தத்துவம் மச்சி தத்துவம்

‘‘ஜெயிலுக்கு வந்துட்டு தலைவர்
ஏன் கண் கலங்கறார்..?’’
‘‘பழைய கைதிங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து இவரை ரேக்கிங் பண்றாங்களாம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘என்னய்யா இது... செருப்பு, ஷூவுக்கு பதிலா பழைய ஒரு பைசா, ரெண்டு பைசா, அஞ்சு பைசா எல்லாம் எடுத்து
வீசறாங்க?’’
‘‘அரசியல்ல நீங்க ‘செல்லாக் காசா’ ஆகிட்டீங்கன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க தலைவா!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘வாசல் கேட்’டை வாட்ச்மேன் திறக்கலாம்; ‘ரயில்வே கேட்’டை ரயில்வே ஊழியர் திறக்கலாம்; ‘வீட்டு கேட்’டை பொண்டாட்டி திறக்கலாம். ஆனா ‘அட்வகேட்’டை யாராலும் திறக்க முடியாது.
- பில்கேட்ஸ் ரேஞ்சில் கேட்டுக் கேட்டு தத்துவம் எழுதுவோர் சங்கம்
- சக்தி இளங்கோ, தஞ்சாவூர்.

‘‘ராத்திரி கனவுல வந்த ஹன்ஸிகா கிட்ட நான் பேசின இங்கிலீஷ் அவங்களுக்குப் புரிஞ்சுதான்னு தெரிஞ்சுக்கணும் சார்...’’
‘‘யோவ்! இதையெல்லாம் தகவல் அறியும் உரிமை சட்டத்துல கண்டுபிடிக்க முடியாதுய்யா!’’
- சரவணன், கொளக்குடி.

‘‘முதல்ல லவ் ஸ்டோரிதானே எடுக்கறதா இருந்தீங்க... அப்புறம் ஏன் திகில் படமா மாத்தினீங்க?’’
‘‘இவங்கதான் ஹீரோயின்னு முடிவானதும், இவங்களுக்குத் தகுந்த மாதிரியான கதையா தேட வேண்டியதாப் போயிடுச்சு..!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

என்னதான் ஊசிப்போன வடையிலிருந்து நூல் நூலா வரும்னாலும், அது பட்டு நூலாவோ, பருத்தி நூலாவோ, பாலியஸ்டர் நூலாவோ வருமா?
- டீக்கடை பெஞ்சில் வடை சாப்பிட்டபடி, ஃபிகர்களுக்கு நூல் விடுவோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

கிரிக்கெட்ல ‘செஞ்சுரிஸ்’ வந்தா சந்தோஷப்படலாம்;
‘இஞ்சுரீஸ்’ வந்தா சந்தோஷப்பட முடியுமா?
- ஹைலைட்ஸ் பார்த்தபடி சூதாட்டத்தில் ஈடுபடுவோர் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.