சகுனியின் தாயம்



அதிகாரியின் முகத்தில் ஈயாடவில்லை. ‘‘நம்ம திட்டப்படியா..?’’ தன்னையும் அறியாமல் கேட்டார். ‘‘ஆமா... ‘நம்ம’ திட்டப்படிதான்...’’ மீசையை மீறி புன்னகைத்த வால்டர் ஏகாம்பரம் மீண்டும் பைனாகுலரால், துப்பாக்கி சத்தம் வந்த இடத்தை ஆராய்ந்தார். மரத்தின் அடியில் துப்பாக்கியுடன் தங்கப்பன் நிற்பது புள்ளியாகத் தெரிந்தது. ஜூம் செய்து அதை பெரிதாக்கினார். அவரையும் அறியாமல் புருவங்கள் ஏறி இறங்கின.

‘‘சபாஷ்... தங்கப்பன் கலக்கிட்டான்...’’ முணுமுணுத்தவர் மீசையை முறுக்கிவிட்டு பைனாகுலரை அதிகாரியிடம் கொடுத்தார். அவர் பார்த்த திசையில் இவரும் பார்த்தார். ஒன்றும் புரியவில்லை. ‘‘ரிலாக்ஸ்...’’ அதிகாரியை தட்டிக் கொடுத்த வால்டர் ஏகாம்பரம், சுற்றிலும் தன் கண்களை சுழல விட்டார். அதிரடிப்படையினர் அவரது கட்டளைக்காக காத்திருந்தனர்.
‘‘இப்போதைக்கு எந்த ஆபரேஷனும் இல்லை. ஓய்வெடுங்க...’’ என்று சொல்லிவிட்டு தன் கூடாரத்தினுள் புகுந்தார்.

அவர் செல்வதையே பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிக்கு சலிப்பாக இருந்தது. தங்கப்பனை தாக்கி ஸ்காட் வில்லியம்ஸை மீட்பதற்காக வந்துவிட்டு இப்படி அமைதியாக இருந்தால் எப்படி? உண்மையில் தங்கப்பனுக்கும் வால்டர் ஏகாம்பரத்துக்கும் இடையில் என்ன டீலிங்? படையுடன் வந்தது எந்த ஆபரேஷனுக்கு?ஒன்றும் புரியவில்லை. ஆனால், அரசுக்கு தெரிந்துதான் எல்லாமே நடக்கிறது என்பதில் மட்டும் மாற்றுக் கருத்து எழவில்லை. எதற்கு வம்பு? உண்மை வெளிப்படும் வரையில் மவுனமாக இருப்போம்...

கால்கள் துவள வீரர்கள் பக்கம் சென்றவர், அவர்களுடன் சீட்டாட ஆரம்பித்தார்.இப்படிச் செய்யாமல் அந்த அதிகாரி மட்டும் திரும்பவும் பைனாகுலரால் தங்கப்பன் இருந்த இடத்தைப் பார்த்திருந்தால் பல விவரங்கள் புரிந்திருக்கும்.ஏனெனில் அப்படியான ஒரு செயலைத்தான் அப்போது தங்கப்பன் செய்து கொண்டிருந்தான்.வால்டர் ஏகாம்பரத்துக்கு செய்தி அனுப்பிய கையோடு மலையுச்சிக்கு வந்தவன், அங்கிருந்து கீழே பார்த்தான். மரங்கள் அடர்த்தியாகத் தெரிந்தன.

ஆங்காங்கே சில அசைவுகள். அவற்றையே உற்றுப் பார்த்தவன் துப்பாக்கியை தரையில் வைத்தான். பிறகு தன் இரு கைகளையும் உதட்டுக்கு அருகே கொண்டு வந்தான். நாக்கை மடித்தபடி இரு ஆள்காட்டி விரலையும் வாய்க்குள் நுழைத்தான். அடுத்த நொடி -விநோதமான ஒலியொன்று கிளம்பியது. அது காடெங்கும் எதிரொலித்தது.10... 9... 8... 7... என விநாடிகள் கரைந்து பூஜ்ஜியத்தை தொட்டபோது -அந்த அதிசயம் நடந்தது.

எங்கிருந்துதான் வந்தனவோ தெரியவில்லை. காட்டில் இருந்த அனைத்து வகையான குரங்குகளும் ஒலி வந்த திசையை நோக்கி படையெடுத்தன. மலையுச்சியில் இருந்து இதைப் பார்த்த தங்கப்பனின் முகம் பெருமிதத்தால் விம்மியது. காரணம், காட்டை நிரப்பும் மரங்கள் எதுவும் அவன் பார்வைக்கு தட்டுப்படவில்லை. பதிலாக சின்னதும் பெரியதுமாக குரங்குகளின் தலைகள் தெரிந்தன. கண்கொள்ளாக் காட்சி. அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் குறிப்பான ஓரிடத்தில் தன் கருவிழியை நிறுத்தினான்.

அதிகப்படியான மரக்கிளைகளின் சலசலப்பு அங்குதான் இருந்தது. அத்துடன் குரங்குகளுக்கு பயந்து மூன்று மனிதத் தலைகளும் மறைவிடம் விட்டு வெளியே வந்தன. ஒன்று ஒரு பெண்ணுடையது. அடுத்த இரண்டும் ஆண்களுடையது. திவ்யா. ‘இளவரசன்’ ஸ்காட் வில்லியம்ஸ். சரியாக மலைக்கு நடுவில் இருந்தார்கள். தரையைத் தொட எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். சேலம் பக்கம் நகர்கிறார்கள்.

முன்பு போலவே அவன் கண்கள் சிவந்தன. உதட்டைக் குவித்து மூன்று முறை விசில் அடித்தான். தன் கட்டளைக்கு அடிபணிந்து அவர்கள் மூவரையும் பிடிப்பதற்காக சென்ற அவனது ஆட்களுக்கான கட்டளை அது. மூன்று முறை என்பது ‘சேலம்’ திசையைக் குறிப்பதற்கான சங்கேதம். இனி ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள். திருப்தியுடன் துப்பாக்கியை எடுத்தவன், வானத்தை நோக்கி ஐந்து முறை சுட்டான்.

இது ‘அவருக்காக’.  அதற்கேற்ப தன் கூடாரத்தில் அமர்ந்திருந்த வால்டர் ஏகாம்பரம், தன் செவியைக் கூர்மையாக்கி அந்த ஓசையைக் கேட்டார்.ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து.அடுத்த நொடி தன் சாட்டிலைட் போனை எடுத்தார். மடமடவென்று எண்களை அழுத்தினார். மறுமுனையில் ‘‘ஹலோ’’ என்ற சத்தம் வந்ததுமே அழுத்தம்திருத்தமாக அந்த வார்த்தையை உச்சரித்தார்.
‘‘அட்டாக்...’’இதற்காகவே காத்திருந்ததுபோல் மறுமுனையில் இருந்தவர் செயல்பட்டார்.

தன் வலது கையை உயர்த்தி ‘‘சார்ஜ்...’’ என கத்தினார்.அவ்வளவுதான். திபுதிபுவென காவலர்கள் அந்த கிராமத்தினுள் புகுந்தார்கள்.அந்த கிராமம் -இளவரசனின் கிராமம்.‘‘புறப்படலாம்...’’சொன்னவனை நோக்கிய சகுனி, தாயம் உருட்டுவதை நிறுத்தினார். ஆமோதிப்பாக தலையை அசைத்துவிட்டு அவனுக்கு முன்னால் சென்றார். அந்த மனிதனும் அவரைப் பின்தொடர ஆரம்பித்தான்.
படிக்கட்டில் இறங்கி கீழ் தளத்துக்கு வந்தார்கள். தன் வலது கையை உயர்த்தினார் சகுனி. புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அந்த மனிதனும் தீப்பந்த வெளிச்சம் படாத இடத்தில் பதுங்கினான். வீட்டுக்கு வெளியே இரு வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தார்கள்.

மாளிகையின் பின்புறத்துக்கு சகுனி வந்தார். இருளடர்ந்த பகுதியில் நகர்ந்தபடியே அந்த மனிதனும் வந்தான்.கதவு திறந்திருந்தது. நம்பத் தகுந்த காவலாளி அவரைப் பார்த்ததும் தலைதாழ்த்தி வணங்கினான். ‘‘புரவிகள் சித்தமாக இருக்கின்றன...’’
‘‘ம்... காவல் வீரர்கள்?’’

‘‘இந்தப் பகுதிக்கு வர அரைக்கால் நாழிகையாகும்...’’
‘‘நல்லது...’’ என்றபடி சகுனி வெளியே வந்தார்.
இரு புரவிகள் தயார் நிலையில் இருந்தன. விசுவாசமான மெய்க்காப்பாளன்.

புரவியை நோக்கி சகுனி நகரத் தொடங்கியதும் அந்தக் காவலாளி வீட்டுக்குள் சென்றான். இருளடர்ந்த பகுதிப் பக்கம் அவன் திரும்பவேயில்லை. திரும்பக் கூடாது என்பதை தன் அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தான். விழிப்படைந்திருந்த அவன் செவியில் காலடியோசை விழுந்தது. ஒரு ஜோடி கால்கள்தான். எனில், கூடுதலாக ஒரு புரவியைக் கொண்டு வந்தது சரிதான்.
பார்வையில் இருந்து காவலாளி மறைந்ததும் எஞ்சியிருந்த குதிரையை நோக்கி அந்த மனிதன் ஓடி வந்தான். ‘‘நேரமாகிவிட்டது. ம்...’’ சகுனி அவனை துரிதப்படுத்தினார்.

‘‘நம்பகமான காவலாளியை உடன் வைத்திருக்கிறீர்கள்...’’
‘‘இல்லாவிட்டால் குரு வம்சத்தை அழிக்க முடியாது...’’

அதன் பிறகு இருவரும் பேசவில்லை. பழக்கப்பட்ட புரவிகள் என்பதால் குளம்பொலி எழும்பாதபடி அவை இரண்டும் இருட்டை கிழித்தபடி பாய்ந்தன. முடிந்தவரை ராஜபாட்டையை விட்டு விலகி மரங்களடர்ந்த பகுதி வழியாகவே சென்றார்கள். நடுவில் இரு தோப்புகள் குறுக்கிட்டன. உறங்கிக் கொண்டிருந்த பட்சிகளை எழுப்பி சலசலப்பை ஏற்படுத்த விரும்பாமல், நிதானமாகவே தோப்பைக் கடந்தார்கள். அதன் பிறகு சகுனியைப் பின்தொடர்ந்து வந்த மனிதன், முன்னோக்கிப் பாய்ந்தான்.

‘‘எதற்காக இப்படிச் செய்கிறாய்..?’’ என அவர் தன் பற்களைக் கடித்த கணம் -முன்னோக்கி சென்ற மனிதன் தன் புரவியை அவருக்குக் குறுக்கே நிறுத்தினான். மிதமான வேகம் என்றாலும் சட்டென்று அது தடைப்பட்டதால், சகுனி அமர்ந்திருந்த குதிரை கொஞ்சம் திமிறிவிட்டு நின்றது.
‘‘என்ன விஷயம்? ஏன் இப்படி வழிமறிக்கிறாய்?’’
‘‘காரணமாகத்தான். முதலில் இறங்குங்கள்...’’ பணிவு மாறி அதட்டினான். ‘‘ஏன்?’’

‘‘உங்களை ஒருவர் சந்திக்க விரும்புகிறார்...’’
‘‘நம் ரகசிய இடத்தில் என்றுதானே சொன்னாய்?’’
‘‘நம் என நான் குறிப்பிட்டது உங்களை உள்ளடக்கி அல்ல...’’

உணர்ச்சியற்ற முகத்துடன் சகுனி அவனை ஏறிட்டார். ‘‘எவ்வளவு பொற்காசுக்கு விலை போனாய்?’’
‘‘அதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?’’
மேற்கொண்டு உரையாடலை நகர்த்தாமல் இறங்கினார்.

‘‘இந்தப் பக்கம்...’’ என்றபடி மரங்களடர்ந்த பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றான்.
 குறுவாளின் நுனி சகுனியின் இடுப்பை முத்தமிட்டபடியே இருந்தது.
ஐம்பதடி தூரம் அவர்கள் சென்ற பிறகு ஆதூர சாலை தென்பட்டது.
‘‘இங்குதான் என்னை சந்திக்க விரும்புகிறவர் இருக்கிறாரா?’’
‘‘ஆம்...’’

‘‘யார் கிருஷ்ணனா?’’
‘‘அப்படியும் இருக்கலாம்...’’
‘‘இதற்கு என்ன பொருள்?’’
‘‘மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை என்று அர்த்தம்...’’

புருவங்கள் முடிச்சிட பலத்த சிந்தனையுடன் ஆதூர சாலைக்குள் நுழைந்த சகுனி, அங்கிருந்த நபரைக் கண்டதும் அதிர்ந்து போனார்.காரணம் -அவரை வரவேற்றது துரியோதனன்.மந்திரவாதி தாத்தாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார். ஏனெனில் அவர் எதிர்பார்த்தது வேறு. அதற்கு ஏற்பத்தான் திட்டமிட்டார். அதன் ஒரு பகுதியாகத்தான் ஓநாய் உருவில் இருந்த தேவதையின் முன்னால் தன் காலை வெட்டி எறிந்தார்.

அவரது கணிப்பு வீண் போகவில்லை. என்னதான் தேவதையாக இருந்தாலும் அப்போது அவள் எடுத்திருந்த உருவம் ஓநாய். ரத்தத்தை பார்த்ததும் அது தன் குணத்தை காட்டத்தானே செய்யும்?

அப்படித்தான் ஓநாயும் நாக்கை தொங்கப் போட்டபடி குருதியை புசிக்க அலைந்தது. இருந்தாலும் தன்னை கட்டுப்படுத்தியபடி ஸ்பைடர் மேனை வைத்து அந்த வெட்டுப்பட்ட காலை அப்புறப்படுத்த நினைத்தாள். இதுவும் அவர் திட்டத்தின் ஒரு பகுதிதான். இப்படி கட்டளையிட்டதுமே ஸ்பைடர் மேனுக்கு பதில் மகேஷ் அதை நிறைவேற்ற முற்படுவான்... அப்போது அவனை அழித்து
விடலாம் என கணக்கிட்டார்.

எல்லாமே கச்சிதமாக அவர் எண்ணப்படியே நடந்தன. ஓநாய் உருவில் இருந்த தேவதை தடுக்கத் தடுக்க... அவரது வெட்டுப்பட்ட காலை மகேஷ் எடுத்துவிட்டான்.
ஆனால் -அதன் பிறகு நிகழ்ந்ததுதான் அவர் கனவிலும் எதிர்பாராதது.நியாயமாகப் பார்த்தால் வெட்டுப்பட்ட காலை மகேஷ் தொட்டதுமே அவன் உடம்பில் விஷம் ஏற வேண்டும். நுரை கக்கி அவன் மரணமடைய வேண்டும். இப்படி எதுவும் நடக்கவில்லை.

மகேஷின் மடியில் கட்டை விரல் சைஸுக்கு பொம்மையாக இருந்த ஹாரி பார்ட்டர் அப்படி நடக்க விடவில்லை. வெட்டுப்பட்ட காலின் பக்கம் மகேஷ் நகர்ந்ததுமே, ஹாரி பார்ட்டர் தரையில் குதித்துவிட்டான். அத்துடன் தன் கையில் இருந்த மந்திரக் கோலால் ‘ஜீ பூம்பா...’ என மந்திரங்களை உச்சரித்தான்.

அடுத்த செகண்ட் -சஞ்சீவி மலையுடன் அனுமன் அங்கே தோன்றினார். அந்த மலையில் இருந்த சஞ்சீவி மூலிகையைக் கசக்கி அதன் சாற்றை மகேஷின் மீது தெளித்தார். இதனால் அவன் உடம்பில் ஏறிய விஷம், அப்படியே இறங்கி மறைந்து விட்டது. ‘‘இனி உனக்கு ஒரு ஆபத்தும் இல்லை மகேஷ்... டேக் கேர்... நான் வர்றேன்!’’

‘‘ப்ளீஸ் அனுமார். கொஞ்ச நேரம் என் கூடவே இருங்க. இந்த மந்திரவாதி தாத்தா வேற என்னவெல்லாம் செய்வார்னே தெரியலை. எனக்கு பயமா இருக்கு...’’‘‘தைரியமா இரு. விக்கிரமாதித்த மகாராஜாவும் இந்த தேவதையும் உனக்கு பக்கபலமா இருக்காங்க. அஷ்டமா சித்தியும் உனக்கு கை கூடியிருக்கு. ஸோ, யாராலயும் உன்னை அசைக்க முடியாது. சரியா?’’ என்று சொல்லி அவனை தட்டிக் கொடுத்துவிட்டு அனுமன் மறைந்தார்.

மந்திரவாதி தாத்தாவால் இதைத்தான் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஹாலிவுட்டில் பிறந்த உயிர்தான் ஹாரி பார்ட்டர். அப்படியிருக்க இவனால் எப்படி அனுமரை வரவழைக்க முடியும்? தவிர, தனக்கு உதவ வேண்டியவன் எப்படி எதிரி பக்கம் சென்றான்? ‘‘ஹாரி பார்ட்டர்... எனக்கே துரோகம் செஞ்சுட்ட இல்ல. இனி உன்னை விடமாட்டேன். அலாவுதீனுக்கு சாப விமோசனம் கொடுக்க எந்த அருவிக்கு நீங்க போறீங்களோ, அங்கதான் உனக்கும் அழிவு இருக்கு.

அந்த அருவி தண்ணியை மகேஷ் தன் கைல தொட்டதுமே நீ சாம்பலாகியிடுவே. இதுதான் உனக்கு நான் கொடுக்கிற வரம். ஆமாம். வரம்தான். தேவதையே... இந்த இடியாப்ப சிக்கலை நீ எப்படி சமாளிக்கறேன்னு நான் பார்க்கறேன்...’’ என்று கர்ஜித்துவிட்டு மந்திரவாதி தாத்தா அங்கிருந்து அகன்றார்.மகேஷ் அப்படியே பிரமை பிடித்து நின்றான்.
‘‘ஏஞ்சல், இப்ப என்ன செய்யறது?’’ கண்ணீர் பெருக அப்படியே தன் தலையில் கை வைத்து அமர்ந்தான்.

ஓநாய் உருவில் இருந்த தேவதையும் கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருந்தாள். என்ன செய்வது என்ற கேள்வி தான் அனைவர் மனதிலும் சுற்றிச் சுற்றி வந்தது. அப்போதுதான் திடீரென்று ஸ்பைடர் மேன் துள்ளி குதித்தான். ‘‘என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு...’’‘‘என்ன... என்ன...’’ என்றபடி அனைவரும் அவனைச் சுற்றி நின்றார்கள்.
தன் திட்டத்தை விவரிக்க ஆரம்பித்தான் ஸ்பைடர் மேன்.

அதைக் கேட்டு தன் மந்திரக் கோலை முத்தமிட்டான் ஹாரி பார்ட்டர்.சீன சாத்தை சோழ மன்னர் பெருநற்கிள்ளி அடைந்தபோது அவர் கனவிலும் நினைத்துப் பாராத சம்பவங்களை இளமாறனும் யவன ராணியும் அரங்கேற்றி முடித்திருந்தார்கள்...

‘‘டாக்டர்! ஆபரேஷனை தீபாவளிக்கு அப்புறம் வச்சுக்கலாம்...’’‘‘அதெல்லாம் முடியாது! என் பொண்ணுக்கு தலை தீபாவளி. நிறைய செலவு இருக்கு...’’

‘‘தலைவருக்கு பழக்க தோஷம் போக மாட்டேங்குது...’’‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘தீபாவளிக்கு கம்பி மத்தாப்பு கொடுத்ததும், உக்காந்து எண்ண ஆரம்பிச்சுட்டாரு!’’

‘‘பட்டாசு விலையை எல்லாம் கேட்டா வயிறு எரியுது...’’
‘‘அப்ப கொஞ்சம் தள்ளிப் போங்க. கடை கிட்ட வராதீங்க!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

(தொடரும்)

கே.என்.சிவராமன்