய்து கொடுத்திருக்கார். இவர் இதற்கு முன்னாடி ‘நாய் சேகர்’ படத்தில் ஒளிப்பதிவாளரா வேலை செய்தவர்.
மியூசிக் சாம் சி. எஸ். அவருடைய பாடல்கள் பேக்ரவுண்ட் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் பாட்டு இன்னும் இந்தப் படத்தில் பளிச்சென தெரியும். ‘8 தோட்டாக்கள்’, ‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டிங் செய்த நாகூரன் ராமச்சந்திரன் இந்தப் படத்துக்கு எடிட்டிங் செய்திருக்கார். டெக்னிக்கலாகவே படம் நல்லா வந்திருக்கு.
எத்தனையோ டிஜிட்டல் பிரச்னைகள் இருக்கு... ஏன் கப்புள் வீடியோ, ரீல்ஸ்?
தனிநபர் வீடியோக்கள் செய்கிறவர்கள் கூட இன்னொரு சேனல் கூடதான் போட்டி போடுறாங்க. ஆனால், இந்த ஜோடியாக வீடியோக்கள் செய்கிற பிரபலங்கள்கிட்டதான் அவங்களுக்குள்ளேயே உன்னுடைய அக்கவுண்டுக்கு எத்தனை லைக்ஸ், என்னுடைய அக்கவுண்டுக்கு எவ்வளவு ஃபாலோயர்கள், உனக்கு எவ்வளவு வருமானம் வருது, எனக்கு எவ்வளவு வருது... இதில்தான் இன்னொரு ஜோடி கூட போட்டி.
நாலு பேரு ஒண்ணா சேர்ந்து உட்காரும்போது கூட குடும்பத்தைப் பற்றி பேசுவதே கிடையாது. எல்லாமே டிஜிட்டல் கான்செப்ட்தான். இது நிச்சயமா சமூகத்துக்கு மிகப்பெரிய கேடு. மேலும் குழந்தைகள் எல்லாம் கூட பார்க்கிறாங்க... எந்த எல்லையும் இல்லாம சில நேரங்களில் முகம் சுளிக்கிற மாதிரி வீடியோக்கள் வருது. கிட்டத்தட்ட செமி ஆபாச வீடியோக்கள் மாதிரி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதற்கு அரசாங்கமும் ஏதாவது கட்டுப்பாடு கொடுக்கணும்.
இப்படி நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கு. மிக முக்கியமா இந்த வீடியோக்களைப் பார்க்கற பார்வையாளர்களுக்கும் படத்தில் மெசேஜ் இருக்கு.நான் குறும்படங்கள்ல வேலை செய்திருக்கேன், ஒரு நாவல் எழுதி இருக்கேன். இதுதான் என்னுடைய முதல் படம். என்னுடைய கதையை நம்பி மீனாட்சி ஆனந்த் மேடம் படத்தை தயாரிக்க முன் வந்திருக்காங்க. முதல் படம்... நிறைய எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கேன்.
ஷாலினி நியூட்டன்
|