சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதை எதிர்த்து வக்கீல் வண்டு முருகனின் வாதம்...
(‘வைகைப் புயல்’ வடிவேலு ஸ்லாங்கில் படித்தால்
நாங்கள் பொறுப்பல்ல!)
வக்கீல் வண்டு முருகன்: எச்சூச்சுமீ யுவர் ஆனர்... நூலகத்தில் திருமணம் நடத்தக்கூடாது என்பது சின்னப்புள்ளத்தனமா இருக்கிறது! அதாவது, நூலகத்தின் உதவியால் மக்கள் அறிவை வளர்க்கலாம், கலெக்டர் ஆகலாம், டாக்டர் ஆகலாம், கவுன்சிலர் ஸ்நேக் பாபு கூட ஆகலாம்... ஆனால், அதற்குத் தேவையான மக்கள் எப்படிக் கிடைப்பாங்க? கல்யாணம் பண்ணி குழந்தை பெத்தாத்தானே கிடைப்பாங்க... கிடைப்பாங்க... கிடைப்பாங்க? அப்போ ஏன் அதை கல்யாண மண்டபமா ஆக்கக்கூடாது?
அதுமட்டுமில்லை யுவர் ஆனர், இந்த அண்ணா சாலையை நீங்களே பாருங்கள்... தண்ணி வாளிக்குள் பன்னிக் குட்டிகளை அள்ளிப் போட்டது போல் எப்பவும் டிராபிக் ஜாம். ஆணியே புடுங்க வேண்டாம்... அண்ணா சாலையில் போக்குவரத்தை உடனடியாக தடை செய்து விடுங்கள். பொண்டாட்டி சேலையையும் மச்சினிச்சி சுடிதாரையும் அடித்துத் துவைத்துவிட்டு, காயப்போட இடமில்லாமல் தவிக்கும் என்னைப் போன்ற அப்பாவி ஆண் சிங்கங்களுக்கு வாடகைக்கு விடச் சொல்லுங்கள் யுவர் ஆனர்!
அதுமட்டுமில்லை யுவர் ஆனர்... இந்த மெரீனா பீச் இருக்கிறதே மெரீனா பீச், அந்த இடத்தை திறந்தவெளி கட்டணக் கழிப்பிடமாக அதிகாரபூர்வமாக அறிவித்தால், கிராமத்தில் இருந்து வந்து கஷ்டப்படும் பெரிசுகளுக்கு உதவியாக இருக்கும். நாமும் சில்லறை தேத்தியது போலிருக்கும்.
ஜட்ஜ்: மிஸ்டர் வண்டுமுருகன், நீங்க என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே?
வண்டுமுருகன்: அவ்வ்வ்... நோ யுவர் ஆனர். இது போன்ற ஐடியாக்கள் இன்னும் கைவசம் நிறைய இருக்கின்றன. பீச்சு பக்கம் ஒரு கட்டிடத்துல இருந்து கை தட்டுற சத்தமா வந்துக்கிட்டு இருக்குமே... செயின்ட் சார்ஜு கோட்டையோ, சரோஜா கோட்டையோ... அந்தக் கட்டிடத்தை தீபாவளி, பொங்கலுக்கு சாலமன் பாப்பையா குரூப்புக்கு பட்டிமன்றம் நடத்த வாடகைக்கு விட்டா, அரசு கஜானாவை ரெப்புலாம்ல, ரெப்புலாம்ல, ரெப்புலாம்ல!
ஜட்ஜ்: கக்ககபோ!
வண்டு முருகன்: கன்னியாகுமரியில இருக்கற விவேகானந்தர் பாறையை, ‘ஏன்டா கல்யாணம் பண்ணுனோம்...’, ‘ஏன்டா குழந்தை பெத்தோம்...’, ‘ஏன்டா வோட்டு போட்டோம்...’னு பல்வேறு காரணங்களுக்காக செவுத்துல முட்டிக்கிறவங்களுக்கு வாடகைக்கு விடலாமே? அதுமட்டுமில்லை யுவர் ஆனர், ரூம் ரூமா இருக்கும் இந்த புழல் சிறையை பொதுமக்கள் புழங்கும் குறைந்த விலை லாட்ஜாக மாத்திடலாம். இந்த ரிப்பன், சுப்பன் பில்டிங்கையெல்லாம் ஆசீர்வாத, ஜெபக் கூட்டங்கள் நடத்த வாடகைக்கு விட்டுறலாம். இத்தனை வருடமாக பழனி மலையில் ஓசியில் குடியிருக்கும் முருகப் பெருமானுக்கு இனிமேல் மலையை வாடகைக்கு விடலாம். மிக மிக முக்கியமாக யுவர் ஆனர், இத்தனை வருடங்களாக தமிழன் என்று வெட்டிப் பெருமை பேசி திரியும் இந்த மக்களுக்கு இனி இங்கு இருக்க மொத்த தமிழ்நாட்டையும் வாடகைக்கு விடலாம். வாடகை தராதவங்களை, அன்னம் தண்ணி புழங்க விடாமல் தமிழ்நாட்டை விட்டே தள்ளி வைத்துவிடலாம், எப்பூடி?
தமிழ் சினிமா சிறப்பு விருதுகள்!
சிறந்த போலீஸ் கான்ஸ்டபிள் - மனோபாலா
சிறந்த போலீஸ் - விஜயகாந்த்
சிறந்த சி.ஐ.டி. - ஜெயசங்கர்
சிறந்த டவுன் ரவுடி - பொன்னம்பலம்
சிறந்த கிராமத்து ரவுடி - ஆனந்தராஜ்
சிறந்த குடும்பத் தலைவர் - விசு
சிறந்த குடும்பத் தலைவி - கமலா காமேஷ்
சிறந்த தாய்மாமா - டி.ராஜேந்தர்
சிறந்த தாத்தா - வி.எஸ்.ராகவன்
சிறந்த அம்மாயி - மனோரமா
சிறந்த அப்பத்தா - காந்திமதி
சிறந்த உளறுவாய் - டெல்லி கணேஷ்
சிறந்த பாடகர் - ‘மைக்’ மோகன்
சிறந்த ஆங்கில இலக்கியவாதி - லூஸ் மோகன்
சிறந்த பாம் வைப்பாளர் - ரகுவரன்
சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் - பவர்ஸ்டார்
சிறந்த காஸ்ட்யூமர் - ராமராஜன்
சிறந்த காஸ்ட்யூமர் சிறப்பு பரிசு - செந்தில்
சிறந்த கற்பழிப்பாளர் (தோல்வியில் முடியும்) - நம்பியார்
சிறந்த கற்பழிப்பாளர் ஷிமீஸீவீஷீக்ஷீ (வெற்றியில் முடியும் - செந்தாமரை
சிறந்த கற்பழிப்பாளர் யிuஸீவீஷீக்ஷீ (வெற்றியில் முடியும்) - ராஜீவ்
வரலாறு முக்கியம், அமைச்சர் மங்குனி பாண்டியரே!
கொலைகள் - 34305
கொலை முயற்சிகள் - 31385
கற்பழிப்பு - 24206
ஆள் கடத்தல் - 44664
கொள்ளைகள் - 24700
வன்முறைகள் - 68500
வரதட்சணை இறப்புகள் - 8618
பாலியல் துன்புறுத்தல்கள் - 42968
பெண்கள் மீதான வன்முறை - 99135
திருட்டு - 92504
குழந்தைகளுக்கு எதிரான
வன்முறைகள் - 33098
ஆக, இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு கொலை நிகழ்கிறது. ஒவ்வொரு 21 நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிப்புக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகிறாள். ஒவ்வொரு 11 நிமிஷத்திற்கும் ஒரு இந்தியர் கடத்தப்படுகிறார். ஒவ்வொரு 7 நிமிஷத்திற்கும் இந்தியாவில் எங்கேயோ ஒரு வன்முறை நடக்கிறது. ஒவ்வொரு 5 நிமிஷத்திற்கும் ஒரு பெண் மீது வன்முறை திணிக்கப்படுகிறது.
‘பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்’
- பாரதியார்
(பேசுவோம்)