
‘‘எண்பதுகளின் திரை உலகக் கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து ‘கெட்டுகெதர்’ நடத்தணும்’’ என்ற மணிவண்ணனின் இறுதி ஆசை, வாழும்போதே வேற்றுமை களைந்து ஒன்றுபட வேண்டும் என போதித்துள்ளது. திரை உலக ‘ராஜா’க்கள் இதை உணர்ந்தால் சரி!
- ரேவதி ப்ரியன், ஈரோடு; எஸ்.சாந்தி, காட்பாடி; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.மூட நம்பிக்கைதான் என்றாலும், துயரத்தோடு வருபவர்களுக்கு ‘நல்லதாக நாலு வார்த்தை’ சொல்லும் கிளி ஜோசியக்காரர்களின் வாழ்வு போற்றப்பட வேண்டிய ஒன்றே!
- எஸ்.பிரசன்னகுமார், வேலூர்; மயிலை கோபி, சென்னை-83; கே.டி.முத்துவேல், கருப்பூர்; எஸ்.கோபாலன், சென்னை-61.பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்துவரும் ஸ்ரேயாவின் பணி சிறக்கட்டும். அம்மணியைப் பார்த்து பிற நடிகைகளுக்கும் இப்படிப்பட்ட எண்ணங்கள் பிறக்கட்டும்!
- டி.கே.ஸ்டீபன் சார்லஸ், புதுச்சேரி.
அட்டைப் படத்தில் ப்ரியா ஆனந்த் ரொம்ப ‘ஃப்ரீயா’ இருக்காங்க. கண்களில் கவர்ச்சி காட்டி சுண்டி இழுக்கும் அவங்க, யாருக்கோ கடும் போட்டியா வருவாங்கன்னு தோணுது!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர். வாவ்! காசியைப் பற்றி அரிய தகவல்களுடன் கூடிய சௌம்யாவின் புகைப்படங்கள் சூப்பர். ‘காசி’ என்பது, கடைசி காலத்தில் பார்க்க வேண்டிய தலம் என்ற நினைப்பை அவை முற்றிலும் மாற்றிவிட்டன!
- சக்தி இளங்கோ, தஞ்சாவூர்; எஸ்.என்.பாலசுப்ர மணியன், தேனி; எஸ்.பஞ்சலிங்கம், திருப்பூர்; அரிமாநாயகி, சென்னை-39.‘ஏன் அரசியலுக்கு வரணும்னு தோணலை?’ என்று ஷாருக்கிடம் நீங்கள் கொளுத்திப்போட, அவர் புத்திசாலித்தனமாக பதில் சொல்லி கழுவுற மீனில் நழுவுற மீனாகி விட்டாரே!
- எஸ்.குணசேகரன், சீர்காழிஅடுத்தடுத்து இந்திப் படங்களில் வாய்ப்பு வந்தாலும், நடிகர் தனுஷ் ‘‘தமிழ்ப் படங்களை விட்டு எங்கும் போக மாட்டேன்’’ என்று சொல்லியிருப்பது டச்சிங் தமிழ் சென்டிமென்ட்! வெல்டன் தனுஷ்!
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தேறியிருக்கும் இயற்கையின் கோர தாண்டவத்துக்குக் காரணம் மனிதர்களே என உங்கள் கட்டுரை ‘புட்டுப் புட்டு’ வைத்துவிட்டது. இனியாவது மத்திய, மாநில அரசுகள் விழித்துக்கொள்ளுமா?
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.ரூபாய் மதிப்பிழப்பதன் சங்கிலித் தொடர் விளைவுகளை விளக்கிய குங்குமத்துக்கு நன்றி. இதனால், ஏற்கனவே துண்டு விழும் நம் மாதாந்திர பட்ஜெட்டில் குண்டு விழப் போவதை நினைத்தால் பதறுகிறது.
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி;
இரா.கல்யாணசுந்தரம், அனுப்பானடி.