ஹோமோ செகஸ்





 ‘‘Heterosexuality is not normal, it’s just common.’’ Dorothy Parker, American poet.
ஹோமோசெக்ஸ் என்பது, ஒரே பாலினத்தவர் தமக்குள் ஈர்க்கப்பட்டு காதல் மற்றும் காமம் கொள்வதாகும். ஆண் ஆணுடன் என்றால் அது Gay; பெண் பெண்ணுடன் என்றால் அது Lesbian. கி.மு 9660ல் வரையப்பட்ட சிஸிலி தீவின் பாறை ஓவியங்களில் ‘இப்படியான’ ஆண் ஜோடிகள் இருந்தனர். கி.மு 2200ல் எகிப்து அரசர் இரண்டாம் பெபி, தன் தளபதி சேஸ்னெட் வீட்டுக்கு இரவில் அடிக்கடி சென்று வந்தது, வதந்திகளுக்கு கால் முளைக்கச் செய்தது. கி.மு 630ல் க்ரேடே தீவில் கிரேக்க உயர்குடி ஆண்கள், விடலைகளுடன் உறவுகொள்ளும் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

கி.மு 385ல் ப்ளாட்டோ பதிப்பித்த சிம்போஸியமில் கிரேக்க ஞானிகள் ஃபேட்ரெஸ், எரிக்ஸ்மாக்கஸ், அரிஸ்டோஃபேன்ஸ் ஆகியோர், ‘‘ஆண்களுக்கு இடையிலான காதல் உயர்ந்தது, பெண் காமம் லௌகீகரீதியானது’’ என்றனர். கி.மு 350ல் ப்ளாட்டோ பதிப்பித்த லாஸ் என்ற நூலில், ‘‘இனவிருத்திக்குப் பயன்படாத ஓரினச் சேர்க்கை, சமூகத்திற்கு எதிரானது’’ என்றார் ஒரு கிரேக்க ஞானி.
கி.மு 338ல் 150 ஹோமோசெக்ஸ் ஜோடிகளால் ஆன ‘தீபெஸ்’ என்ற படை தோற்கடிக்க முடியாதது எனப் பெயர் பெற்றிருந்தது. கி.மு 26ல் அலெக்ஸாண்டர் பல நாடுகளை வெற்றி கொண்டபோது ஓரினச்சேர்க்கையை ஆதரித்த கிரேக்கத்தின் ஹெல்லெனிஸ கலாசாரம் அங்கெல்லாம் பரவியது.

கி.மு 57ல் கேட்டலஸ் என்பவர் தன் ஓரின இணைக்கு எழுதிய காதல் கவிதைகளை Carmina   என்ற பெயரில் தொகுப்பாக்கினார். கி.மு 42ல் விர்ஜில் என்பவர் Eclogues   என்ற ஹோமோசெக்ஸ் இலக்கியத்தைப் படைத்தார். 54ல் ரோமானிய மன்னன் நீரோ, பித்தாகரஸ், ஸ்போரஸ் என்ற இரு ஆண்களை சட்டபூர்வமாக மணந்துகொண்டான். 98ல் ரோமானிய மன்னன் ட்ராஜன், எடெஸா மன்னன் ஏழாம் அப்கர் மீது கோபம் கொண்டிருந்தான். ட்ராஜனுக்கு அழகான இளம் ஆண்களிடம் இருந்த பலவீனத்தை அறிந்து, தன் மகனை அவனுக்குப் பரிசளித்து சினத்திலிருந்து பிழைத்தான் அப்கர். 130ல் ரோமானிய மன்னன் ஹாட்ரியன், தன் ஹோமோசெக்ஸ் இணையான 19 வயதுப் பையன் மர்மமான முறையில் இறந்துபோனதால், தன் சாம்ராஜ்ஜியம் முழுக்க அவனுக்கு நினைவுச் சின்னங்கள் உருவாக்கினான். 218ல் ரோமானிய மன்னன் எலகாபேலஸ், ஸோட்டிகஸ் என்ற அத்லெட் வீரனை பிரமாண்ட திருமண வைபவத்தில் கை பிடித்தான்.

342ல் இரண்டாம் கான்ஸ்டான்ஷியஸ் மற்றும் கான்ஸ்டன்ஸ் ஆகிய கிறிஸ்தவ மன்னர்கள், ஓரின மணத்துக்கு எதிரான முதல் சட்டத்தைக் கொண்டு வந்தனர். அதன்பின் வந்த அரசர்கள், ஓரினச்சேர்க்கையாளர்களை உயிருடன் எரிக்கப் பணித்தனர். 529ல் முதலாம் ஜஸ்டினியன், ‘‘பஞ்சம், நிலநடுக்கம், தொற்று நோய்கள் ஆகியவற்றுக்கு ஓரினச்சேர்க்கையாளர்களே காரணம்’’ என்றார். ஸ்பெயினை ஆண்ட விஸிகோத்திய அரசு, ஓரினச் சேர்க்கையாளர்களை ஒதுக்கும் சட்டம் இயற்றியது. 693ல் விஸிகோத்திய அரசு கேட்டுக்கொண்டபடி,  ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கசையடி, மொட்டையடித்தல், நாடு கடத்தல் போன்ற கடும் தண்டனைகளை விதித்தது தேவாலய கவுன்சில்.

1102ல் லண்டன் கவுன்சில், ‘ஓரினச்சேர்க்கை ஒரு பாவச்செயல்’ என்று பிரசாரம் செய்தது. 1120ல் ஜெருசலேம் மன்னர் இரண்டாம் பால்ட்வின், திருந்தாத ஓரினச் சேர்க்கையாளர்களை எரிக்க உத்தரவிட்டார். 1232ல் போப் ஒன்பதாம் க்ரெகரி, ஹோமோசெக்ஸ் வைத்து முதல்முறை பிடிபட்டால் நாடு கடத்தவும், மறுபடி பிடிபட்டால் கை, கால் வெட்டவும், தொடர்ந்து செய்தால் எரித்து விடவும் சட்டம் பிறப்பித்தார். 1265ல் கொலைக்கு அடுத்தபடியான குற்றமாக ஹோமோசெக்ஸைக் குறிப்பிட்டார் தாமஸ் அக்யூனாஸ். பிரான்சில் ஹோமோசெக்ஸ் ஆசாமிகளை எரித்ததுடன், அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்தனர்.

880ல் ஆல்குய்ன் என்ற கிறிஸ்தவப் பாதிரியார், கட்டுப்பாடுகளை மீறி, பிற பாதிரிகளுக்கு காதல் கவிதைகள் எழுதினார். 1164ல் ஆங்கிலத்துறவி ஏல்ரெட்,   De spiritali amicitia என்ற தன் நூலில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உணர்வுகளை ஆழமாக விவரித்தார். 1492ல் டெஸிடெரியஸ் எராஸ்மஸ், துறவிகளுக்கு காதல் கடிதங்கள் எழுதினார். 1532ல் ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ 300க்கும் மேற்பட்ட காதல் கவிதைகளை தன் ஜோடியான டொமஸ்ஸோ டி கவலியரிக்கு எழுதினார். 1476ல் லியோனார்டோ டாவின்ஸி மீதும், 1502ல் சான்ட்ரோ போட்டிசெல்லி மீதும், 1523ல் பென்வெனுடொ செலினி மீதும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இவர்கள் யாவரும் ஓவியர்கள். 1895ல் எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் ஹோமோசெக்ஸ் குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வன்சிறை சென்றார்.

1532ல் ரோமானிய அரசு ஓரினச்சேர்க்கையை மரண தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது. 1553ல் எட்டாம் ஹென்றி இதே சட்டத்தை இங்கிலாந்தில் கொண்டு வந்தார். 1553ல் ஆட்சிக்கு வந்த மேரி ட்யூடர் இதை ரத்து செய்தார். பின் 1558ல் அரியணை ஏறிய முதலாம் எலிஸபெத் இச்சட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்தார்.

‘இது இயற்கைக்கு எதிரான குற்றம்’ என்ற வாசகம் முதன்முதலாக அமெரிக்க சட்டப்புத்தகத்தில் இடம்பெற்றது. 1867ல் கார்ல் ஹென்ரிச் உல்ரிச்ஸ் என்பவர் தன்னை ஓரினச்சேர்க்கையாளராக பகிரங்கமாக அறிவித்து, ஜெர்மன் காங்கிரஸில் ஹோமோசெக்ஸிற்கு எதிரான சட்டங்களை நீக்கப் போராடினார்.

பிரான்சில் 1913ல் வெளியிடப்பட்ட In Search of Lost Time, ஹோமோசெக்ஸ் குறித்துப் பேசிய முதல் நவீன இலக்கியப் படைப்பாகும். 1919ல் முதல் ஆண் ஹோமோசெக்ஸ் திரைப்படமான Different from the others வெளியானது. 1926ல் நியூயார்க் டைம்ஸில் ‘homosexuality’   பயன்படுத்தப்பட்டது. ஜனரஞ்சக இதழ்களில் முதல் பிரயோகம் அது! 1928ல் The Well of Loneliness என்ற நூல் இங்கிலாந்திலும், பின் அமெரிக்காவிலும் பிரசுரமாகி ஹோமோசெக்ஸை மக்களிடையே விவாதத்துக்குக் கொண்டுவந்தது. 1938ல் நிணீஹ் என்ற வார்த்தை முதன்முதலாக ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

1933ல் நாஜிக்கள் ஹோமோசெக்ஸ் ஆட்களைப் பிடித்து சித்ரவதை முகாம்களுக்கு அனுப்பினர். 1945ல் நேசநாடுகள் நாஜி சித்ரவதை முகாம்களில் அடைபட்டிருந்தோரை விடுவித்தபோது, இவர்களை மட்டும் சிறையிலேயே வைத்தன.

1954ல் ஆலன் ட்யூரிங் என்ற இங்கிலாந்து கணிப்பொறி வல்லுனர், ஓரினச்சேர்க்கைக்காக கைது செய்யப்பட்ட பின் தற்கொலை செய்து கொண்டார். அன்றைய இங்கிலாந்தில் ஈராண்டு சிறை அல்லது ஓர் ஆண்டு ஹார்மோன் சிகிச்சை... இரண்டில் ஒன்று இதற்கு தண்டனையாகத் தரப்பட்டிருந்தது. 1967ல் வெய்ன்ரைட் சர்ச்சில் என்பவர் ஹோமோசெக்ஸை விஞ்ஞான பூர்வமாக அணுகி,   Homosexual Behavior Among Males   என்ற புத்தகத்தை எழுதினார். 1977ல் அமெரிக்காவின் முதல் வெகுஜன ஹோமோசெக்ஸ் பத்திரிகை   Gaysweek   வந்தது. 1967ல்   The Los Angeles Advocate   பத்திரிகை, Gay பார்களில் வரப்போகும் போலீஸ் ரெய்டுகளை முன்கூட்டியே அறிவித்தது (நம்மூரில் ‘இன்றைய மின்வெட்டு’ போல்!) 1969ல் சான் பிரான்சிஸ்கோ செய்தித்தாள் ஒன்று, பழுப்பு மையை கே லிபரேஷன் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மீது கொட்டியதையடுத்து பழுப்பு கைரேகை அவர்கள் குறியீடானது. 1978ல் வானவில் கொடி ஓரினச்சேர்க்கையாளர் அடையாளமானது. 1973ல் அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு, ஓரினச் சேர்க்கையை மனநோய்களின் பட்டியலிலிருந்து நீக்கியது. 1980ல் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஓரினச்சேர்க்கையை ஆதரித்தது. சோஷலிசக் கட்சி வேட்பாளர் டேவிட் மெக்ரெனால்ட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட முதல் ஓரினச்சேர்க்கையாளர் ஆனார்.

1988ல் ஸ்வீடன் முதல்முறையாக ஹோமோசெக்ஷுவல்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் பிறப்பித்தது. 1989ல் டென்மார்க் முதன்முதலில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்ட பூர்வமாக்கியது. 1992ல் உலக சுகாதார நிறுவனமும், 1994ல் அமெரிக்க மருத்துவக் கழகமும், ‘ஹோமோசெக்ஸ் நோயல்ல’ என அறிவித்தன. 1993ல் அமெரிக்க ராணுவத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் சேரத் தடை விதித்தனர். 2011 வரை இச்சட்டம் அமலில் இருந்தது. 2011ல் பெல்ஜியம் நாட்டில் எரிலோ டி ரூபோ என்ற ஓரினச்சேர்க்கையாளர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1860 இந்தியக் குற்றவியல் சட்டப்படி ஹோமோசெக்ஸ் குற்றம். உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் 2012ல் ஆண் ஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்கி உத்தரவிட்டன. பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் ஒரு சிறுவனுடன் உறவு கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.   Dostana   படத்தில் கதாநாயகர்கள் ஹோமோசெக்ஷுவல்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வதைச் சுற்றித்தான் கதை நகரும். 300,   Skyfall, வேட்டையாடு விளையாடு படங்களில் வில்லன்கள் ஹோமோசெக்ஷுவல்களாக சித்தரிக்கப்பட்டிருப்பர். வடிவேலு ஒரு படத்தில் சொல்லும் ‘அவனா நீ’ என்ற வசனம் மிகப் பிரபலம்.

Stats சவீதா

*  1.7 சதவீத அமெரிக்க ஆண்கள் ஹோமோசெக்ஸில் மட்டும் ஈடுபடுகின்றனர்.

*  அமெரிக்காவிலிருக்கும் திருமணமான ஹோமோசெக்ஷுவல்கள் 12 லட்சம்!.

*  நார்மல் ஆசாமிகளைவிட, ஹோமோசெக்ஷுவல்கள் தற்கொலை செய்துகொள்ள 23 மடங்கு வாய்ப்பு அதிகம்.

*  45 சதவீத ஹோமோசெக்ஷுவல்கள் கேலி, கிண்டல், வசவுக்கு உள்ளாகிறார்கள்.

ஹோமோ செகஸ்


ஆண்டவன் அமைப்பினில்
ஆண்டாண்டாய் அருளும்
ஆண் ஆணை அணையும்
ஆசன, வாசனை வாய்கள்
ஆகாசத் தாமரையாகிடும்
ஆணாதிக்க ஆணை அது!
- கவிஞர் காத்துவாயன்