ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



பாலிவுட்டில் ஒரு சில படங்களே நடித்தார். ஆனாலும், எப்போதும் ஏதாவது சர்ச்சையில் சிக்கி அதனாலேயே புகழ் பெற்றவர், பாகிஸ்தானி நடிகை வீணா மாலிக். ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்ட அவருக்கு மகன் பிறந்திருக்கிறான்.

‘ஆப்ரம்’ என மகனுக்கு பெயர் வைத்திருக்கும் வீணா, அந்தக் குழந்தைக்கு பிறந்ததுமே ட்விட்டர் அக்கவுன்ட் ஆரம்பித்து விட்டார். பத்தே நாட்களில் அந்த அக்கவுன்ட்டை 27 ஆயிரம் பேர் பின்பற்றியுள்ளனர். பத்தே நாள் குழந்தைக்கு இத்தனை ஃபாலோயர்கள் இருப்பது புதிய சாதனை!

அதிர்ஷ்டம் என ஒரு விஷயம் இருப்பதை நம்புகிறார் முக்தா கோட்ஸே. மதுர் பண்டார்கரின் ‘ஃபேஷன்’ படம் மூலம் கவனம் பெற்றவர், அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாமல், டி.வி ரியாலிட்டி ஷோக்கள் பக்கம் போனார். ஃபேஷன் ஷோக்களில் வலம் வந்தார். திடீரென மூன்று படங்கள் கைக்கு வர, தூங்கவே நேரமின்றி நடித்துக் கொண்டிருக்கிறார். ‘‘காரணம் அதிர்ஷ்டம்’’ என்கிறார் முக்தா.

கொலம்பிய போதை கடத்தல் உலகின் அசைக்க முடியாத தலைவியாக விளங்கிய கிரிசெல்டா பிளாங்கோவின் வாழ்க்கை படமாகிறது. ‘காட் மதர்’ என்ற இப்படத்தில் நடிக்கப் போவது கேத்தரீன் ஜீடா ஜோன்ஸ்.

‘‘நடிப்பை பாதியில் விட்டுவிட்டு படிக்கப் போவது தப்பு’’ என உணர்ந்து சொல்கிறார் சோனல் சௌகான். ‘மிஸ் இந்தியா’ போட்டியில் கவனம் பெற்று, அதனால் மாடலிங் துறையில் நுழைந்து, அப்படியே நடிக்கவும் வந்த சோனல், ‘ஜன்னத்’ படம் மூலம் கவனம் பெற்றார். படம் வெளியாகி ஹிட்டான நேரத்தில் தன் படிப்பைத் தொடர டெல்லி போய் விட்டார் அவர். மீண்டும் நடிக்கலாம் என வந்தபோது அவரை எல்லோரும் மறந்திருந்தார்கள். இப்போது தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் வாய்ப்பு தேடுகிறார் அவர்.

இரண்டாவது பெண் குழந்தைக்குத் தாயாகி இருக்கிறார் ட்ரூ பாரிமோர். அதைவிடவும், கணவர் ஆடம் சாண்ட்லரோடு மூன்றாவது படத்தில் ஜோடி சேர்ந்து நடிப்பது அவருக்கு அளவிட முடியாத சந்தோஷம் தந்துள்ளது. குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் இப்போது கேமரா முன் நிற்க ரெடியாகி விட்டார்.