உள்ளம் பறிக்குதே!



டீத்தூளில் பூச்சிக்கொல்லியா? அது கிட்னியை பாதிக்குமா? என்னய்யா, ஷாக்கை ஓவர் வோல்ட்டேஜ்ல கொடுத்துட்டீங்க. இனி, டீயைப் பார்த்தா தீயைப் பார்த்த மாதிரி பயம் வருமே!
- எச்.கந்தசாமி, கடலூர்.

ரயில் டிக்கெட் ரிசர்வேஷனில் ரொம்ப நாளாய் மூளையைக் குழப்பிக் கொண்டிருந்த ஸிலிகீலி, றினிகீலி, சிரிகீலி, ஸிகிசி போன்றவற்றுக்கு விளக்கம் தந்த ‘தெரிஞ்ச விஷயம், தெரியாத விஷயம்’ பகுதிக்கு நன்றி!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ வார்த்தை ஜாலமா? வளர்ச்சியா? என்ற கேள்வி பல சிந்தனைகளை எழுப்பி சிந்திக்க வைத்துவிட்டது!
- தேவிமைந்தன், சென்னை.

ஒரு வழியாக ‘செக்ஸ் பாம்’ ஷகீலாவுக்கு கல்யாணம் என்பது நிம்மதி. ஆனா, அவங்க ஸ்லிம் ஆனது தெரிஞ்சதும் திரும்ப டைரக்டருங்க படையெடுத்துடாம இருக்கணுமே... எண்டே
 குருவாயூரப்பா!
- இரா.மதியழகன், திருப்பூர்.

அநேகமாக ‘அனேகன்’ படத்தில் நடிக்கும் அமைரா தமிழில் ஒரு ரவுண்டு வருவார் போல! அனுஷ்கா வின் உயரம், இலியானாவின் நளினம் என அவர் ஸ்டில்களே உள்ளம் பறிக்கின்றனவே!
- எல்.சுகுமார், மதுரை.

விசில் அடிப்பதே தவறு என நினைத்திருந்தோம்... ஆதிகாலம் தொட்டே மனிதனுக்குப் பயன்பட்ட விசிலைப் பற்றி விளக்கி அந்த எண்ணத்தை மாற்றிய உங்களை ‘விசில்’ அடித்து பாராட்டுகிறோம்!
- கே.செல்லத்துரை, சாத்தூர்.

‘ஜெ’யில்... தலைப்பிலேயே குறும்பு கொப்பளித்ததென்றால், பரப்பன அக்ரஹார பற்றி சுடச்சுட தந்திருந்த தகவல்களில் அனல் பறந்தது!
- அ.யாழினி பர்வதம், சென்னை.

காசைக் கொட்டி வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுதான். இதைத் தவிர்க்க இந்தியா வில் மருத்துவப் படிப்புக் கட்டணத்தை மலிவாக்கலாமே... செய்வார்களா?
- செ.செந்தமிழன், சேலம்.

எட்டு வயதில் சுற்றுச்சூழல் அமைப்பு துவங்கி, ‘கிரீன் குளோப்’ விருது பெற்றிருக்கும் ஷார்ஜா - தமிழ்ப் பையன் ஹுமைத் ஹபீப் வியக்க வைத்துவிட்டான். நம் பிரதமர் இங்கு செய்யச் சொல்வதை ஹபீப் அங்கு செய்வது பெருமைக்குரியதே!
- எஸ்.சந்தியா சிவம், மதுராந்தகம்.