2026 பிரம்மாண்ட தமிழ்ப் படங்கள்!



பண்டிகை என்றாலே புத்தாடை, சாப்பாடுக்குப் பிறகு ஒரு நல்ல படம் என்பதே மனிதனின் விழாக்கால அடிப்படைத் தேவை. 

எனில் 2026ம் ஆண்டு எந்தெந்த படங்கள் எதிர்பார்க்கும் பட்டியலில் நமக்காக இடம் பிடித்திருக்கின்றன? 

அதன் கதை என்னவாக இருக்கலாம்?

இதோ ஒரு ஷார்ட் & ஸ்வீட் டேட்டா.

ஜெயிலர் 2

இயக்கம்: நெல்சன் திலீப்குமார்.

நடிகர்கள்: ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா.

இசை: அனிருத் ரவிச்சந்திரன்.

கதை : முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, ஜெயிலர் முத்துவேலின் கடந்த காலத்தில் விட்ட பிரச்னை ஒன்று துரத்தலாம். இந்தப் படத்தை தமிழ் சினிமா மட்டுமல்ல, மொத்த இந்தியாவும் எதிர்பார்க்கிறது என்பதே உண்மை. காரணம், இதன் முதல் பாகம் கொடுத்த வெற்றி மற்றும் மெகா வசூல் ப்ளஸ் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பு.

பராசக்தி

இயக்கம்: சுதா கொங்கரா. 

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா.

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்.

கதை: 1960களின் பின்னணியில் நடக்கும் சமூக-அரசியல் புரட்சி கதை. அடக்குமுறைகளுக்கு எதிராக எழும் இளைஞர்களின் போராட்டம், சிந்தனை மாற்றம், தியாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட படம். 

இயக்குநர் சுதாவின் முந்தைய வெற்றிகள் மற்றும் படத்தின் நடிகர்கள் பட்டியல் காரணமாக இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.


இந்தியன் 3

இயக்கம்: ஷங்கர்.

நடிகர்கள் : கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா.

இசை: அனிருத் ரவிச்சந்திரன்.

கதை : சேனாபதி கதாபாத்திரத்தின் இறுதி அத்தியாயம். டிஜிட்டல் ஊழல், அரசியல் மோசடிகள், சமூக ஊடக தலைமுறை மீது ஏற்படும் தாக்கங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பிரம்மாண்ட சமூக நீதி கதை. மேலும் சேனாபதியின் விடுதலைப் போராட்ட அத்தியாயங்கள் இன்னும் ஆழமாக இந்தப் படத்தில் இருக்கலாம்.

D 54

இயக்கம்: விக்னேஷ் ராஜா.

நடிகர்கள்: தனுஷ், மமிதா பைஜு.

இசை: ஜி.வி.பிரகாஷ்.

கதை: ‘போர்த் தொழில்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் ராஜா எழுதி இயக்கும் இரண்டாவது திரைப்படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியிருப்பதாக செய்திகள் கசிகின்றன.

D 55

இயக்கம்: ராஜ்குமார் பெரியசாமி.

நடிகர்கள்: தனுஷ், மம்மூட்டி.

இசை: ஜி.வி.பிரகாஷ்.

கதை: ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...’, ‘அமரன்’ ஆகிய ப்ளாக் பஸ்டர் படங்களுக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் மூன்றாவது படம் இது. தனுஷுக்கு சமமான வேடத்தில் மம்மூட்டி நடிப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

D 56

இயக்கம்: மாரி செல்வராஜ்

நடிகர்கள்: தனுஷ்

இசை: ஜி.வி.பிரகாஷ்

கதை: ‘கர்ணன்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜுடன் நடிகர் தனுஷ் கைகோர்ப்பதால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இப்படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. 

கருப்பு

இயக்கம்: ஆர்.ஜே. பாலாஜி.

நடிகர்கள் : சூர்யா, த்ரிஷா.

இசை: சாய் அபயங்கர்.

கதை: சமூக அநீதிகள், குலதெய்வ வழிபாடு, அதன் பின்னணியில் அடக்குமுறைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட படம். ‘கங்குவா’ படத்திற்குப் பிறகு சூர்யாவிற்கு நிச்சயமான ஒரு வெற்றி தேவைப்படும் பட்சத்தில் இந்தப் படமும் எதிர்பார்க்கும் பட்டியலில் இருக்கிறது.

சூர்யா 46

இயக்கம்: வெங்கி அட்லூரி.

நடிகர்கள்: சூர்யா, மமிதா பைஜு.

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்.

கதை:  நடுத்தர குடும்ப வாழ்க்கை, கனவுகள், பொறுப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட எமோஷனல்  டிராமா. சூர்யாவின் இயல்பான நடிப்பில், குடும்ப உறவுகளும் வாழ்க்கைப் போராட்டங்களும் நிறைந்த கதையாக இருக்கலாம்.

சர்தார் 2

இயக்கம்: பி.எஸ். மித்ரன்.

நடிகர்கள்: கார்த்தி.

இசை: யுவன் ஷங்கர் ராஜா.

கதை: உளவுத்துறை மற்றும் நாட்டின் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ‘சர்தார்’ படத்தின் 2ம் பாகம். இதுவும் ஒரு ஆபத்தான மிஷன்; அதை முறியடிக்க நடக்கும் கதையாக இருக்கலாம்.

டி.சி

இயக்கம்: அருண் மாதேஸ்வரன்.

நடிப்பு: லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி.

இசை:  அனிருத் ரவிச்சந்திரன்.

கதை : ஆக்‌ஷன், வன்முறை நிறைந்த டார்க் வேர்ல்ட் திரைக்கதையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.

துருவ நட்சத்திரம்

அத்தியாயம் 1 : யுத்தகாண்டம்

இயக்கம்: கவுதம் வாசுதேவ் மேனன்.

நடிகர்கள் : விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ஆர். பார்த்திபன், திவ்யதர்ஷினி.

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்.

கதை: சர்வதேச உளவுத்துறையை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் படம். ஜான் (விக்ரம்) கதாபாத்திரத்துக்குக்  கொடுக்கப்படும் மிக ஆபத்தான மிஷன், அதை மையமாக வைத்து நகரும் ஸ்பை கதை. ஒவ்வொரு வருடமும் இந்த வருடமாவது இந்தப் படம் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு இந்தப் படத்துக்கு உண்டு.

மூக்குத்தி அம்மன் 2

இயக்கம்: சுந்தர்.சி.

நடிகர்கள் : நயன்தாரா, ஊர்வசி, ரெஜினா கசாண்ட்ரா.

இசை: ஹிப் ஹாப் தமிழா.

கதை : கடவுள் நம்பிக்கையை வைத்து காசு பார்க்கும் போலிச் சாமியார்களை மையமாக வைத்துதான் இந்தக் கதையும் உருவாகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
முதல் பாகத்துக்கு ஏராளமான தாய்க்குலங்கள் ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் சுந்தர் சி இயக்கம் என்பதால் காமெடி படமாகவும் இருக்கும் என நம்பப்படுகிறது.

அரசன்

இயக்கம்: வெற்றி மாறன்.

நடிப்பு: சிலம்பரசன் , சமுத்திரக் கனி, கிஷோர், ஆண்ட்ரியா ஜெரிமியா.

இசை: அனிருத் ரவிச்சந்திரன்.

கதை: வட சென்னை காலகட்டத்தில் இன்னொரு கேங்­ஸ்டர் அடிப்படையிலான கதை. சிம்பு - வெற்றி மாறன் கூட்டணியுடன் ‘வட சென்னை’ உலகம். இது போதாதா இந்தப்படத்தை எதிர்பார்க்க!

வா வாத்தியார்

இயக்கம்: நலன் குமாரசாமி.

நடிப்பு: கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண்.

இசை: சந்தோஷ் நாராயணன்.

கதை : தாத்தா எம்ஜிஆர் ரசிகர், அவருடைய வளர்ப்பில் வளர்ந்த காவல்துறை அதிகாரி பேரன்.

மண்டாடி

இயக்கம்: மதிமாறன் புகழேந்தி.

நடிகர்கள்: சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார்.

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்.

கதை:  மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட சர்வைவல் கதை. சூரி கதாநாயகனாக நடித்து பெரும் பட்ஜெட்டில் வெளியாகும் முதல் படம் இது என்பதால் இப்படத்துக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

ட்ரெயின்

இயக்குநர்: மிஷ்கின்.

நடிகர்கள்: விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், நரேன், நாசர், டிம்பிள் ஹயாதி, கே.எஸ். ரவிக்குமார், பாவனா.

இசை: மிஷ்கின்.

கதை: ஒரு ரயிலில் நடக்கும் கடத்தல் மற்றும் அதில் உயிர் பிழைப்பதற்கான போராட்டம்தான் கதை. 

இதில் இருக்கும் படங்கள் அனைத்தும் முழுமையாக முடிந்து சில படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன; சில படங்களுக்கு போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. 
இவை இல்லாமல் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் இந்தியாவின் பிரம்மாண்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் படம், ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் ரஜினியின் 173வது படம் குறித்த அறிவிப்புகள், அதைச் சார்ந்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வரும் நிலையில் இந்தக் கூட்டணி உருவாக்கும் படத்திற்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது.

ஷாலினி நியூட்டன்