பதினாறு வயது மயிலு!





‘ச்சீய் பக்கங்களு’க்கு வெல்கம்! ஏன், எதற்கு, எப்படி என்று நிறைய அறிவியல்பூர்வமான(?) செய்திகளையே சொல்லி எங்கள் ‘ப்ரா’ணனை எடுத்திருந்தாலும், பெண்களுக்கு உபயோகமான தகவல்களைச் சொன்னதால் எங்களுக்கும் நோ ‘ப்ரா’ப்ளம். இது ‘ப்ரா’மிஸ்... நம்புங்க!
- பாலகிருஷ்ணன், மதுரை;
சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்.


வடக்கை கலக்கி வாகை சூடினாலும் தன்னை உருவாக்கிய தென்னிந்திய இயக்குனர்களை நடிகை ஸ்ரீதேவி மறக்காமல் நினைவு கூர்ந்தது வியக்க வைத்தது. இந்த மனதால்தான் இன்னமும் அவர் ‘பதினாறு வயது’ மயிலாகவே வலம் வருகிறார் போலும்!
- ஏ.விஷால், புதுச்சேரி.

உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு தொழிற்சாலை பல உயிர்களைப் பலிகொண்ட சிவகாசி சம்பவம், கண்களைக் குளமாக்கியது. இதுபோன்ற வெடிவிபத்துகள் இனி நேராமல் இருக்க அரசு கிடுக்கிப்பிடி போட வேண்டும்.
- ச.சதீஷ், சென்னை-94.

‘இப்போது எளிய, ஆடம்பரமில்லா திருமணங்கள் உயிரோடு இருப்பது... ஓடிப்போய் திருமணம் செய்து கொள்பவர்களிடம் மட்டுமே’ என்ற மனுஷ்ய புத்திரனின் வரிகள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்து விட்டது.
- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

‘போடா போடி’ படத்தில் சிம்பு, ‘லவ் பண்ணலாமா வேணாமா’ என்று யோசிப்பதற்கு பதில், ‘இனியும் விரல் வித்தை காட்டலாமா வேணாமா’ என்று யோசிப்பது நலம்!
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன்,
வள்ளியூர்.


விவசாயிகளுக்காக கவிதை எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் ஓர் விவசாயியாக கவிதை எழுதும் வேணுகோபால் மதிக்கப்பட வேண்டியவர்.
- மணியன், கோயமுத்தூர்.

‘ஆட்டம் காண்கிறாரா சச்சின்?’- இதில் என்ன சந்தேகம்? சச்சின் ஒன்றும் ‘ரன் மெஷின்’ அல்ல. அவருக்கும் ஓய்வு தேவை. இளைஞர்களுக்கு அவர் வழிவிட்டால்தான், விராட் கோஹ்லி போல இன்னும் பலர் வீறு கொண்டு எழுவார்கள்.
- இரா.இராஜேந்திரன், கடலூர்.

மத்திய அரசு ஈழத்தமிழர் விவகாரத்தில் சேம் சைடு கோல் போடுவது உலகம் அறிந்ததே. இப்போது பாரதிய ஜனதாவும் ராஜபக்ஷேவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருப்பது கொடுமையிலும் கொடுமையடா சாமி!
- இரா.கமலக்கண்ணன்,
சித்தோடு.


‘நல்ல வதந்தி’ கிளப்ப ஐடியா ஒருபுறம், நாடாளுமன்றத்தை நடத்த காங்கிரஸுக்கு யோசனை மறுபுறம்... இந்த வாரம் ஆல்தோட்ட பூபதி கலக்கிட்டார் சார்!
- எஸ்.மூர்த்தி, சேலம்.