பஞ்ச்!





‘‘ஆம்பளைங்க போடுறது இன்றைய கணக்கு, பொம்பளைங்க போடுறது நாளைய கணக்கு, பையன்கள் போடுறது மனக் கணக்கு, பொண்ணுங்க போடுறது திருமணக் கணக்கு, ஏழைங்க போடுறது நாள் கணக்கு, பணக்காரங்க போடுறது பணக் கணக்கு, அரசியல்வாதி போடுறது ஓட்டுக்கணக்கு, ஜனங்க போடுறது நம்பிக்கைக் கணக்கு, மனுஷங்க போடுறது தப்புக் கணக்கு, ஆண்டவன் போடுறது பாவக் கணக்கு... இந்த அண்ணாமலை போடுறது நியாயக் கணக்கு!’’

‘‘நான் எப்ப வருவேன்... எப்படி வருவேன்னு தெரியாது... ஆனா, வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்!’’

*  ‘‘கண்ணா... பன்னிங்கதான் கூட்டமா வரும்; சிங்கம் சிங்கிளாதான் வரும்!’’

*  ‘‘சாகுற நாள் தெரிஞ்சா, வாழுற நாள் நரகமாகிடும்!’’

*  ‘‘கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்கிறது கிடைக்காது!’’

*  ‘‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி...’’

*  ‘‘நான் சொல்றதைத் தான்  செய்வேன்... செய்யறதைத்தான் சொல்வேன்!’’

*  ‘‘ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் முடிக்கிறான்!’’

‘‘நீ விரும்புற ஆளவிட, உன்ன விரும்புற ஆள கல்யாணம் பண்ணினா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்!’’

*  ‘‘அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது!’’

‘‘நல்லவங்கள ஆண்டவன் நிறைய சோதிப்பான்; ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான்; ஆனா கைவிட்டுருவான்!’’