கவிதைக்காரர்கள் வீதி





ரசனை

யார் ரசித்திருப்பார்கள்?
இரவில்
பெய்த மழை
- பெ.பாண்டியன்,
காரைக்குடி.

ஏக்கம்

நான் பிடிக்கும்போது
சட்டெனப் பறந்த
பட்டாம்பூச்சி,
குழந்தை
தன்னைப் பிடிக்காதா என
ஏங்குகிறது
- ஏ.மூர்த்தி,
புல்லரம்பாக்கம்.

வரவேற்பு

யாருமற்ற வீடு
வரவேற்கிறது
நேற்றைய வாசல் கோலம்
- செ.அ.ஷாதலி,
தென்காசி.

குறிபபு

அம்மணி அம்மாளுக்கு
படிக்கத் தெரியாது;
எழுதத் தெரியாது.
ஒண்ணு ரெண்டு மூணு
சொல்வாள்.
நம்பர் புரியாது!
எண்பது வயது கடந்தும்
அப்படியே இருந்து
பேருந்து ஏறி நகரம் சென்று
சரியாகப் பேருந்து ஏறி
ஊர் வந்து விடுகிறாள்.
கூட்டமாய் இருப்பதொன்றே
நம்மூர் பேருந்து என்ற
ஒற்றைக் குறிப்போடு!
- பா.விஜயராமன்,
திட்டச்சேரி.

சுவை

சிந்திய பால்சோறு
சுவைத்தது
குழந்தையின் மேனியை
- டி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை-70.