நாய்கள் காப்பகத்தில் திருமணம்!



சீனாவில் பிறந்து, வளர்ந்தவர் யாங். சிறுவனாக இருந்த போது யாங்குடைய ஐந்து நாய்க்குட்டிகள் நோய்மையினால் இறந்துவிட்டன. நாய்க்குட்டிகளின் மரணம் யாங்கை ரொமபவும் பாதித்துவிட்டது. 
அவர் பெரியவராக வளர்ந்தபிறகு தெரு நாய்களுக்கான ஒரு காப்பகத்தை உருவாக்கி, நிராதரவாக இருக்கும் தெருநாய்களைப் பராமரித்து வருகிறார். கடந்த 2022ம் வருடம் யாங்கின் நாய்கள் காப்பகத்துக்கு வருகை தந்தார் பல்கலைக்கழக மாணவியான சாவோ. இவரும் செல்லப்பிராணிகளின் மீது காதல் கொண்டவர்.  

யாங்கின் நாய்கள் காப்பகத்தில் தன்னார்வலராக  இணைந்து, சாவோவும் தெரு நாய்களை மீட்டு, காப்பகத்தில் சேர்த்தார். தவிர, பகுதி நேர வேலையில் தனக்குக் கிடைக்கும் மொத்த வருமானத்தையும் காப்பகத்தில் இருக்கும் நாய்களுக்கு உணவு வாங்குவதற்காகச் செலவிட்டார் சாவோ.

 நாளடைவில் யாங்கிற்கும், சாவோவிற்கும் இடையில் காதல் மலர்ந்தது. சமீபத்தில் யாங்கும், சாவோவும் தங்களின் காப்பகத்தில், 200 நாய்களின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இப்படி நாய்கள் காப்பகத்தில் நடக்கின்ற முதல் திருமணம் இதுவாகத்தான்
இருக்கும்.

த.சக்திவேல்