ஜோக்ஸ்



‘‘என்ன... உங்க கடையில வாங்கின ரயில் பட்டாசு நின்னு நின்னு புறப்படுது?’’
‘‘இது பேசஞ்சர்
ரயில் சார்..!’’

‘‘நம்ம உண்ணாவிரதத்துக்கு எப்படிய்யா இவ்வளவு கூட்டம் சேர்ந்தது..?’’
‘‘எல்லாம் தீபாவளி பலகாரம் செய்யற மனைவி
யர்களோட மகிமை
தான் தலைவரே!’’

என்னதான் தீபாவளிக்கு நாம ராக்கெட் விட்டாலும், அதை செவ்வாய்க் கிரகத்துக்கு எல்லாம் விட முடியாது!
- பட்டாசு வாங்கவும் பட்ஜெட் போடும் பத்மநாபன்கள் சங்கம்

‘‘போன வருஷம் லட்சுமி
வெடி சரியா விற்பனை
யாகலையாம்...’’
‘‘அதுக்காக ‘ராய்
லட்சுமி’ன்னு நியூமராலஜி
படி பெயர்
மாத்தணுமா?’’

‘‘இந்த பட்டாசுக்கு ஏன் கூடுதல் விலை சொல்றீங்க..?’’
‘‘வெடிச்சு சிதறும்போது, சினிமா கிசுகிசுவா கொட்டும் சார்..!’’

‘‘தலைவரை எதுக்குக் கைது பண்றாங்க?’’
‘‘தீபாவளிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வீட்டு முன்னால ‘கண்ணி வெடி’ வச்சாராம்..!’’

என்னதான் ரயில்னாலும், தீபாவளிக்கு விடற பட்டாசு ரயில்ல எல்லாம் வித் அவுட்ல போக முடியாது!
- எங்கேயும் எப்போதும் வித் அவுட்டில் பயணிப்போர் சங்கம்

 - பெ.பாண்டியன்