தீபாவளி ஜோக்ஸ்



‘‘அந்த ஜோசியர் பக்கா கமர்ஷியல் பார்ட்டின்னு எப்படிச் சொல்றே?’’
‘‘வாசல்ல ‘எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த பட்டாசுகளை வெடிக்கலாம் என கணித்துத் தரப்படும்’னு போர்டு வச்சிருக்காரே!’’

‘‘அந்த பட்டாசுக் கடையில் கூட்டம் ஓவரோ இருக்கே?’’
‘‘பட்டாசு வாங்க ஃபைனான்ஸும் ஏற்பாடு பண்ணித் தர்றாங்களாம்..!’’

‘‘தலைவர் ரவுசு ஓவரா போயிருச்சி...’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘ராக்கெட் பட்டாசு போற உயரத்தை 152 அடியா உயர்த்தணும்னு போராட்டம் நடத்தப் போறாராம்!’’

‘‘இது மினிஸ்டர் வெடியா... அப்படின்னா?’’
‘‘வெடிச்சா சவுண்டு காதுல விழாது... காலுல விழும்!’’

‘‘என்னய்யா
இது...
ஊரே
பட்டாசு
வெடிச்சி
என்னை
வரவேற்குதே?’’
‘‘தலைவரே! உங்களுக்கு
மப்பு தெளிஞ்
சிடுச்சுன்னு
நினைக்கிறேன்... இன்னைக்கு தீபாவளி!’’

‘‘என்ன... தலைவருக்கு இது சின்ன தலை தீபாவளியா?’’
‘‘ஆமாம்... புது சின்ன வீட்டை செட் பண்ணிய பிறகு வரும் முதல் தீபாவளி இதுதானே!’’
 
- வீ.விஷ்ணுகுமார்

‘‘தீபாவளி பட்டிமன்றத்தை துவக்கி வச்சி பேசும்படி தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு!’’
‘‘ஏன்... என்ன செய்தார்?’’
‘‘அவருக்கு பட்டிமன்றம்னா என்னன்னே தெரியாது போலிருக்கு... ‘பட்டிமன்றத் தலைவர் அவர்களே, செயலாளர் அவர்களே, பொருளாளர் அவர்களே...’ன்னு பேச ஆரம்பிச்சிட்டார்!’’

ஓவியம் : ஜாய்