facebook வலைப்பேச்சு



நீதிக்குத் தலை வணங்காட்டாலும் நிலைக் கதவுக்காச்சும் தலை வணங்கணும். இல்லேன்னா மண்டைக்கு வெளியே கொண்டை வந்துடும்!
- ஸ்ரீதேவி செல்வராஜன்

ஏனோ தெரியவில்லை... ஆண்கள் எப்போதும் தங்கள் பைக்குககளின் மைலேஜை சற்று ஏற்றியும், பெண்கள் தங்கள் வயதை சற்றுக் குறைத்தும் சொல்கிறார்கள்.
- ஜிஆர் சுரேந்திரநாத்

சிலிர்த்து சிறகுலர்த்தி சிக்கெடுத்து சிறு தூறலையும் ரசிக்கும் சிறு குருவி...
- சுந்தரி விஸ்வநாதன்

பஸ்ல பெண்களை இடிக்கிறவன் மாட்டிக்கொண்டால், கொஞ்ச பேர் கோபத்தில் அடிக்கிறாங்க. மீதி எல்லாம் வயத்தெரிச்சல்லதான் அடிக்கிறாங்க!
- அம்புஜா சிமி

ஒரு தெய்வத்திற்கு ‘ஜாமீன்’ கொடுக்க நான் யார்..?
மனிதன் பயத்துடன் ஒதுங்கிவிட்டான்..!
- மைக்கேல் அமல்ராஜ்

வாழ்க்கைன்னா இன்பம் துன்பம், இரவு பகல், மேடு பள்ளம், சிரிப்பு அழுகை எல்லாம் கலந்துதான் வரும்னு இன்னைக்கு கண்கூடா பார்த்தேன். அதுவும்... அடுத்தடுத்த சில நிமிஷங்கள்ல!
# வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கிச் சொன்ன தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்.
- ராஜவேல்

வாழ்க்கைன்னா இன்பம் துன்பம், இரவு பகல், மேடு பள்ளம், சிரிப்பு அழுகை எல்லாம் கலந்துதான் வரும்னு இன்னைக்கு கண்கூடா பார்த்தேன். அதுவும்... அடுத்தடுத்த சில நிமிஷங்கள்ல!
# வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கிச் சொன்ன தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்.
- ராஜவேல்

துக்க வீட்டிற்குச் செல்கையில், ‘நாம செத்தா இப்பிடி அழுவாங்களா’ன்னு ஒரு சின்ன பொறாமை வர்றது இயற்கைதான்.
- அராத்து

ஆப்பிள் 6 மொபைலை வளைக்கலாமாம்! இதுக்கெதுக்குடா 65 ஆயிரம் செலவழிக்கணும். டேபிள்மேட் வாங்குனா மடக்கலாம், நீட்டலாம், உயர்த்தலாம்...
- பிரசாந்த் எஸ்பி

பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு எதிரான கருத்து: கே.ஜே.யேசுதாஸ் மீது வழக்குப்பதிவு.
# எனக்கு ராகம் எல்லாம் தண்ணி பட்ட பாடு. இன்னைக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு..!
- வாசு முருகவேல்

உண்ணாவிரதப் பந்தல்ல பசி பொறுக்கமுடியாம இருந்த எவனோ ஒருத்தன்தான் ‘‘ஜாமீன் கிடைச்சிடுச்சி’’ன்னு கௌப்பி விட்டுருப்பான்...
- ரோல்ப்காந்த்

விடுதலை... ஜாமீன்... இது எல்லாம்
பட்டாசு கம்பெனிக்காரங்க கிளப்பி விடற வதந்தி, யுவர் ஹானர்!
# ஓல்ட் ஸ்டாக் ரொம்ப
ஓவர் போல...
- விஜயலட்சுமி

மாணவன் ஒருவனின் தவறான பதிலை காப்பி அடித்து என் வகுப்பே மாட்டிக்கொண்டது ஒருநாள். இன்று நடந்த ஒரு பெரும் நிகழ்வால் அந்த நாள் நினைவுக்கு வந்தது.
- கபிலன் வைரமுத்து

twitter

@paidkiller   
ஒருநாள் வொர்க்குக்கு ஒரு வார டைம் தர்றதும், ஒரு மாசத்துக்கான வேலையை மறுநாளே முடிக்கச் சொல்றதும்னு, விசித்திர குழப்பத்துல இருக்கார் பாஸ் ;)

@karuthujay 
இப்பல்லாம் பல பேரு வெச்சுருக்குற போன் மட்டும்தான் ‘ஸ்மார்ட்டு’... ஆளு படு ‘வேஸ்ட்டு’;)

@kattathora 
ஸ்கூல்லேர்ந்து திரும்பும் மகள், ‘‘அப்பா, இன்னிக்கு என் உண்டியல்லருந்து காசு எடுத்தியா?’’ என கேட்கும்போது கொஞ்சம் மானக்
கேடாதான்யா இருக்கு!

@iParisal   
ஃப்ளிப்கார்ட்ல ஜாமீன் கிடைக்குமா?

@krajesh4u 
‘வசந்த மாளிகை’ பாட்டுக்கெல்லாம் ‘குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு’ மெசேஜ் போடுறாங்க...
இதெல்லாம் பாக்காமலேயே போயிட்டியே தாத்தா:)

@baamaran
  வெட்ட வருபவர்களைக் கண்டு ஓடவாவது
வேர்களுக்கு
பதிலாகக் கால்கள்
முளைத்திருக்கலாம்
மரங்களுக்கு...

@RajiTalks 
‘This offer only for you’  ன்னு கம்பெனிக்காரன் மெஸேஜ் அனுப்பும்போது நம்ம கழுத்துல மால போட்டு யாரோ அருவாளோட பின்னாடி நிக்கிற போலவே ஒரு ஃபீலிங்!

@RavikumarMGR 
 ஒரு குழந்தையின் மிகப்பெரிய சுமை, தன் பெற்றோர்களின் கனவுகளைச் சுமக்க வேண்டியிருப்பதுதான்!

@sathikbatsha86 
ஒவ்வொரு பெற்றோரும் மகனுக்குப் பெண் தேடி அலையும்போது
தான் எண்ணுகிறார்கள், ‘பக்கிபய... ஏதாவது பொண்ணை லவ் பண்ணி தொலச்சிருக்கக் கூடாதா’ என்று!

@riyazdentist  
‘திருப்பி அனுப்பினால் தமிழக முதல்வர்... அங்கேயே இருந்தால் கர்நாடக முதல்வர்’
# மதுரை அதிமுக போஸ்டர்  Rocks!

@Ini_avan   
அம்மாவுக்கு ஆதரவாக டாஸ்மாக் மூடாத தேசத்தில் தனியார் பள்ளி களை மூட முடிவெடுத்த கல்விக் கொள்ளையர்களால் உலகளவில் தமிழனுக்கு தலைக்குனிவே!

@ak_nirmal   
‘ரத்தம் கக்கி சாவப் போறீங்கடா’ ன்னுதான் இன்னும் போஸ்டர் ஒட்டல. அதையும் ஒட்டிருங்க, ஜோலி சுத்தமாயிரும்!

@ak_nirmal   
‘ரத்தம் கக்கி சாவப் போறீங்கடா’ ன்னுதான் இன்னும் போஸ்டர் ஒட்டல. அதையும் ஒட்டிருங்க, ஜோலி சுத்தமாயிரும்!

@mpgiri
வால்மீகி பிறந்த நாளுக்கு கர்நாடகாவுல லீவு விடறான். கம்பர், இளங்கோவடிகள் பிறந்த நாளுக்கு நாம லீவு விடுறதில்ல. அப்புறம் தமிழ் எப்படி வளரும்?