நியூஸ் வே
 - எஸ்.ஜே.சூர்யா ‘இசை’ படத்தை முடிக்கிற வழியாகக் காணோம். கதாநாயகனாக நடித்தும் எந்த முயற்சியும் பெரிய இடத்தைப் பெறவில்லை. இப்போது இறங்கி வந்து, கேரக்டர் ரோல்களில் நடிக்க முடிவு செய்துவிட்டாராம். இந்தப் படத்தோடு தயாரிப்பையும் கைவிடுவதாக செய்தி.
- சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என கேட்கப்பட்ட அத்தனை மொழி கேள்விகளுக்கும் அட்சர சுத்தமாக அந்தந்த மொழியிலேயே பதில் அளித்தார் கமல். இத்தனைக்கும் பள்ளியிறுதியைத் தாண்டாதவர் அவர். மீடியாவே மூக்கின் மீது கை வைத்ததாம்.
- இந்தத் தடவை பிறந்தநாளுக்கு விஜய் ரசிகர்களையோ, நண்பர்களையோ சந்திக்கவில்லை. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுத்ததும் ஒரு காரணம். ‘ஜில்லா’ யூனிட்டிற்கு பிரியாணி போட்டதோடு முடித்துக்கொண்டார். ரசிகர்களை சந்திக்காத அப்செட்டில் இருந்தவர், ‘ஜில்லா’ ஷூட்டிங் ஸ்பாட் போனதும் கலகலப்பாகி விட்டார்.
- நடிகராகக் களமிறங்கியுள்ள கவிஞர் சினேகன், அடுத்து வரலாற்றுக் கதை ஒன்றில் நடிக்கிறார். ‘ராஜராஜ சோழனின் வாள்’ என பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படம், மெகா பட்ஜெட்டில் தயாராக உள்ளதாம்.
- மலையாளத் திரையுலகில் எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்ட சீனிவாசனின் மூத்த மகன் வினித் சீனிவாசன் வெற்றிப் படங்களாகக் கொடுத்து ஒரு இயக்குனராக கலக்கிக்கொண்டிருக்க, சீனிவாசனின் இளைய மகன் தியானும் சினிமாவுக்கு வந்துவிட்டார். தம்பியை ஹீரோவாக வைத்து ‘தீர’ என்னும் படத்தை இயக்குகிறார் அண்ணன் வினித்.
- சிம்புவும் விடிவி கணேஷும் நெருங்கிய நண்பர்கள். பாடுவதைத் தவிர மற்றபடி நண்பர்களுக்கு எதையும் செய்யாத சிம்பு, கணேஷின் ‘இங்க என்ன சொல்லுது’ படத்திற்காக ஒரு பாடலைப் பாடியும் ஆடியும் கொடுக்கிறார். இதற்கான ஷூட்டிங்தான் காஸ்ட்லி. லண்டனில் நடக்கிறது.
- அர்ஜுன் இயக்கும் ‘ஜெய்ஹிந்த் 2’வில் கவுண்டமணிக்கு பதில் பிரம்மானந்தம் காமெடி பண்ணுகிறார். கவுண்டமணியிடம் அர்ஜுன் பலமுறை கேட்டும், கவுண்டர் கால்ஷீட் தராததால்தான் இந்த முடிவு.
- ஹீரோவான பிறகும் வாடகை வீட்டிலேயே குடியிருக்கிறாராம் மிர்ச்சி சிவா. ‘‘கோடியில சம்பளம் வாங்குறேன்னு எழுதுங்க சார். அப்படியாவது எனக்கு சம்பளம் ஏறுதான்னு பார்ப்போம்’’ என பத்திரிகையாளர்களிடம் சொல்கிறார்.
- ‘கடல்’ படம் ரிலீசாகி கையைச் சுட்டபோதும் லிங்குசாமி மணிரத்னத்திடம், பணத்தை திருப்பிக் கேட்டு எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. இப்போது விக்ரமனின் ‘நினைத்தது யாரோ’ படத்தை தானே வாங்கி வெளியிடுகிறார். அதற்கு ஒரே காரணம், குரு பாசம்தான். விக்ரமனிடம் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்திருக்கிறார் லிங்கு.
- நயன்தாராவோடு படத்தில் ஜோடி சேரத்தான் இங்கேயிருக்கிற ஹீரோக்களுக்கு க்ரேஸ். அஜித்தோடு கடைசியாக இணைந்த நயன், இப்போது ஜெயம் ரவியோடு இணைகிறார். ‘நிமிர்ந்து நில்’ படத்திலேயே நடித்திருக்க வேண்டியவர், மிஸ் செய்ததை இப்போது பிடித்துவிட்டார்.
- ‘கதைக்குத் தேவைப்பட்டால் கிளாமராக நடிப்பேன்’ என்று இங்கு சொல்லும் நடிகைகள் தெலுங்கில் மட்டும் கதைக்குத் தேவைப்படாவிட்டாலும் கிளாமருக்கு க்ரீன் சிக்னல் காட்டி நிற்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட், எமி ஜாக்ஸன். ராம்சரணின் ‘யவடு’ படத்தில் பிகினி உடையில் படு கிளாமராக நடித்திருக்கிறார்.
- கவிஞர் சல்மாவின் வாழ்க்கை வரலாறு 91 நிமிடம் ஓடும் ஆவணப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இயக்கியவர், புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஆவணப்பட இயக்குனரான கிம். அதன் வெளியிடலுக்காக லண்டன் போயிருக்கிறார் சல்மா.
- இன்றுவரைக்கும் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டி அப்துல்கலாம்தான். அதைப் பயன்படுத்தி ஒரு ஆல்பம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. இதற்காக டெல்லி போய் கலாமை சந்தித்தும் விட்டார். ஐடியா ரீதியாக கலாம் ஓகே சொல்ல, அடுத்த கட்ட வேலைகள் நடக்கிறது. கலாம் நடிப்பது ஆச்சர்யம்தான்!
- வெகுநாட்களுக்குப் பிறகு அஜித்தும், சுந்தர்.சியும் மறுபடியும் சேர்ந்து படம் செய்யப் போகிறார்கள். அதற்கான கச்சிதமான திரைக்கதையை உருவாக்குவதில் பிஸியாக இருக்கிறார் சுந்தர். இன்ச் பை இன்ச் கதை சொல்லி சுந்தருக்கு பழக்கமே இல்லாததால், அவரை மட்டுமே நம்பித்தான் எல்லோரும் அவரிடம் படம் ஒப்புக் கொள்வார்கள். அப்படியேதான் இந்தத் தடவையும் அஜித் ஒன்று சேர்கிறார்.
என்னைப் பற்றி கிசுகிசு வந்திருச்சே என்று கவலை வடிக்கும் நட்சத்திரங்களுக்கு இடையே இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ஆசை வித்தியாசமாக இருக்கிறது. ‘‘என்னைப் பற்றி ஏன் கிசுகிசு வருவதில்லை’’ என்று சில மீடியா நண்பர்களிடம் கேட்கிறாராம்.  நகைச்சுவை நடிகரின் மீண்டும் தொடங்கப்பட்ட படமும் சிக்கலாகிறது. இத்தனை நாள் காத்திருந்த நடிகரின் பதற்றம்தான் காரணம். ‘‘என்னையே ஃபோகஸ் பண்ணுங்க’’ என்று சொன்னதும், ஒளிப்பதிவாளர் கோபத்தில் புறப்பட்டு விட்டாராம். குழப்பத்தைத் தவிர்க்க கொஞ்சம் படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள். எல்லாம் சரியாகி விடும் என்பது லேட்டஸ்ட் நியூஸ். இன்னும் அவருக்கு நேரம் வரவில்லையா? ‘சேட்டை’ நடிகை இப்போது உற்சாகமாகி விட்டாராம். ஆனால் போனில் நண்பர்களோடு கடலை போடுவதை விட்டுவிட்டு சீரியஸ் ஆகிவிட்டார். பழைய சிநேகிதியைப் பார்க்கத்தான் பிரியப்படுகிறார்கள் கூட நடித்த ஹீரோக்கள். வெயிட் பண்ணுங்க மக்களா! மாறுவார். ‘களவு’ படத்தில் இணைந்த ஜோடி, ஐஸ் மாதிரி லவ்வு படத்தில் நடித்தபோது கெமிஸ்ட்ரியில் ஃபெயிலாகி நெருக்கத்தில் விரிசல் விழுந்தது. செல்போனில் பரஸ்பரம் நம்பரை டெலிட் செய்துகொண்டவர்களிடையே மறுபடியும் நட்பு பற்றிக்கொள்ள, போஸ்ட் பெய்டு பில்லின் பக்கங்கள் அதிகரித்துவிட்டதாம். - சமந்தாவும், சித்தார்த்தும் கூடிப் பேசி திருமணத்தைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். சமந்தாவுக்கு ஆறு படங்கள் நடிப்பதற்காக லைனில் நிற்கிறது. சித்தார்த்திற்கு 5 படங்கள். அதனால் இரு வீட்டுப் பெற்றோரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. மற்றபடி சிட்டியில் இருந்தால் சமந்தாவிற்கு சித்தார்த்தான் செக்யூரிட்டி. இதில் மாற்றம் கிடையாது.
- அமலாபாலுக்கும் பழைய ஹீரோ சுரேஷுக்கும் இடையே அப்படியென்ன நெருக்கமோ தெரியவில்லை... ஒருவர் மீது ஒருவர் பொழியும் பாச மழைக்கு உத்தரகாண்ட் வெள்ளமே தோற்றுப்போகுமாம். சமீபத்தில் ‘தலைவா’ ஆடியோ விழாவுக்கு வந்த அமலாபால், சுரேஷ் இருக்கும் இடம் தேடிச் சென்று அன்பைபரிமாறிக்கொண்டது, சில நடிகர்கள் காதலில் புகையையும் கோடம்பாக்கத்தில் புயலையும் கிளப்பியுள்ளது.
- தொடர்ச்சியான இரண்டு வெற்றிகளால், சிவகார்த்திகேயனின் சம்பளம் எக்கச்சக்கமாக எகிறுகிறது. ஆனால் ‘எதிர்நீச்சல்’ யூனிட் அடுத்து எடுக்கும் படத்திற்கு மட்டும் அவர் சம்பளம் கேட்கவில்லை. ‘‘கொடுக்கிறதை வாங்கிக்கிறேன் பிரதர்’’ எனச் சொல்லி விட்டாராம்.
|