தீபாவளி ஜோக்ஸ்




‘‘தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’
‘‘ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆன இவரைப் பாக்க வராம, தொண்டர்கள் எல்லாரும் தீபாவளி ரிலீஸ் படங்களைப் பார்க்கப் போயிட்டாங்களாம்!’’

ஸ்பீக்கரு...

‘‘தலைவரோட பேரன் மேல என்ன வழக்கு..?’’
‘‘தெருப் பசங்க கிட்ட இருந்து ‘வெடி அபகரிப்பு’ செய்தானாம்!’’

‘‘தீபாவளி நேரம் என்பதால், மீட்டிங்கில் பேசும் தலைவர் மீது
பட்டாசுகளைக் கொளுத்தி வீசாமல், வழக்கம் போல் செருப்பையே
வீசுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்...’’

‘‘தலைவர் ‘ஹாட்ரிக்’ அடிச்சிட்டாரா... எப்படி?’’
‘‘தொடர்ந்து மூன்று  வருஷமா வருஷத்துக்கொரு கல்யாணம் பண்ணி மூணு தலை தீபாவளி களைக் கொண்டாடிட்டார்!’’

‘‘தலைவர் விட்ட ராக்கெட்டும், அவர் மாதிரியே ஜொள்ளு டைப்பா இருக்கு...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘பத்த வச்சதும் பறந்து போய் மகளிரணித் தலைவி வீட்ல விழுது..!’’

‘‘கபாலி ஓவரா புலம்
பறானே... என்னவாம்?’’
‘‘நகைக்கடையில லட்சம் லட்சமா திருடும்போது மாட்டாதவன், பட்டாசுக் கடையில் லட்சுமி வெடி திருடும்போது மாட்டிக்கிட்டானாம்!’’

‘‘தீபாவளிக்கு ‘ஸ்வீட்’ பண்ணாம, கம்ப்யூட்டர்ல உக்கார்ந்து என்னடி
பண்ணிக்கிட்டிருக்கே..?’’
‘‘ட்விட்டர்ல ‘ட்வீட்’ பண்ணிக்கிட்டிருக்கேங்க..!’’

பர்வீன் யூனுஸ்

படங்கள்: ஓவியர்