குட்டிச் சுவர் சிந்தனைகள்
 அம்மா மெஸ் வந்தாச்சு... பல அலுவலர்கள் சும்மா இருந்ததால அம்மா நேரடி குறை தீர்ப்பும் வந்தாச்சு... அம்மா காய்கறிக் கடை வந்தாச்சு... அடுத்து தமிழக மக்களை இன்பத்தில் ஆழ்த்தி, உடல் நோகாமல் வாழ வைக்க வேற என்னென்ன வரலாம்? இதோ சில ஐடியாக்கள்... - இட்லியையே ஒரு ரூபாய்க்கு சந்தோஷமா சாப்பிடறோம். அடுத்து, வயிறு செரிக்க டீ குடிக்கப் போனா அது ஆறு ரூபாயாம். காபி பத்து ரூபாயாம். இதல்லாம் மேலிடத்துக்குப் போகாமலா இருக்கும். அதனால பொதுமக்கள் பயன்பெறுமாறு எட்டணாவிற்கு டீயும், முக்கால் ரூபாய்க்கு காபியும் விற்கும் அம்மா டீக்கடைகள் சீக்கிரமே வரணும்.
- பொரிச்ச கோழி 140 ரூபா, உரிச்ச கோழி 110 ரூபா, ஆனா உயிருடன் கோழி வெறும் 80 ரூபான்னு ஒரு லாஜிக்கே இல்லாம விக்கிறாங்க. ஒரு உயிருக்கு மைனஸ்லதான் மதிப்பா? அதனால மக்கள் பயன்பெறுமாறு குறைந்த விலையில் சிக்கன் கடைகள் அவசியம். (ஈவ்னிங் அங்கே பக்கோடாவும் போடணும்!)
- காதலுக்கும் செல்போன் கம்பெனிகளுக்கும் நம்ம நாட்ல எப்பவும் வளர்ச்சிப் பாதைதான். ஆனா பாருங்க... இந்த டாப்பு கழண்ட பயலுங்க, பொண்ணுங்களுக்கும் சேர்த்து டாப் அப் பண்ணியே டப்பு இல்லாம தவிக்கிறானுங்க. ஸோ, இளைஞர்கள் பயன்பெறுமாறு இலவச அல்லது குறைந்த பணத்தில் அம்மா மொபைல் ரீசார்ஜ் கடை கட்டாயம்.
- டாஸ்மாக்லயே கட்டிங் 40 ரூபாதான்... இந்த சலூன் கடைக்காரங்க ஒரு கட்டிங்குக்கு 100 ரூபா வாங்குறாங்க. அதனால குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் மக்கள் அழகாக, தமிழகமெங்கும் அழகு நிலையங்கள் அத்தியாவசியம்.
- வேட்டி விலை 200, ஆனால் பாருங்க... அதை ரெண்டா கிழிச்ச மாதிரி சிம்பிளா தைக்கிற பேன்ட்டுக்கு தையல் கூலி 400 ரூபா! ஒரு கல்யாண ஜாக்கெட் தைக்க ஆயிரக்கணக்குல பில்லு தீட்டுறாங்க. அதனால தமிழ்நாடு எங்கும் கிளை பரப்பி வரணும் மலிவு விலை டெய்லரிங் கடைகள். லேடீஸ் டெய்லரிங் கடைகள் அதிகமா இருந்தா இன்னமும் பெட்டர்.
- தியேட்டர் டிக்கெட் விலையே 100 ரூபாதான். ஆனா கேன்டீன்ல பாப்கார்ன், கூல்டிரிங்க் செலவு 200 ரூபா, பைக் நிறுத்த 20 ரூபா. ஆக, ‘அம்மா திரையரங்க கேன்டீன் மற்றும் பைக் நிறுத்துமிடம்’ இப்போ உடனடித் தேவை.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அம்மா பீச், அம்மா பார்க், அம்மா பிள்ளையார் கோயில் எல்லாம் வந்திடணும். இதுங்களோட ஒரு முக்கியமான விஷயமும் வரணும்... அது அம்மா ஏ.டி.எம். அதுல பத்து ரூபாய விட்டா 10 ஒரு ரூபாயா சில்லறை வரணும். மேலே சொன்ன எல்லா இடங்களுக்கும் போயிட்டு வர சில்லறை வேணும்ல! - மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும், வாரத்தில் எந்தெந்த நாள் ஸ்பெஷல் கிளாஸ் இருக்குமென்று! மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், வாரத்தில் எந்த நாள் ஸ்பெஷல் கிளாஸ் இருந்தாலும், அதில் மகன்கள் இருக்க மாட்டாங்க என்று!
- மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும், மகளுக்கு எவ்வளவு காசு கொடுத்தாலும் செலவு செய்யாமல் மிச்சம் வச்சிருப்பாங்க என்று! மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், பையனுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை மிச்சம் வைக்காம ஏதாவது பொண்ணுக்கு செலவு செய்திருப்பான் என்று!
- மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு நல்லாவே தெரியும், தன் பொண்ணுக்கு பரீட்சையன்று வரும் சந்தேகம், என்னென்ன கேள்விகள் வரும் என்று! மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு நல்லாவே தெரியும், தன் மகனுக்கு பரீட்சையன்று வரும் சந்தேகம், அன்னைக்கு என்ன பரீட்சையென்று!
- மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு நன்றாகத் தெரியும், மகள்களின் தலையெழுத்து அவர்களிடம் இருக்கிறதென்று! மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு நன்றாகவே தெரியும், அப்பாவின் கையெழுத்தைக் கூட மகன்களே போட்டுக்குவாங்க என்று!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குப் புரியும், தன் தாயும் தமக்கைகளும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று! மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே புரியும், தாங்கள் தங்கள் அப்பாக்களை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்திவிட்டோம் என்று! - மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே பயம் இருக்கும், நம்ம பொண்ணு ஒரு வீணாப் போனவனை லவ் பண்ணிடுவாளோ என்று! மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே ஒரு தைரியம் இருக்கும், பையன் வீணாப் போற மாதிரி இருந்தாலும் லட்சுமிகரமா ஒரு பொண்ணப் புடிச்சுடுவான் என்று!
‘எதையும் பாசிட்டிவா நினைங்க, நல்லவிதமா யோசிங்க’ன்னு எல்லாரும் சொல்றாங்க. நானும் விட்டத்தப் பாத்து கண்ணு முட்ட முட்ட யோசிச்சதுல தோணுன பாசிட்டிவ் விஷயங்கள்... - பனியன் ஜட்டியில் இருப்பது ஓட்டையல்ல... அது காத்து போயி வர்ற வென்டிலேஷன்.
- மூஞ்சில முளைப்பது வீணாப் போன தாடியில்ல... சலூன் கடைக்காரர் நீர்ப் பாசனமிட்டு அறுவடை செய்யும் வயல்.
- எருமை மாடு மழையில நனைஞ்சுக்கிட்டே இருப்பது சோம்பேறித்தனமல்ல... அது ஜாலியா தேய்ச்சு குளிக்கலாமான்னு நிதானமா பண்ணுற சிந்தனை.
பொண்ணுங்கள வெறிச்சுப் பார்த்து தெறிச்சு ஓட வைக்கிறது சைட் அடிக்கிறது இல்லை... அது ஸ்கேனிங். - வாத்தியார் பாடம் நடத்தறப்ப சில பசங்க போடுறது தூக்கமல்ல... மனசுக்குள் பாடத்தை ஒப்பிச்சு பாக்கிறாங்க.
- பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி சமையலைப் புகழ்வது அல்பத்தனம் அல்ல... அது சமூக அக்கறை!
- சில பெண்கள் தங்கள் கணவரிடம் இருந்து பெறுவது விவாகரத்து அல்ல... சுதந்திரம்.
- மன்மோகன் சிங்குக்கு எதுவும் தெரியாது என்பது உண்மையல்ல... அது பெரியவர்கள் மீது காட்டும் பணிவு.
- எப்படியும் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கப்போறாள்னு தெரிஞ்சும் பையன் பண்றது செலவு அல்ல... அடுத்தவர் மீதான அன்பு.
முதல்வர் எது செய்தாலும் முன்னாடி வந்து புகழும் சுப்ரீம் ஸ்டார் கட்சி ச.ம.க அல்ல... ஆமாக்கா! - மனைவி திட்டும்போது கணவன் ஒண்ணுமே பேசாமல் இருப்பது கையாலாகாத்தனம் அல்ல... அது ஒரு ஜென் நிலை!
|