தத்துவம் மச்சி தத்துவம்





‘‘நம்ம கட்சியோட அழகே போயிடுச்சுன்னு தலைவர் அழுது புலம்புறாரே... ஏன்?’’
‘‘மகளிரணித் தலைவி திடீர்னு கட்சி தாவிட்டாங்களாம்...’’
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

என்னதான் டாஸ்மாக்குல ரம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், வோட்கான்னு பல சரக்குகள் இருந்தாலும், அதுக்காக டாஸ்மாக்கை தமிழ்ல பல‘சரக்கு’
கடை ன்னு சொல்ல முடியுமா..?
- மண்டையில் ‘சரக்கு’ உள்ளவர்கள் சங்கம்
- பாளை பசும்பொன், நெல்லை.

பிளேன், டிரெயின், கார்ல போக அட்வான்ஸ் புக்கிங் பண்ணலாம். ஆம்புலன்ஸ்ல போக அட்வான்ஸ் புக்கிங் பண்ண முடியுமா?
- அ.ரியாஸ் அஹமத், சேலம்.

‘‘தலையில அடிபட்டதாலே நம்ம தலைவருக்கு மெமரி லாஸ் ஏற்பட்டுடுச்சா... எப்படிச் சொல்றே?’’
‘‘ஆமாம்... மகளிரணித் தலைவியைப் பார்த்து ‘யாரு நீங்க’ன்னு
கேட்டாரே..!’’
- டி.சேகர், திருத்துறைப்பூண்டி.

என்னதான் ஆவியோட பேசறவர்னாலும் அவரால ‘கொட்டாவி’யோட பேச முடியாது!
- ஆவிகளோடு பேசாமல் அழகான தேவிகளோடு மட்டுமே பேசுவோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘நம்ம கட்சியில சேர்ந்திருக்கற கபாலிக்கு தகுந்த மரியாதையை தலைவர் குடுத்திருக்கார்...’’
‘‘எப்படி..?’’
‘‘கள்ள ஓட்டு அணின்னு ஒண்ணு உருவாக்கி, அதுக்கு அவனைத் தலைவராக்கிட்டார்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘தலைவரை டயட்ல இருக்கணும்னுதானே டாக்டர் சொன்னாரு... அப்புறம் ஏன் அவர் மகளிரணித்தலைவி கூட ஆடிப் பாடிக்கிட்டிருக்காரு..?’’
‘‘அதை ‘டூயட்’னு தப்பா புரிஞ்சுக்கிட்டாரு..!’’
- உ.குணசீல
பாண்டியன், ராஜபாளையம்.