கோச்சடையான் இன் டோக்கியோ

ரஜினி ஆட்டோகிராபோட ‘கோச்சடையான்’ டிரெய்லர், பாடல்கள் அடங்கிய 5 லட்சம் கார்பன் மொபைல்கள் மார்க்கெட்ல இறங்கவிருக்கு. ‘கோச்சடையான்’ இசை வெளியீடு டோக்கியோ, ப்ரீமியர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் மற்றும் இந்தியாவில் ஒரு மெட்ரோ நகரத்திலாம்! கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்..?

கமலோட ‘விஸ்வரூபம்’ ரெண்டு பாகங்களா வெளியாகவிருக்கு. ஆகஸ்ட்ல வெளியாகிற படத்தோட தொடர்ச்சியா ரெண்டாம் பாகமும் வெளியாகுமாம். அதையும் முடிச்சுட்டாராம் கமல். அதுல கமலோட வினோத ரூபத்தையும் பார்க்கலாமாம்..!

இதேபோல ரெண்டு பார்ட் ஒரே நேரத்துல முடிச்சிருக்கிற இந்திப்படம் அனுராக் காஷ்யபோட ‘கேங்ஸ் ஆஃப் வஸேபூர்’. இப்ப வெளியாகியிருக்க படத்தைத் தொடர்ந்து அடுத்த பாகமும் அதிரடியா வெளியாகவிருக்காம். ‘ரெண்டு’ ட்ரெண்ட்..?

‘மாற்றானு’க்கான சூர்யாவோட ரெட்டை வேட கெட்டப்புகளுக்கான ஷூட் சென்னையில தொடர்ந்து நடக்குது. சி.ஜி.வேலைகளுக்குத் தகுந்த மாதிரி நவீன டெக்னிக்குகளோட நடிச்சுக்கிட்டிருக்கார் சூர்யா + சூர்யா..!

அங்கே ரெண்டு சூர்யா நடிச்சுக்கிட்டிருக்க, இன்னொரு பக்கம் சூர்யா இல்லாமலேயே அவரோட ஷூட்டிங் தொடங்குது. ஹரியோட ‘சிங்கம் ரெண்டு’தான் அது. ஆடிக்கு முன்னால ஆரம்பிக்க வேண்டி சென்டிமென்ட்டான தொடக்கமாம்.‘ஜில்லுன்னு ஒரு காதல்’ கிருஷ்ணா டைரக்ட் பண்ற ‘நெடுஞ்சாலை’ல ஒரு ‘ஸ்டார்’ காமெடியன் நடிக்கிறார். போன வருஷம் சிறந்த நடிகரா தேசிய விருது வாங்கிய மலையாள நடிகர் சலீம்குமார்தான் அது.

பாலாவால நடிப்புக்கு மாறினாலும், தயாரிப்புதான் நிலையானதுங்கிறதை புரிஞ்சு வச்சிருக்க அழகன் தமிழ்மணி, சஞ்சய்ராம் டைரக்ஷன்ல ‘மீன்கொத்தி’ங்கிற படத்தைத் தயாரிச்சு அதுல நடிச்சும் இருக்கார். படத்துல ஆளையே கொத்துவாரே சஞ்சய்ராம்..?

களஞ்சியம் டைரக்ட் பண்ணிய ‘கருங்காலி’ தெலுங்கில ‘சதி லீலாவதி - 2012’ன்னு ரிலீஸ் ஆகுது. தெலுங்கில களஞ்சியம்ங்கிற பெயர் புரியாதேன்னு டோலிவுட்டுக்கு மட்டும் தன் பெயரை ‘பிரபாகரன்’னு மாத்திக்கிட்டாராம். அறிவுக் களஞ்சியம்..!

தமிழ்ல குழந்தைகளுக்கான படம் வெளியாகி நாளான குறையைத் தீர்க்க ‘சுட்டி பையனும் நான்கு திருடர்களும்’ங்கிற படத்தை எடுக்கிறார் அறிமுக இயக்குநர் சிவா.ஜி. இதுல உலக அதிசயங்களை கிராபிக்ஸ்ல காட்டப் போறாராம். ஏதோ அவரால முடிஞ்சது...
- கோலிவுட் கோயிந்து

சைலன்ஸ்


காதலரோட கட்டிடம் கட்டப் போன மச்சான் நடிகைக்கு என்ன ஆச்சோ, இப்ப தமிழ் மார்க்கெட்டை கன்ஸ்ட்ரக்ட் பண்ற வேலைகள்ல இறங்கியிருக்கு. முன்னோட்டமா, இந்தியில எடுத்து இப்ப மலையாளத்துக்குப் போயிருக்கிற ‘சில்க் கதையை தமிழ்ல எடுத்தா நான்தான் ஆப்ட்டான ஆள்’னு தானே அறிக்கை விட்டிருக்கு. ‘அந்த அனாட்டமி எங்கே... இந்த ஆனைமலை பாடி எங்கே..?’ன்னு அலறுது கோலிவுட்.

லண்டன் ஸ்டாக் மார்க்கெட் பணம் கொட்டப்போகுதுன்னு அடிச்சு விட்டுக்கிட்டிருந்த டைரடக்கர் கம் புரட்யூசரோட இப்பத்த நிலைமையே வேற. தன் அடுத்த தயாரிப்புகளுக்காக அந்த அன்பான பைனான்சியர்கிட்ட ‘நூறு கோ’ வாங்கி இண்டஸ்ட்ரியில இறக்கற முயற்சியில் இருக்காராம் அவர். முன்னணி ஸ்டார்கள் கால்ஷீட்ஸ் கைல இருக்கிறதால, வருமானம் விண்ணைத் தாண்டிடும்ங்கிற தைரியம்தான்..!