நியூஸ்வே





போப் பதினாறாம் பெனடிக்ட், ட்விட்டருக்கு வந்திருக்கிறார். @pontifex என்பது அவரது ஹேண்டில். மத நம்பிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும்விதமாக அவரது ட்வீட்டுகள் அமையும். பிரபலமான எட்டு மொழிகளில் ட்வீட் செய்வார் போப். ஏற்கனவே ட்விட்டரில் இருக்கும் பிரபல மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு 50 லட்சம் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். போப் சீக்கிரமே அவரைத் தாண்டிவிடக்கூடும் என்கிறார்கள்.

ஒரு ஃபேஷன் நிகழ்ச்சிக்காக கோவா வந்திருந்தார் பாரிஸ் ஹில்டன். கூடவே அவரது பாய் ஃபிரண்ட் ரிவர் வைபேரி. யானை மீது அமர வைத்து நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றதில் நெகிழ்ந்துபோன ஹில்டன், மறக்காமல் மும்பை சென்று சித்தி விநாயகரைக் கும்பிட்டார். அவர் வீட்டிலேயே விநாயகர் சிலை இருக்கிறதாம்!

குஜராத் தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடியை எதிர்த்து மணி நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாகக் களமிறங்கி இருக்கிறார் ஸ்வேதா பட். ‘‘குஜராத் மதக் கலவரங்களில் மோடிக்கு நேரடித் தொடர்பு இருக்கிறது’’ என வெளிப்படையாக குற்றம் சாட்டியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி இவர். 48 வயதாகும் ஸ்வேதா தனது பிறந்த நாளில் வேட்புமனு செய்தார். சொந்தமாக ஒரு ஐ.டி நிறுவனம் நடத்திவரும் ஸ்வேதா, இந்த முறை மோடியை சுலபத்தில் ஜெயிக்க விட மாட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பெண்கள் செல்போனில் பேசத் தடை விதித்திருக்கிறது பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் சுந்தர்பாரி பஞ்சாயத்து. திருமணமாகாத பெண்கள் செல்போனை தொடக்கூடாது; மணமான பெண்கள் வீட்டுக்குள் மட்டும் பேசலாம். தடையை மீறும் திருமணமாகாத பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்; திருமணமான பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம். பெண்களைக் கண்காணிக்க கமிட்டியும் போட்டிருக்கிறார்கள்.

‘‘ஹேமமாலினியின் கன்னங்கள் போல பீகாரில் ரோடு போடுவேன்’’ என ஒரு காலத்தில் லாலு பிரசாத் யாதவ் சொன்னது புகழ்பெற்ற வாசகம். அதே ஹேமமாலினியே ஒரு ரோடால் டென்ஷனாகி விட்டார். பா.ஜ.கவின் முக்கிய தலைவராக இருக்கும் அவர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் குவாலியரிலிருந்து தாடியா என்ற நகருக்கு காரில் போனார். ரோடு மோசமாக இருப்பதைப் பார்த்து கொதித்துப் போன அவர் அதிகாரிகளிடம் பேச, இப்போது ரோட்டுக்கு விமோசனம் வந்திருக்கிறது. மக்கள் அந்த ரோடுக்கு அவர் பெயரை வைப்பதாக இருக்கிறார்கள்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் ரிக்கி பான்டிங். டெஸ்ட் மேட்ச்களிலும், ஒருநாள் போட்டிகளிலும் இவரது பல சாதனைகள் இரண்டாம் இடத்திலேயே இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் என்ற சகாப்தத்தின் நிழலில் மறைந்து போன பல வீரர்களில் பான்டிங் குறிப்பிடத்தக்கவர். ஆனால், சச்சினால் முடியாத ஒரு சாதனை இவருக்குச் சொந்தம். அது, நூறு டெஸ்ட் போட்டிகளில் வென்ற அணியில் இருந்தது!

விஜய் மும்பையில் ஷூட்டிங்கில் இருந்தாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மகனை அழைத்து, கூடவே வைத்துக்கொள்கிறார். சினிமாவைப் பார்த்துப் பார்த்து அடுத்த வாரிசு உருவாகிறதோ என்னவோ!
திலகவதி ஒரு எழுத்தாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தேர்ந்த புகைப்பட கலைஞரும் கூட. வெளியூர் செல்லும்போது அவரது பயணப்பெட்டியில் கேமராவிற்கும் இடம் இருக்கும்.

டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கர் கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார். ஒரு திருமணத்துக்காக மனைவி லில்லியுடன் வந்திருந்த அவர், ஆசையாகப் போய்ப் பார்த்தது தாஜ்மகாலை! பாலிவுட் நடிகர் வினோத் கன்னாவையும் சந்தித்து, சினிமா பற்றி பேசியிருக்கிறார் பெக்கர். சீக்கிரமே இந்தி சினிமாவில் அவர் தலை காட்டினாலும் ஆச்சரியமில்லை!

திலகவதி ஒரு எழுத்தாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தேர்ந்த புகைப்பட கலைஞரும் கூட. வெளியூர் செல்லும்போது அவரது பயணப்பெட்டியில் கேமராவிற்கும் இடம் இருக்கும்.

வாய்ஸ்:
‘‘எனக்கு 60 வயது ஆகியிருக்கலாம். ஆனால் எனக்குள் இன்னும் தீ கனன்று எரிகிறது. இளமையான இசையை இப்போதும் என்னால் தர முடியும்!’’
- இசையமைப்பாளர்
பப்பி லஹரி

‘‘நாகரிகத்தின் தொட்டில் என ஒரு காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட நமது தேசம் இப்போது கல்வி, எழுத்தறிவு, ஞானம் என எல்லாவற்றிலும் வறுமையில் இருக்கிறது!’’
- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  

===
அடுத்த நாள் சீனுக்கான டயலாக்குகளை, உதவி இயக்குனர் ஒருவரை துணைக்கு வைத்துக்கொண்டு முந்தின நாளே கேட்கிறார் ஹன்சிகா. ரூமுக்குத் திரும்பியதும், உதவி இயக்குனரிடம் பேசி, நடித்துக் காட்டி ஹோம் வொர்க் செய்கிறார். இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரீ டேக்கிற்கு இடமின்றி அசத்துகிறார். (தப்புக் கணக்கு போடாதீங்க! அந்த உதவி இயக்குனர் ஒரு பெண்.)

‘பிரியாணி’ படத்திற்காக ஒரு பாடல் பாடியிருக்கிறார் கார்த்தி. அது சக்சஸ் ஆனால், நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலைத் தட்டிவிட ஆசையாம்.

சைலன்ஸ்:

லேட்டஸ்ட் ஹீரோவான அந்த பெரிய வீட்டுப் பையன், கொழுப்பை உறிஞ்சியெடுக்கும் சிகிச்சையில் உடல் குறைத்தாராம். அதன் பக்கவிளைவாக, ஷூட்டிங்கில் அடிக்கடி சோர்வு காட்டுகிறாராம். எப்படி சொல்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது யூனிட்.
கலைக் குடும்பத்திலிருந்து பிரிந்திருந்த மூத்த பறவை மறுபடியும் தாய் வீடு போய்ச் சேர்ந்துவிட்டது. ஆனால் மீதி இரண்டு பறவைகளும் தாய்ப்பறவை மீது கோபம் கொண்டு வீட்டுக்கு வெளியேதான் சந்திக்கிறார்களாம். ‘குழந்தைகளை பள்ளிக்கூடம் கொண்டு போய் விடுவதில் பிஸியானால் சரி, அடுத்த கல்யாணத்திற்கு பொண்ணு ரெடியாகக்கூடாதே’ என தாய்க்குலம் படு கவலையில் இருக்கிறது.
முன்பெல்லாம் நடிகர் வாரிசுக்குத்தான் நடிகைகள் அஞ்சி பயப்படுவார்கள். இப்போது அந்த பயம் ஒல்லி நடிகருக்குத்தான் போய்ச் சேர்கிறது. வீட்டில் இருக்கிற பிரச்னைகளால், வெளியேதான் இப்படி சந்தோஷமா இருக்க முடிகிறதாம் நடிகரால்.  
ஆக்டர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது என்பது சம்பிரதாயமாகி விட்டது. மலேசியாவில் கௌரவமிக்க ஒரு பட்டத்தை வாங்குவதற்காக அந்த சீனியர் வில்லன் நடிகர் ஆசையோடு சென்றார். ஆனால் ஏற்கனவே பட்டம் வாங்கிய பலரும் கூடி எதிர்ப்பு தெரிவிக்க, வெறுங்கையோடு திரும்பியிருக்கிறார் வில்லன்.

விக்ரமின் மகன் துருவ் நடிகர் ஆவதற்கு முன்பே தேர்ந்த புகைப்படக் காரராக ஆகிவிடுவார் போலிருக்கிறது. ஒரு கண்காட்சி வைக்கிற அளவுக்கு அவர் எடுத்த புகைப்படங்கள் கலெக்ஷனில் இருக்கின்றன.

அருப்புக்கோட்டையில் ஆரம்பித்து ஆந்திரா வரை அஜித்தின் பிறந்த ஊரென்று எழுதி வருகிறார்கள். ஆனால் அஜித் பிறந்தது, வளர்ந்தது, ஜெயித்தது எல்லாமே பேட்டை ஏரியாதான். பால்ய பருவம் வரை சிந்தாதிரிப்பேட்டையில்தான் அஜித் வீடு இருந்திருக்கிறது. ‘தல’யாக வளர்ந்த பிறகு ஆழ்வார்பேட்டையில் நீண்ட காலம் இருந்தார்.