ஜோக்ஸ்





‘‘ஜெயில்ல தலைவர் ரொம்ப கலாட்டா பண்ணிட்டாராமே..?’’
‘‘ஆமா... போன தடவை அவர் 7ம் நம்பர் செல்லுல ஹன்சிகா படம் வரைஞ்சு வச்சிருந்தாராம்... அதை யாரோ அழிச்சிட்டாங்களாம்!’’
- அ.இராஜப்பன், கருமத்தம்பட்டி.

‘‘எங்க தலைவர் புதுப் படம் மாதிரி...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘எப்ப ரிலீஸ் ஆவாருன்னே தெரியாது..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

ஸ்பீக்கரு...

‘‘கூட்டணியில் சேருங்கள் என்று யாரிடமும் கெஞ்ச நான் தயாரில்லை... தேர்தல் கமிஷனே என்னோடு கூட்டணி அமைக்க வந்தபோது உதறித் தள்ளியவன் நான் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்...’’
- எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

தத்துவம் மச்சி தத்துவம்

எவ்வளவு பெரிய
‘வால் நட்சத்திரமா’ இருந்தாலும், அதால
அதன் வாலை
அங்கேயும் இங்கேயும்
ஆட்ட முடியுமா?
- நடுநிசியில்
நட்சத்திரங்களை
எண்ணியபடி தத்துவம்
யோசிப்போர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘தலைவர் ஏன் உங்கள திடீர்னு கட்சிய விட்டு நீக்கியிருக்கார்..?’’
‘‘இதுவரைக்கும் ஜெயிலுக்குப் போனதில்லைன்னு சொன்னேன்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘ஏன்யா... கூட்டத்துல நான் பேசறதுக்கு மைக், ஸ்பீக்கர் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டீங்களா?’’
‘‘நாலு பேருக்கு பேசறதுக்கு அதெல்லாம் எதுக்கு தலைவரே..?’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘குற்றப் பத்திரிகையைப் பார்த்து நம்ம தலைவர் ஏன் குஷியாகிட்டார்..?’’
‘‘இந்தப் பத்திரிகையில்தான் அவரோட பேருக்குப் பக்கத்தில மகளிரணித் தலைவியின்
பெயரும் வந்திருக்காம்..!’’
- நா.கி.பிரசாத், கோவை.