தத்துவம் மச்சி தத்துவம்





என்னதான் பெரிய தமிழாசிரியரா இருந்தாலும் கையில இருக்கிற தொகையை எண்ணி சொல்லலாம். அதுக்காக வினைத்தொகை, பண்புத்தொகையையெல்லாம் எண்ணி சொல்ல முடியாது!
- கணக்கு போட்டு தமிழ் படிப்போர் சங்கம்
- ஏ.ஸ்ரீதர், பொன்மேனி புதூர்.

‘‘ஆனாலும் தலைவர் ரொம்ப மோசம்...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘மீட்டிங்ல தன் பேச்சுக்கு நடுவே கைதட்டறதுக்காக கட்சியில ‘கை தட்டல் அணி’ன்னு ஒண்ணு உருவாக்கியிருக்காரே...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘மன்னர் புறமுதுகு காட்டி ஓடி வரும்போது இளம் பெண்கள் குறுக்கே வந்து விழறாங்களே... ஏன்?’’
‘‘மன்னர் ஓட்டத்தைத் தடுக்கறதுக்காக எதிரி மன்னன் வச்ச ‘கன்னி வெடி’தான் அது..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

என்னதான் அரசியல்வாதிகள் அடிக்கடி பல்டி அடிக்கிறதா சொன்னாலும், பொலிட்டிகல் சயின்ஸ் படிப்பை ‘பல்டி மீடியா படிப்பு’ன்னு சொல்ல முடியாது.
- மல்டி மீடியா லெவலில் தத்துவம் சொல்வோர் சங்கம்
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘இந்தம்மா என்ன சிறப்பு பூஜை பண்றாங்க..?’’
‘‘மெகா சீரியல்கள்ல வர்ற அத்தனை பெண்களின் கஷ்டமும் உடனே தீரணுமாம்..!’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.

‘‘வீட்ல புதுசா ஹோம் தியேட்டர் வாங்கி வச்சது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன் சார்... என்னாச்சு?’’
‘‘ரோட்ல பாப்கார்ன் விக்கிறவர், இப்ப வீட்டுக்குள்ளேயே வந்துட்டுப் போறார்..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

நூல்கண்டுல நூல் இருக்கும்; கற்கண்டுல கல் இருக்குமா?
- கற்கண்டாய் இனிக்கும் தத்துவங்கள்
சொல்வோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.