தத்துவம் மச்சி தத்துவம்





‘‘தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘நம்ம கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு யாரும் தாவாம இருக்க, எல்லாருக்கும் ‘தடுப்பு’ ஊசி போடணும்னு சொல்றாரே...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

என்னதான் படிப்புல கெட்டிக்கார மாணவனா இருந்தாலும், அவனும் டைனிங் டேபிள்ல உட்கார்ந்துதான் சாப்பிடணும்; டைம் டேபிள் மேல உட்கார்ந்து சாப்பிட முடியாது.
- டேபிள் தத்துவங்களை டெர்ரராக
சொல்வோர் சங்கம்
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘எதிர்க்கட்சிக்குத் தாவின நம்ம கட்சிக்காரங்களுக்கு தலைவர் எப்படிப் பாடம் புகட்டப் போறாராம்..?’’
‘‘நம்ம கட்சியை எதிர்க்கட்சியோட இணைக்கப் போறாராம்..!’’
- அ.ரியாஸ், சேலம்.

என்னதான் நடக்கப் போறதை சொல்ற ஜோசியரா இருந்தாலும், நமக்குக் கால் ஒடைஞ்சு கட்டு போட்டிருந்தா நாம நடக்கப் போறதை டாக்டர் கிட்டதான் கேப்போம்; ஜோசியர் கிட்ட கேக்க மாட்டோம்.
- நொண்டிச் சாக்கு சொல்வோர் சங்கம்
- மதுரை மதி, பசுமலை.

‘‘கூட்டத்துல செருப்பு எறிஞ்சவனை, ‘திருட்டுப் பயலே’ன்னு தலைவர் திட்டுனாராமே... ஏன்?’’
‘‘அது போன வாரம் காணாமல் போன அவரோட செருப்பாம்... அதான்!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.

‘‘போலீஸ்காரங்க எல்லாரும் கபாலியை வழியனுப்ப ஏர்போர்ட்டுக்குப் போறாங்களே... எதுக்காம்?’’
‘‘கபாலி ‘மேல்திருட்டு’க்காக அமெரிக்கா போறானாம்..!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

குவாட்டர்ல கட்டிங்தான் இருக்கும்; சேவிங் இருக்காது!
- வருமானத்தின்
ஒரு பகுதியை டாஸ்மாக்கில்
சேமிப்போர் சங்கம்
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.