தீபாவளி ஜோக்ஸ்



‘‘பாகவதரே... எங்க வீட்டுக்கு வந்து நீங்க பாடணும்!’’

‘‘வீட்டில் ஏதாவது விசேஷமா?’’
‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல... தலைதீபாவளிக்கு வந்த மாப்பிள்ளையைக் கிளப்ப எனக்கு வேற வழி தெரியலை!’’

‘‘ரெய்டு வந்தவங்க உங்ககிட்டே ரொம்ப கடுமையா நடத்துக்கிட்டாங்களா... ஏன் தலைவரே?’’
‘‘அவங்க வந்ததும் என் மனைவி செஞ்ச தீபாவளி பலகாரங் களை சாப்பிட குடுத்து தொலைச்சிட்டேன்யா!’’

பட்டாசு திரியில பத்த வச்சா பட்டாசு வெடிக்கும்; பிளாஸ்‘திரி’யில பத்த வச்சா, அது வெடிக்குமா?
- திரிஷாவை நினைத்துக்கொண்டே அதிரி புதிரியாக யோசிப்போர் சங்கம்

‘‘நம்ம கட்சிக்காரங்களை புரிஞ்சுக்க முடியலை
தலைவரே...’’
‘‘ஏன்யா அப்படிச் சொல்றே?’’
‘‘ஜெயில்லேர்ந்து நீங்க தீபாவளிக்கு ரிலீஸ் இல்லைன்னு தெரிஞ்சதும் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறாங்களே!’’

ராம்ஆதிநாராயணன்

‘‘என்னது... இது சீனா வெடியா?’’
‘‘ஆமா... நீங்க உங்க வீட்டு வாசல்ல பத்த வெச்சா ‘எல்லை தாண்டி’ பக்கத்து வீட்டில போய் விழும்!’’

‘‘போன வருஷம் சமத்துவ தீபாவளி கொண்டாடினார் தலைவர்...’’
‘‘இந்த வருஷம்?’’
‘‘சம்மன் தீபாவளி கொண்டாட வேண்டியதா போயிடுச்சு!’’

என்னதான் நம்ம முன்னாள் பிரதமர் சங்கு சக்கரத்தை பத்த வச்சாலும், அதை ‘சிங்கு’ சக்கரம்னு சொல்ல முடியாது!
- மன்மோகன் சிங் போலவே மௌனமாக பேசுவோர் சங்கம்

ஓவியங்கள்: ராமு