நியூஸ் வே

முன்னணி ஹீரோயின்கள் அயிட்டம் நம்பருக்கு ஆடும் காலம் இது. அசினுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இதுவரை அமையவில்லை. ‘‘அடிப்படையில நான் ஒரு டான்ஸர். என்னாலயும் அதை நல்லா செய்ய முடியும்’’ என்கிற அசின், ஒரு பாடலுக்கு ஆடுவதை ‘அயிட்டம் நம்பர்’ என சொல்வதை எதிர்க்கிறார். ‘‘அது மரியாதைக் குறைவான வார்த்தை’’ என்கிறார்.

இதுவும் அயிட்டம் நம்பர் நியூஸ்தான். சஞ்சய் தத் நடிக்கும் ‘ஜில்லா காஸியாபாத்’ படத்தில் ஒரு பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார் ஸ்ரேயா. தமிழிலும் தெலுங்கிலும் ஏகப்பட்ட குத்துகள் போட்டிருந்தாலும், இந்தியில் அவர் ஏற்ற வேடங்கள் வேறு ரகம். ‘‘இந்த அயிட்டம் நம்பர் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும்’’ என்கிறார் ஸ்ரேயா.

தன் இருபத்தி ஐந்தாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், இதே ஆண்டில் தனது 25வது படத்துக்கும் இசையமைக்கிறார். அந்தப் படம், ‘தாண்டவம்.’