தத்துவம் மச்சி தத்துவம்





நீதிபதிகிட்டே நீதி கேட்டுப் போகலாம்; லட்சுமிபதிகிட்டே லட்சுமியைக் கேட்டு போக முடியுமா?
- 110 டிகிரி வெயிலையும் நிலா வெளிச்சமாக எண்ணுவோர் சங்கம்
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.


‘‘அந்த ஸ்டேஷன்ல என்ன ஒரே கூட்டமா இருக்கு..?’’
‘‘திருடர்களுக்கான தகுதித் தேர்வு நடக்குது... அதான்!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

வம்பை யார்கிட்டேயும் விலை குடுத்து வாங்கலாம். ஆனா அதுக்கு விற்பனை வரி, உள்ளூர் வரி சேர்த்து யாரும் பில் போட்டுத் தர மாட்டாங்க!
- வாசகர்களிடம் வம்பை விலை கொடுத்து
வாங்குவோர் சங்கம்
- ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.

‘‘இந்த செருப்புக் கடையில் அப்படி என்ன விசேஷம்..?’’
‘‘தலைவர்கள் மீது வீசும் காலணிகள்னு தனி செக்ஷனே இருக்காம்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘தலைவரைப் பார்க்க வந்த சி.பி.ஐ. அதிகாரிகள்கிட்ட
அவர் என்ன கேட்டாரு... இப்படித் திட்டறாங்களே நம்ம
தலைவரை..?’’
‘‘என்கூட கூட்டணி வச்சுக்கலாம்னு வந்தீங்களான்னு கேட்டாராம்... அதான்!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.

‘‘தலைவர் சரக்கு அடிக்கற செலவை எப்படிக் கட்சிக்கணக்குல சாமர்த்தியமா எழுதறார் பாரு...’’
‘‘என்ன எழுதியிருக்கார்..?’’
‘‘இடைத்தேர்தல் தோல்வியை மறக்கடிக்கும் வகையறா செலவுன்னு எழுதறார்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

அழகான ஃபிகரும் எருமை மாடும்
ஒன்றுதான்.
எப்படித் தெரியுமா?
சைக்கிள்ல பின்னால போய் பெல் அடிச்சுப் பாருங்க; ரெண்டுமே திரும்பிப் பார்க்காது!
- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.