தத்துவம் மச்சி தத்துவம்





‘‘இன்னைக்கு என்னைக் கைது பண்ணப் போறாங்கன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல ‘இன்றைய ஸ்பெஷல்’னு உங்க பேரை எழுதியிருக்காங்க தலைவரே..!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘மகளிரணித் தலைவிக்கு ‘கட்டிங் கனகா’ன்னு ஏன் தலைவரே பேர் வச்சீங்க..?’’
‘‘அவங்களைப் பார்த்தா அவ்வளவுதான்யா போதை ஏறுது..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

என்னதான் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆக இருந்தாலும், அங்க நல்லெண்ணெய் விப்பாங்க; கடலை எண்ணெய் விப்பாங்க; ஆனா ‘கச்சா எண்ணெய்’லாம் விக்க மாட்டாங்க!
- பெட்ரோல் பங்க்கில் வெயிட் பண்ணும் நேரத்திலும் சிந்திப்போர் சங்கம்
- பூவேந்தரசு, கம்பைநல்லூர்.

மரண கடி
ராமசாமியின் மொபைலுக்கு பேச, அவசரத்தில் தவறான நம்பரை அழுத்தி விட்டார் குப்புசாமி. எதிர் முனையில், ‘ராங் நம்பர்’ என்று பதில் வந்தது. மறுநாள் ராமசாமியை சந்தித்தபோது குப்புசாமி கேட்டார்... ‘‘ஏம்பா! பத்தாயிரம் ரூபா கொடுத்து போன் வாங்கினியே... ‘ரைட் நம்பரா’ கேட்டு வாங்கியிருக்கக் கூடாதா..?’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘இனாம் கேட்க வந்த கூர்க்காகிட்ட தலைவர் அப்படி என்ன கேட்டாருன்னு நீ இப்படி சிரிக்கறே..?’’
‘‘என்னை அரெஸ்ட் பண்ண வந்திருக்கீங்களே... வாரன்ட் இருக்கா?ன்னு கேட்டார்...’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘தலைவர் மீட்டிங்குக்கு எப்படி இவ்வளவு பெண்கள் கூட்டம் வந்திருக்கு..?’’
‘‘மீட்டிங் முடிச்சதும், ‘குடும்பச் சண்டையில் மாமியாரை வெல்வது எப்படி’ன்னு வகுப்பு எடுக்கப் போறாராம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘பஸ் ஸ்டாப்’ல பஸ் நிற்கும்; ‘ஃபுல் ஸ்டாப்’ல ‘ஃபுல்’லை நிறுத்தி வைக்க முடியுமா?
- ‘ஃபுல்’ அடித்து, புல்லில் மல்லாக்க சாய்ந்து யோசிப்போர் சங்கம்
- ஆர்.பி.ஜெயச் சந்திரன்,
பூனாம்பாளையம்.