பிரதமர் போனை ஒட்டுக் கேட்டது அமெரிக்கா - செய்தி
‘‘ஆயிரம் அடிக்கு அடியில இருந்து கூட ஒசாமா பேசுறத ட்ராக் பண்ணோம். மன்மோகன் என்ன பேசுறாருன்னு எங்களால கண்டுபிடிக்க முடியல’’ - அமெரிக்க டெக்னீஷியன்
‘‘ஒரு மனிதன் சாதாரணமா பேசுனா குறிப்பிட்ட அளவு சத்தம் வெளிய வரும். மன்மோகன் செய்தது ஒரு மனிதனால் சாத்தியமே இல்லை. இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’’ - அமெரிக்க டாக்டர்
‘‘இதற்கு முன் ஜூலியஸ் சீசர் காலத்தில் படை வீரர்களுக்கு செய்தி அனுப்ப ஒரு டெக்னாலஜி இருந்தது. ஆனா அது கூட இந்த அளவு நேர்த்தியா இருக்காது’’ - அமெரிக்க வரலாற்று ஆய்வாளர்
‘‘சத்தம் வராமல் செய்திகளைப் பரிமாறும் டெக்னாலஜியை இந்தியா வைத்துள்ளது. அதை தன் நட்பு நாடான அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும்’’ - அமெரிக்க வெளியுறவுத் துறை.
அவரு பேசவே இல்லைன்னு நமக்கு மட்டும்தான் தெரியும். மன்மோகன் ராக்ஸ்!