Brain Storage
நியூயார்க் நகரின் Grand Central Stationதான் உலகிலேயே மிக அதிகமான நடைமேடைகளைக் கொண்ட ரயில் நிலையம். மொத்தம் 44 நடைமேடைகள். அனைத்தும் பூமிக்குக் கீழே (underground). அதேபோல, இந்தியாவின் மிகப் பெரிய ரயில் நிலையம், கொல்கத்தா ஹௌரா ரயில் நிலையம்தான். அங்கே மொத்தம் 23 நடைமேடைகள் இருக்கின்றன. *** Chefs என்று அழைக்கப்படும் பெரும் சமையல் கலைஞர்கள் அணியும் வெள்ளைத் தொப்பிக்கு toque என்று பெயர். அதில், 100 மடிப்புகள் (pleats) இருக்கும். நூறு வகைகளில் முட்டையை சமைப்பதில் கைதேர்ந்தவர் என்பதைக் குறிக்கும் வகையில் அவ்வாறு டிசைன் செய்யப்பட்டது. தற்காலத்தில் chefs அணியும் தொப்பியில் 40 அல்லது 50 மடிப்புகள் இருக்கின்றனவாம். மடிப்புகள் அதிகமாக, அதிகமாக அவர் தயாரிக்கும் உணவு வகைகளும் அதிகம் என்பதை அதன் மூலம் அறியலாம். *** ஆஸ்கார் அகாடமி விருதுகள் வரலாற்றிலேயே அதிகமான விருதுகள் வாங்கிய பெருமை வால்ட் டிஸ்னியை சாரும்.மொத்தம் 26 விருதுகள் (படைப்புத் திறனுக்காக 22 மற்றும் 4 கவுரவ விருதுகள்). அவருக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்கள் அதிகபட்சமாக 11 விருதுகள் வாங்கி உள்ளனர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக் போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களையும், Disney World, Disneyland போன்ற தீம் பார்க்குகளையும் உருவாக்கியவர் அவர். *** ஸ்பெயின் நாட்டின் தேசிய கீதம், இசை மட்டுமே கொண்டது; வார்த்தைகள் கிடையாது. அதே போல் வேறு சில மூன்று சிறிய நாடுகளின் தேசிய கீதங்களும் இசை மட்டுமே கொண்டவை. *** பன்றிகளால் தமது தலையை முழுவதுமாக மேல் நோக்கி வானத்தைப் பார்க்க முடியாது. அவற்றின் கழுத்து மற்றும் முதுகெலும்பு அமைப்புகள் அவ்வாறு உள்ளன. சம்பந்தம் இல்லாத எக்ஸ்ட்ரா: ‘பன்றிகளின் முன்னர் முத்துக்களை எறியாதீர்’ என்றொரு பைபிள் வாசகம் உண்டு. பொருள் பொதிந்த வரி.
ராஜேஷ் சுப்ரமணியன்
|