ஆணழகன் விக்ரம்...





ஷங்கரோட ‘ஐ’க்காக உடல் இளைச்ச விக்ரம், இனி படிப்படியா கும்முன்னு உடலைத் தேற்றப் போறார். படத்துல ‘ஆணழகன்’ மிஸ்டர் மெட்ராஸா வர்ற அவர், ஜிம் வச்சு நடத்துறாராம். கிளைமாக்ஸ், மிஸ்டர் இண்டியாவா... மிஸ்டர் யுனிவர்ஸா..?
இதே படத்தோட இந்தி வெர்ஷனையும் சூட்டோடு சூடா எடுத்து முடிக்கிற ஐடியால இருக்கிற ஷங்கர், அதுல நடிக்க ஷாரூக்கான்கிட்ட பேசி ஒர்க் அவுட் ஆகாததால, டோலிவுட்லேர்ந்து மகேஷ்பாபுவை இந்திக்குத் தூக்க இருக்காராம். ஆந்திராவும் அதுக்குள்ள அடங்கிடும்தானே..?
ரெட்டையர் ஃபீவர் இன்னும் ஓயலை. மலையாளத்துல மம்மூட்டி - நதியா ரெட்டையரா நடிச்ச ‘ட்வின்ஸ்’ தமிழ்ல ‘புதுவை மாநகரமா’ வருது. இதுல மம்மூட்டிக்கு ஜோடி தப்ஸியாம்..! அதான் நதியா எந்த ஹீரோவுக்கும் ஜோடியாக மாட்டாங்களே..?

பூபதிபாண்டியன் டைரக்ஷன்ல விஷால் நடிக்கப் போற படத்துல, அவருக்கு ஜோடி நடிகையைத் தேடிக்கிட்டிருந்தாங்க. அவங்க தேடலுக்கு இப்ப பால் வார்த்திருக்கிறது அமலா பால். இன்னும் இங்கே ஒரு சுற்று வரும்போலத்தான் இருக்கு மிஸ்.பால்..!

‘தடையறத் தாக்கி’ட்டு கொஞ்சம் ஓய்வெடுத்த அருண்விஜய் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகறார். ‘டீல்’னு பேர் வச்சிருக்க படத்துக்கு ராதா மகள் கார்த்திகாவைப் பேசிக்கிட்டிருக்காங்களாம். பாதியில ஓடிடாம பாத்துக்கங்க..!

‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்துல ஜீவாவுக்கு இசையமைப்பாளரா ஆகணும்ங்கிற கனவுல இருக்கிற வேடமாம், ‘வி.டி.வி’ல சிம்புவுக்கு டைரக்டர் கனவு போல! முன்னதுல சிம்பு கனவு பலிச்சு த்ரிஷா கைநழுவினாங்க. இதுல சமந்தா காதலும், ஜீவா கனவும் என்ன ஆகுதோ..?     



பிரபு நடிச்சு சூப்பர்ஹிட்டான ‘சின்ன தம்பி’ வசூலை சினிமாவுலகம் மறக்கலைங்கிறதுக்கு சாட்சி, அவர் ரெட்டை வேடத்துல நடிச்ச ‘பெஸ்ட் ஆஃப் லக்’ மலையாளப் படத்தோட தமிழ் வெர்ஷனுக்கு ‘செல்ல தம்பி’ன்னு டைட்டில் வச்சிருக்கிறதுதான். ‘நல்ல தம்பி’ ஒண்ணு பாக்கி இருக்குங்க..!

‘கழுகு’க்குப் பிறகு ‘சிவப்பு’ படத்தை டைரக்ட் பண்ணிக்கிட்டிருக்க சத்யசிவா, அதுல ஹீரோவா தெலுங்குலேர்ந்து நவீன்ங்கிற நடிகரை இங்கே இன்ட்ரொட்யூஸ் பண்ணவிருக்காராம். ஆந்திராவுக்கும் போக ஆசையா டைரக்ட ருக்கு..?   

கங்கை அமரனோட ‘கோழி கூவுது’ ஞாபகம் இருக்கா..? அதுக்கு சம்பந்தம் இல்லாட்டியும், தன் கதைக்கு அந்த டைட்டில் பொருத்தமா இருக்கிறதா நினைச்ச புது இயக்குநர் கே.ஐ.ரஞ்சித், அதுக்காக கங்கை அமரனை சந்திச்சுக் கேட்க, ஆன் தி ஸ்பாட் சம்மதம் தந்தாராம் அமரன். டைட்டிலுக்கு கோர்ட்டுக்குப் போறவங்க கவனிங்க..!
- கோலிவுட் கோயிந்து

சைலன்ஸ்

பல சினிமாக்காரர்களின் விமர்சனத்துக்கு ஆளான ‘கத்திரி’ ஆபீசரை மாத்த மேலிடத்து உத்தரவு வந்துடுச்சாம். அவரைத் தூக்கறதுக்கு ரெடியாகியிருக்க லெட்டர் சீக்கிரமே பாஸாகிடும்ணும், ஆபீசரோ ‘பக்...’ ‘பக்...’னு ‘சாமி’யை வேண்டிக்கிட்டிருக்கார்னும் அவருக்கு வேண்டாதவங்க நம்பிக்கிட்டிருக்காங்க.

மூணுஷாவுக்கும், ஆந்திர பெரிய வீட்டு வாரிசு ஹீரோவுக்குமான காதல் திரைக்கதை இன்னும் பல சுவாரஸ்யங்களோடதான் போய்க்கிட்டிருக்கு. மேடம் வீட்ல மேரேஜுக்கு ‘ஓகே’ சொல்லிட, சார் வீட்லதான் பயங்கர எதிர்ப்பாம். ஸோ, பார்ட்டிகள்ல பங்கெடுத்து காதலை வளத்துக்கிட்டிருக்காம் ஜோடி. ரா... ரா... வழிக்கு வருவாரா..?