தலைகால் புரியாத போஸ்





இளைய தலைமுறையினரிடம்தான் நாளைய இந்தியா இருக்கிறது. லட்சியத்துக்காக லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் வெளிநாட்டு வேலையை விட்டு வந்த தேனூர் செந்தில் போன்றவர்கள் உதாரண புருஷர்கள்!
- ரேவதி ப்ரியன், ஈரோடு.

கட்டழகி வேதிகாவை கரி பூசி மறைத்துவிட்டு, ‘அவர் அழகில்லை’ என்னும் பாலாவுக்கு இளைஞர்கள் இ.பி.கோவில் கடும் தண்டனைதான். ஆனால், உருவத்தில் அழுக்காக்கினாலும் நடிப்பில் பட்டை தீட்டிவிடும் கில்லாடியல்லவா பாலா!
- எம்.மிக்கேல்ராஜ், விருதுநகர்.

தனுஷ், பார்வதி நடித்திருக்கும் ‘மரியான்’ பற்றிய கட்டுரை சரியான திரை விருந்து. தனுஷ் நிஜமாகவே சுனாமியில் ஸ்விம்மிங்கைப் போடுவாரா, இல்லையா என்ற ஆவல் இப்போதே பற்றிக்கொண்டுவிட்டது!
- எம்.ஆர்.அனுஷா, பெங்களூரு.

கிராமப்புற இளைஞர்களுக்கு இது போதாத காலம் போல. தைரியமா பேங்குக்கு போய் அக்கவுன்ட் ஆரம்பிக்கவே தயங்குற பசங்க இன்னும் இருக்கும்போது, அவங்களை ‘ஆன்லைனில் பரீட்சை எழுது’, ‘கம்ப்யூட்டர் சர்டிபிகேட் கொண்டு வா’ங்கறதெல்லாம் அடுக்குமா?
- அ.முரளிதரன், மதுரை-3.

விஜய் படத்துல நடிக்கப் போகிறோம்ங்கற சந்தோஷத்துல அமலா பாலுக்கு தலை கால் புரியாம இருக்கலாம். அதுக்காக கால் ரெண்டையும் தலைக்கு மேலே தூக்கி வச்சுக்கிட்டே போஸ் கொடுத்திருக்குறது ஓவர்!
- மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

கெட்டுப்போன ‘ரயில் இறைச்சி’ யில் பிரியாணி போட்டு, சாலையோரங்களில் ‘டங்... டங்...’ என்று டபராவைத் தட்டி, அப்பாவி மக்களுக்கு சாவு மணி அடிக்கும் சங்கதி அதிர்ச்சி ரகம். கட்டுரையில் நல்ல இறைச்சி வாங்குவதற்கான டிப்ஸ்கள்தான் ‘ஹைலைட்’!
- இரா.வளையாபதி, கரூர்; பாலசுப்ரமணியன், தேனி.

‘அன்பே வா’ படத்தில் முதலில் ‘தென்னக ஜேம்ஸ்பாண்ட’ ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. எம்ஜிஆர் ஆசைப்பட்டதால் அவர் விட்டுக் கொடுத் தார் என்பது புதிய தகவல்... அரிய தகவல்!
- ‘மீசை’மூர்த்தி, மஞ்சக்குப்பம்., த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பாலியல் கல்வி அவசியமாக்கப்பட வேண்டிய சூழலில், விவகாரமான விஷயங்களைக் கூட விரசமில்லாமல் எடுத்துச் சொல்லும் ‘ச்சீய் பக்கங்கள்’, சிறப்பான பக்கங்கள்!
- கவியகம் காஜூஸ், கோவை-24.

மாப்பிள்ளை ‘மலேரியா’ வாசுதேவனுக்கு மச்சான் ‘டெங்கு’நாதன் என்கிற கொசு எழுதிய கடிதத்தைப் படித்து வாய்விட்டு சிரித்தேன். வாரா வாரம் ஆல்தோட்ட பூபதி ரவுசு தாங்கலை சாமி!
- எஸ்.பால்பாண்டி, திருப்பூர்.