கவிதைக்காரர்கள் வீதி

மனக்குப்பை எல்லா அறைகளின் குப்பைகளையும் சுமந்து நிறைந்திருக்கிறது மேன்ஷன் வளாகக் குப்பைத் தொட்டி. இறக்கிவைக்க மனமின்றி சுமந்தபடியே செல்கிறார்கள் அறைவாசிகள் மனக்குப்பைகளை! - சிவபாரதி, திருவாரூர்.
உடைதல் அசையாமல் நிற்கிறது மனம் இளகிய கொக்கு நிலவு உடையுமோ? - விசாகன், திருநெல்வேலி.
தவம் நிலவைக் கலைத்துக் கலைத்து விளையாடுகின்றன மீன்கள். தன் முகத்தை நடுங்காமல் பார்க்க தவமிருக்கிறது நிலா... - தஞ்சை கமருதீன், தஞ்சாவூர்.
குறைதல் மரம் தன் இலையை உதிர்த்த பிறகு இயற்கையெனும் புத்தகத்தில் ஒரு கவிதை குறைகிறது - ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
பிரசவம் மின்னல் விளக்கை அணையாமல் பார்த்துக் கொள் மேகத்திற்கு இன்று மழைப் பிரசவம் - தமிழ்நாயகி, சேலம்.
விசாரிப்பு ஒவ்வொரு மலருக்கும் தெரிந்த மொழியில் நலம் விசாரித்துப் போகிறது வனத்து வண்டு - ஜி.வி.மனோ, தூத்துக்குடி.
|