தத்துவம் மச்சி தத்துவம்





‘‘இந்தத் திருடன் உன் குரூப்புல புதுசா சேர்ந்திருக்கானா கபாலி..?’’
‘‘அட... எப்படிக் கண்டுபிடிச்சீங்க ஏட்டய்யா?’’
‘‘தேவையே இல்லாம அனாவசியமா என்னைப் பார்த்து பயப்படறானே!’’
- கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.

காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்?
காதலிக்கும்போது வீட்டுக்குப் பயப்படணும்;
கல்யாணம் ஆயிடுத்துனா
வீட்டுக்காரிக்கு பயப்படணும்!
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

பூனை, நாய், குரங்குன்னு விலங்குகளின் வால் எவ்வளவுதான் பெரிசா இருந்தாலும் ‘டெய்ல்’னுதான் சொல்லுவாங்க; ‘டீடெய்ல்’னு சொல்ல மாட்டாங்க!
- ‘வாலு’ பட போஸ்டர்
பார்த்துவிட்டு வால்தனம்
செய்வோர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘தலைவர் செஞ்சது எதுவுமே சரியில்லைன்னு மகளிரணித் தலைவி புலம்பறாங்களே... என்ன விஷயம்?’’
‘‘மகளிரணித் தலைவி வீட்ல இன்னிக்கு சமையல் செஞ்சது தலைவர்தானாம்..!’’
- சரவணன், கொளக்குடி.

பத்திர அலுவலகத்துல வேலை பார்க்கறவர் பெண் அதிகாரியா இருந்தாலும், அவரையும் ‘சார்’ பதிவாளர்னுதான் சொல்லுவாங்க; ‘மேடம்’ பதிவாளர்னு சொல்ல மாட்டாங்க!
- ஆண் உரிமை
பேசுவோர் சங்கம்
- பெ.பாண்டியன்,
காரைக்குடி.

‘‘தனக்கு மாலை போட்டவரை தலைவர் ஏன் மேடையிலயே அடிக்கறார்..?’’
‘‘மாலையோட விலைய மைக்ல சொல்லிட்டாரே..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘ஜனாதிபதி தேர்தல்ல நான் நிக்கப் போறேன்னு எவனோ புரளியைக் கிளப்பி விட்டுருக்கான்...’’
‘‘அதனால என்ன தலைவரே..?’’
‘‘ஜனங்க குவார்ட்டரும் கோழி
பிரியாணியும் கேக்குறாங்களே..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.