ஜோக்ஸ்





‘‘ஒழுங்கா மாமூல் தராம டபாய்ச்சுக்கிட்டு இருந்த கபாலியைப் பார்த்து ஏட்டய்யா ஏதோ சொன்னாரே... என்ன அது?’’
‘‘கண்ணா, களி தின்ன ஆசையா’ன்னு கேட்டார்!’’
- இரா.பாஸ்கரன், சென்னை-88.

‘‘பிறந்த நாள் விழாவில தலைவர் ஏன் டென்ஷனா இருக்கார்..?’’
‘‘யாரோ கைதி டிரஸ்ஸை அவருக்குப் பரிசா கொடுத்தாங்களாம்..!’’
- அம்பை தேவா,சென்னை-116.

‘‘நான் சொல்லுவதெல்லாம் உண்மை... உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை...’’
‘‘தலைவரே... இது கோர்ட் இல்லே, சட்டசபை! நீங்க பதவி ஏத்துக்கிறீங்க...’’
-எஸ்.கோபாலன், சென்னை-61.

‘‘வர வர கபாலிக்கு போலீஸ் பயமே இல்லாம போச்சு...’’
‘‘ஏன் அப்படிச் சொல்றே..?’’
‘‘உன்னைத் தூக்கி உள்ள போடப் போறேன்னு மிரட்டினா, ‘எனக்கொண்ணும் இல்ல சார். நீதான் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவே’ங்குறான்!’’
- எஸ்.ராமச்சந்திரன்,சென்னை-49.

தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் ஒரு பள்ளத்தாக்குல ஷூட்டிங்குக்கு லொகேஷன் பாத்தாலும், அதையும் லொகேஷன்னுதான் சொல்லுவாங்க; ‘லோ’கேஷன்னு சொல்ல மாட்டாங்க!
- ப்ரிவியூ ஷோ டிக்கெட்டையே பிளாக்கில் விற்று
பணம் பார்ப்போர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

அடி மேல் அடி அடிச்சா அம்மியும் நகரும். அடி மேல் அடின்னு தர்ம அடி அடிச்சா அம்புட்டு பார்ட்ஸும் நகர்ந்துரும்!
- எவ்வளவு அடிச்சாலும் தாங்கி
விழுப்புண் பெற்றோர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

என்னதான் ஒருத்தர் தனக்கு ‘ஸ்டீல் பாடி’ன்னு சொன்னாலும், அதை வச்சு பீரோ, கட்டில் எல்லாம் செய்ய முடியாது!
- ஜிம் பாய்களுக்கு எலும்பு சூப் கொடுப்போர் சங்கம்
- சக்தி இளங்கோ, தஞ்சாவூர்.