ஜோக்ஸ்



என்னதான் ஆன்மிகவாதியா இருந்தாலும், சாப்பிடறப்ப அவருக்கு தக்காளி ரசம் ஊத்தலாம். மிளகு ரசம் ஊத்தலாம். ‘பக்தி ரசம்’ ஊத்த முடியுமா?
- விதம்விதமான ரசங்களை சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்போர் சங்கம்
- இரா.வசந்தராசன், கல்லாவி.

‘‘என்ன அமைச்சரே... நமது போர் வீரர்கள் எல்லாம் எதிரியிடம் போய் சரணடைகிறார்கள்?’’
“கட்சி தாவினா இங்கே தேர் தருகிறார்களாம் மன்னா... அதான்!’’
 பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

என்னதான் ‘கால் டாக்ஸி’ன்னாலும், ரோட்டுல போயிட்டு இருக்கும்போது நிறுத்தணும்னா கையைத்தான் காட்டணுமே தவிர, காலைக் காட்டக் கூடாது...
- கால் டாக்ஸி கேட்டு கால் மேல் கால் போடுவோர்
சங்கம்
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.

துணிக்கடையில தலைவர் ஒரு பொண்ணு கிட்ட வம்பிழுத்து அடி வாங்குனதை எல்லோரும் கேமராவில பார்த்துட்டாங்க...’’
‘‘அப்ப அது ‘நேர் அடி’ ஒளிபரப்புன்னு சொல்லு..!
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

பேஸ்புக்கை ஓப்பன் பண்ணின தலைவர் கடுப்பாயிட்டாரே... ஏன்?’’
‘‘இன்னைக்கு ரெய்டுக்கு வர்றோம்னு சி.பி.ஐ. அதிகாரிகள் ஸ்டேட்டஸ் போட்டிருக்காங்களாம்!
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘ஏட்டய்யா! கபாலி இப்பல்லாம் நம்மளை ‘சார்’னு சொல்லி கூப்பிடுறதில்லையே, ஏன்?’’
‘‘நம்ம டிபார்ட்மென்டோட ‘சார் நிறுத்த ஒப்பந்தம்’ போட்டிருக்கானாம்... அதான்!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

பிரியாணி சாப்பிட்டதால வயிறு
பத்திக்கிட்டு எரியுதா... ஏன்?’’
‘‘அது நெருப்புக்கோழி பிரியாணியாம்!
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.